Published:Updated:

சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பிட்ஸ்

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

சினிமா பிட்ஸ்

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

Published:Updated:
சினிமா பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பிட்ஸ்
சினிமா பிட்ஸ்

அம்மா தன்ஷிகா...

``இரட்டைப் பெண் குழந்தைகளுடன் மலேசியாவில் வசிக்கிறார் தன்ஷிகா. எதிர்பாராத பிரச்னைகளால் குழந்தைகளோடு அங்கேயே மாட்டிக்கொள்கிறார். அது என்ன பிரச்னை, மூவரும் எப்படித் தப்பினார்கள் என்பதே கதை''  - `ராணி' படத்துக்கு எளிமையான அறிமுகம் கொடுக்கிறார் படத்தின் இயக்குநர் பாணி.

``குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு ராணி மாதிரி அதிரடி முடிவு எடுக்கிறதால படத்துக்கு `ராணி'னு தலைப்பு வெச்சிருக்கோம். நாலு ஹீரோயின்கள்கிட்ட கதை சொன்னேன். `கதை நல்லாயிருக்கு. ஆனா, இப்பவே அம்மாவா நடிக்கணுமா?'னு தயங்கினாங்க. கடைசியா தன்ஷிகாவிடம் அந்த கேரக்டரைப் பற்றி சொன்னேன். இமேஜ் பற்றி யோசிக்காமல் உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. பிரமாதமா நடிச்சிருக்காங்க. என் நண்பர்
சி.முத்துகிருஷ்ணன்தான் தயாரிப்பாளர்.

இளையராஜா சார்தான் படத்துக்கு இசை. இந்த வருட ஹிட் லிஸ்ட்ல படத்தின் பாடல்கள் நிச்சயம் இடம்பிடிக்கும். `சொன்ன மாதிரியே படத்தை எடுத்துட்ட... சூப்பர்!'னு இளையராஜா சார் பாராட்டியதை மறக்கவே முடியாது''

- நெகிழ்கிறார் இயக்குநர் பாணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமா பிட்ஸ்

``கமல் சார் பாராட்டினார்!''

``எல்லாரும் படத்துக்குள்ளதான் குறியீடு வைப்பாங்க. நான் படத்தின் தலைப்பிலேயே குறியீடு வெச்சிருக்கேன். இந்தப் படம் முழுக்க டிராவல் ஆகும் ஒரு கேரக்டர் இந்தக் `குரங்கு பொம்மை'. அதுதான் படத்தின் தலைப்பும்'' எனும் இயக்குநர் நிதிலன், குறும்படத் துறையில் தடம் பதித்தவர். ``நாளைய இயக்குநர் சீஸன் 3-ல் `புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்'கிற என் குறும்படம் டைட்டில் ஜெயிச்சது. கமல் சார்கூட அந்தப் குறும்படத்தைப் பாராட்டிப் பேசினார். அந்தக் குறும்படம் பார்த்துட்டுப் பாராட்டுறதுக்காக நடிகர் விதார்த் எனக்கு கால் பண்ணிப் பேசினார். பாராட்டுக்காக வந்த போன் கால், என்னை சினிமா இயக்குநரா மாத்திடுச்சு.

படத்தில் விதார்த்தின் அப்பாவாக பாரதிராஜா சார் நடிச்சிருக்கார். ஹீரோயினா டெல்னா அறிமுகம் ஆகுறாங்க.

ஸ்ரேயாஸ்ரீ தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி சொல்லணும். வழக்கமா ஒரு புது இயக்குநர்னா, தயாரிப்புத் தரப்புல இருந்து சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனா, எனக்கு அந்த மாதிரி எந்தக் கட்டுப்பாடும் இல்லாம சுதந்திரமா இயங்க அனுமதிச்சாங்க. முதல் படத்திலேயே இப்படி ஒரு சுதந்திரம் கிடைக்கிறது பெரிய விஷயம். படம் பேசும்'' - நம்பிக்கையோடு பேசுகிறார் நிதிலன்.

சினிமா பிட்ஸ்

ரோல்மாடல் யாரு?

``வாழ்க்கையில் யாரை, எதை முன்னோடியா எடுத்துக்கிறோம் என்பதுதான் `முன்னோடி' படத்தின் கதை'' - தலைப்புக்கு விளக்கம் சொல்கிறார் இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார். 

``நாம் பின்பற்றும் ரோல்மாடல் நல்லவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவே தவறா இருந்தா எப்படி மாறும் என்பதுதான் கதை. இதை, பக்கா கமர்ஷியல் பேக்கேஜ்ல தெறிக்கும் ஆக்‌ஷனோடு சொல்லியிருக்கோம். தெலுங்குல சில படங்கள் நடித்த `ஹரிஸ்' என்பவர் ஹீரோ. புதுமுகம் யாமினி பாஸ்கர் ஹீரோயின். `புதுப்புது அர்த்தங்கள்' படத்தில் நடித்த சித்தாரா அம்மா கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு செம பவர்ஃபுல் கேரக்டர்.

என் தம்பி எஸ்.பி.டி.ஏ.ராஜசேகரும், சோஹம் அகர்வாலும் சேர்ந்து தயாரிச்சு இருக்காங்க. உங்களுக்கான முன்னோடி யார்னு இந்தப் படம் உணரவைக்கும்'' தம்ஸ்அப் காட்டுகிறார் குமார். 

சினிமா பிட்ஸ்

காதலை எப்படிக் கையாளணும்?!

`` `செஞ்சுட்டாளே என் காதல!' நிச்சயமா பொண்ணுங்களைக் கிண்டல் பண்ற படம்  இல்லைங்க'' இயல்பாகப் பேசத் தொடங்குகிறார் அறிமுக இயக்குநர் எழில்.

``எனக்கு நடிக்கிறதில் ரொம்ப ஆர்வம். ஐம்பது குறும்படங்களுக்கும் மேல நடிச்சேன். நானே ஒரு கதை எழுதி, நடிச்சு, இயக்கின குறும்படம்தான் `சுமோ'. அதுக்குப் பிறகு நடிப்பில் இருந்த ஆர்வம் அப்படியே டைரக்‌ஷன் மேல் திரும்பிடுச்சு. தயாரிப்பாளர் பாலசுப்ரமணியெம் சாரைச் சந்தித்து ஒரு கதை சொன்னேன். ஆனா, `சுமோ' படத்தையே நடிச்சு இயக்கு'னு சொன்னார். நடிப்பு ப்ளஸ் இயக்கம்னு நான் ஆசைப்பட்ட ரெண்டுமே அமைஞ்சதும் சந்தோஷமா படம் பண்ணிட்டேன்.

காதல்  தோல்வியை, பசங்களும்  பொண்ணுங்களும் எப்படிக் கையாளணும்கிறதுதான் படம். அதை அட்வைஸா சொல்லாம, இயல்பா சொல்லியிருக்கோம். `நாடோடிகள்' அபிநயா, `ஆபீஸ்' சீரியல்ல நடிச்ச மதுமிலா, மைம் கோபி, அஜய்ரத்னம்னு நிறையப் பேர் நடிச்சிருக்காங்க. ஸ்டன்ட் மாஸ்டர் ஹரி கணேஷ் தவிர, டெக்னிக்கல் டீம்ல எல்லாரும் புதுசு'' என்கிறார் எழில்.