Published:Updated:

சூர்யா-கார்த்தி கூட்டணி எப்போது?

சூர்யா-கார்த்தி கூட்டணி எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
சூர்யா-கார்த்தி கூட்டணி எப்போது?

சிங்கம் சொல்லும் சீக்ரெட்ஸ்ம.கா.செந்தில்குமார்

சூர்யா-கார்த்தி கூட்டணி எப்போது?

சிங்கம் சொல்லும் சீக்ரெட்ஸ்ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
சூர்யா-கார்த்தி கூட்டணி எப்போது?
பிரீமியம் ஸ்டோரி
சூர்யா-கார்த்தி கூட்டணி எப்போது?
சூர்யா-கார்த்தி கூட்டணி எப்போது?

‘‘ ‘ஏழாம் அறிவு’க்காகப் பேசிட்டோம், ரெடியாகிட்டோம். அப்ப, ‘உனக்கு அவ்வளவு மார்க்கெட் இருக்கா...உன்னால பண்ண முடியுமா?’னு பலருக்கும் சந்தேகம். அந்த நேரத்துலதான் ‘சிங்கம்’ ரிலீஸ். என் மார்க்கெட், பட்ஜெட்டைத் தாண்டியும் லாபம் எடுக்க முடியும்னு வணிகரீதியா மிகப்பெரிய வெளிச்சம் பாய்ச்சிய படம் `சிங்கம்'. ஆனா, அதன் அடுத்தடுத்த பார்ட் பண்ணுவோம்னு அப்ப நினைச்சுக்கூடப் பார்க்கலை. ஆனா, இது நடந்ததுக்கு எல்லாம் ஒரே காரணம் ஹரி சார்’’ -  தொடங்கும்போதே ஒன்றரை டன் வெயிட்டில் ஓங்கி அடிக்கிறார் சூர்யா. ‘சிங்கம்-3’ ரிலீஸ், விக்னேஷ் சிவனுடன் அடுத்த பட ஷூட்டிங், செல்வராகவனுடன் புதுப்பட கமிட்மென்ட்... வரும் புத்தாண்டு, சூர்யாவுக்கானது.

‘‘ஒரே இயக்குநருடன் சேர்ந்து அடுத்தடுத்துப் பயணப்படுவது சினிமாவில் ரொம்ப லக்கியான விஷயம். அதுவும் அந்தப் பயணங்கள் அனைத்தும் வெற்றிகரமா அமைவது அதைவிட அதிர்ஷ்டம்.
‘ஜி, நீங்க அழுதாக்கூட நான் உங்களை லோ ஆங்கிள்லதான் எடுப்பேன். கேமராவை ஹைலெவல்ல வெச்சு எடுக்க மாட்டேன். என் ஹீரோ இப்படித்தான் இருக்கணும்’னு என்னை எப்பவுமே திரையில் அடுத்த கட்டமாத்தான் காட்ட விரும்புவார். எல்லாருக்கும் ஹிட் தேவைப்படும். அதுவும், ‘இந்தச் சமயத்துல ஒரு ஹிட் கிடைச்சா, நல்லா இருக்கும்’னு நினைப்போம். அந்தச் சமயத்தில் எல்லாம் ஹரி சார் எனக்குப் பண்ணின படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களா அமைஞ்சிருக்கு.’’

‘‘ `சிங்கம்-III' பண்ணணும்னு எப்ப முடிவுபண்ணுனீங்க?’’

‘‘ ‘ரெண்டு பார்ட் முடிச்சாச்சு. அடுத்த பார்ட் வேணாம். வேற ஒரு படம் பண்ணுவோம்’னு பேச ஆரம்பிச்சு கிராமத்தை மையப்படுத்தின ஒரு ஸ்க்ரிப்ட்டை ஃபைனல் பண்ணினோம். ‘சிங்கம்’ல இருந்த பவர், ஃபோர்ஸ், என்டர்டெயின்மென்ட் எல்லாம் அதில் வேறு ஒரு ஃப்ரெஷ் கலர்ல இருக்கும். ஒருநாள் ரொம்ப யோசனையா வந்தவர், ‘ஜி, நானும் உங்ககிட்ட சொல்ல வேணாம்னுதான் நினைச்சேன். வெளியே எங்கே போனாலும்

` ‘சிங்கம்-3’தானே’னு கேக்குறாங்க. என்ன பண்றதுனு தெரியலை’னார். ‘அஞ்சாறு வருஷங்களுக்குப் பிறகுதானே ‘சிங்கம்-3’ பண்ணணும்னு பேசியிருந்தோம்’னேன். ‘ஆனா, இப்ப ஒரு லைன் கிடைச்சிருக்கு’னார். உடனடியா அடுத்த பார்ட் வேணாம்னு இருந்த எங்களை மறுபடியும் பண்ண முடியும்னு நம்பிக்கைக்குக் கொண்டுவந்தது அந்த லைன்தான்.’’

‘‘ஒரே டீமுடன் தொடர்ந்து மூணாவது படம். எப்படி இருக்கு இந்த அனுபவம்?’’

‘‘டீ பாய் தொடங்கி கேமரா உதவியாளர்கள் வரை ஒருத்தரும் மாறலை, அதே டீம்தான். ஒவ்வொருத்தரையும் எனக்கு பெர்சனலா தெரியும். எந்த மீட்டர்ல யாருக்கு என்ன மாதிரி வொர்க் பண்ணணும்னு புரிஞ்சவங்க. அவங்களாலதான் இவ்வளவு பெரிய படத்தை இவ்வளவு வேகமா முடிக்க முடிஞ்சிருக்கு. ‘நமக்கு எனர்ஜியான போலீஸ் கேரக்டர். வேகம் குறைஞ்சிடக் கூடாது’னு வேகமா ஓடிட்டிருப்பேன். ஆனா, அந்த ஸ்டெடி கேம் ஆபரேட்டர் அவ்வளவு எடையுள்ள கேமராவைத் தூக்கிக்கிட்டு படிக்கட்டுல ஏறுறது, ஓடுறதுனு என் பின்னாலயே ஓடிவருவார். அது வார்த்தைகள்ல விவரிக்க முடியாத பெரும் உழைப்பு. இந்த டீமால்தான் ‘சிங்க’த்தின் ஒவ்வொரு பாகமும் ஸ்பெஷலாகுது.’’

சூர்யா-கார்த்தி கூட்டணி எப்போது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ ‘சிங்கம்-3’ இயக்குநர் ஹரியுடன் உங்களுக்கு 5-வது படம். இந்த டிராவல் பற்றி சொல்லுங்க?’’

‘‘மார்ட்டின் ஸ்கார்ஸேஸி-லியோனார்டோ டிகாப்ரியோ மாதிரி ஹாலிவுட்ல ஒரே டைரக்டர் ஒரே ஆர்ட்டிஸ்டை வெச்சு திரும்பத் திரும்ப படங்கள் பண்ணிட்டே இருப்பாங்க. அது பெரிய விஷயம். அந்த மாதிரியான பிளெஸ்ஸிங்தான் எங்க காம்பினேஷன். ஹரி சாருக்கு சின்சியாரிட்டியைத் தவிர வேற எதுவும் தெரியாது. ‘இது இந்த ஹீரோவுக்காகப் பண்றோம். இது C சென்டர்களுக்காகப் பண்றோம்’னு எந்தப் பாகுபாடும் அவர்கிட்ட கிடையாது. ‘இது மக்களுக்காகப் பண்றோம். `சிங்கம்' ரசிகர்களுக்காகப் பண்றோம்’னு நினைச்சுப் பண்ணுவார். தலைமுறை இடைவெளி இல்லாம இருப்பதுதான் அவரின் பலம். சமயத்துல போன் பண்ணினா, ‘ஊர்ல ஒரு கும்பாபிஷேகம். குடும்பத்தோடு போயிட்டிருக்கேன்’ம்பார். வேறு ஒரு முறை, ‘மூணு நாள் இடைவெளி கிடைச்சது. சுவிட்ஸர்லாந்து வந்திருக்கேன். பையனுக்கு ஸ்நோ ஸ்கேட்டிங் கத்துக்கொடுத்துட்டு இருக்கேன்’ம்பார். ‘இவருக்குத் தெரியாத விஷயங்களே இல்லையா!’னு வியக்கவைப்பார். ஆனாலும் அதே அமைதி, அதே அடக்கம். அதுதான் ஹரி சார்.’’

‘‘அனுஷ்கா உடன் தொடர்ந்து மூணாவது படம். என்ன சொல்றாங்க?’’

‘‘ஹரி சாரை வெட்கப்படவைக்கிற ஒரே ஹீரோயின் அனுஷ்கா. ‘பாகுபலி’ பண்ணிட்டி ருக்காங்க. நம்ம வீட்டு விசேஷம்னா விழுந்தடிச்சு  வருவோம்ல, அந்த மாதிரி ‘பாகுபலி’க்கு நடுவுல தேதிப் பிரச்னைகள் இருந்தாலும் எங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடம்பு இளைச்சு வந்தாங்க. ‘ஹரி சார் என்ன பண்ணினாலும் சரியா இருக்கும்’கிற அந்தக் கண்மூடித்தனமான நம்பிக்கையோடு வந்து பண்ணிக்கொடுத்துட்டுப் போனாங்க.’’

‘‘ஸ்ருதிஹாசனின் முதல் ஹீரோ நீங்க. இப்ப மறுபடியும் உங்க படத்தில் ஸ்ருதி. அவங்களோட வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘தமிழ், தெலுங்கு, இந்தினு பறந்துட்டே இருக்காங்க. அதேசமயம் அவங்க எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணி அவ்வளவு அழகா நடிச்சிட்டி ருக்காங்க. இதுக்கு இடையில் லண்டன் போய் ஆக்ட்டிங் கோர்ஸ் படிக்கிறாங்க. அங்கேயே மியூஸிக் ஆல்பம் புரொடியூஸ் பண்றாங்க. நாம வெறும் தமிழ்நாட்டை மட்டும் பார்த்துட்டு இருக்கோம். அவங்க இன்னும் ஒரு பெரிய உலகத்தைப் பார்க்கிறாங்க. அவங்க உழைப்பு, இன்னும் பல உயரங்களுக்கு அவங்களை அழைச்சிட்டுப்போகும்.’’

சூர்யா-கார்த்தி கூட்டணி எப்போது?

‘‘இப்படி வெவ்வேற காம்பினேஷன் பண்றீங்க. ஆனா சிங்கமும் சிறுத்தையும் சேரணும்கிற மாதிரியான ஒரு கதைகூடவா இன்னும் வரலை?’’

‘‘நானும் கார்த்தியும் இங்கேதானே இருக்கோம். இன்னும் கொஞ்ச நாள்ல ஒரே வீட்லதான் இருக்கப்போறோம். ஆமா, தி.நகர்ல ரொம்ப நாளா கட்டிட்டிருக்கிற வீட்டு வேலைகள் முடிஞ்ச பிறகு ஒண்ணா இருக்கணும்னு காத்திருக்கோம். இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறதுல எந்தத் தயக்கமும் இல்லை. ஆனா, ‘இதை நாம தவிர்க்கவே முடியாது. விட்றவே கூடாது. இதைப் பண்ணியே ஆகணும்’கிற மாதிரியான ஸ்க்ரிப்ட் வரும்போது பண்ணினாதான், அந்தப் படம் நல்லா இருக்கும். அப்படியான ஸ்க்ரிப்ட் வந்தா, நிச்சயமா சேர்ந்து பண்ணுவோம்.’’

‘‘பசங்க என்னென்ன விஷயங்கள்ல ஆர்வமா இருக்காங்க?’’

‘‘தியா, தேவ் இரண்டு பேரும் எங்கே போனாலும் சமர்த்து சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வந்துடுறாங்க. பையனுக்கு அப்பா மாதிரி ஓவியம் பிடிக்குது. திடீர்னு புலி, சிங்கம்னு வரைஞ்சு சர்ப்ரைஸ் கொடுப்பான். பொண்ணுக்கு, அப்பா மாதிரியே மெமரி பவர்.

ஜோ பஞ்சாபிங்கிறதால அவங்க ஃபேமிலிகிட்ட இருந்து எப்பவும் கலகலனு சிரிச்சுட்டு சந்தோஷமா இருக்கிறதும் பசங்ககிட்ட கலந்து இருக்கு.’’