Published:Updated:

சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பிட்ஸ்

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

சினிமா பிட்ஸ்

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

Published:Updated:
சினிமா பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பிட்ஸ்
சினிமா பிட்ஸ்

``சென்சார் போர்டு பாராட்டியது!’'

``ஒரு தேநீருக்காக கோயம்புத்தூர்ல இருந்து ஊட்டி வரை சின்ன டிரைவ் போயிட்டு வந்தா எப்படி சுவாரஸ்யமா இருக்குமோ, அப்படி இருக்கும் இந்தப் படம்'' - சுருக்கமாகப் பேசுகிறார் இயக்குநர் சிவராஜ். குறும்படங்கள் வழி சினிமா பயின்றவர். இப்போது `காதல் கண் கட்டுதே' பட இயக்குநர்.

``பத்திரிகையில் வேலைபார்க்கும் தைரியமான பெண் ரிப்போர்ட்டர், மாதாமாதம் டார்கெட் முடிக்கத் திண்டாடும்  சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் பையன்... இவங்களுக்குள்ள இருக்கும் காதல். போகப் போக ரெண்டு பேருக்கும் நடுவுல ஈகோ முளைக்குது. இதைச் சமாளித்து காதலில் சேர்ந்தாங்களா, இல்லையா... என்பதே கதை.

ஹீரோ கேஜி, ஹீரோயின் அத்துல்யா தொடங்கி டெக்னீஷியன்கள் வரை எல்லோருமே புதுமுகங்கள். கோயம்புத்தூர்லேயே ஆபீஸ் போட்டு, அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர்களே வேலைபார்த்த படம் இது. நான் குறும்படம் எடுத்தப்ப எனக்கு சப்போர்ட்டா இருந்த நண்பர் தேவாதான் தயாரிப்பாளர். இவர் ஒரு விவசாயி. `ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு இருக்கு. கோயம்புத்தூரை இவ்வளவு அழகா காட்டியது இல்லை'னு சென்சார் போர்டு பாராட்டியது. படம் பார்க்கிறவங்களும் பாராட்டுவாங்கனு நம்புறேன்’’ என்கிறார் சிவராஜ்.

சினிமா பிட்ஸ்

சைக்கோ தேவை

``ப்ளஸ் டூ படிச்சு மாநில அளவில் முதல் மார்க் எடுத்த தங்கையை, உயர்கல்வி படிக்க அனுமதிக்க மாட்டான் அண்ணன். பெண்கள்மீது நடக்கும் பாலியல் கொடுமைகள், கொலைச் சம்பவங்கள்தான் இதுக்குக் காரணம். இப்படி எந்தச் செய்தியையும் கடந்து வர முடியாமல், தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு எதுவும் தப்பா நடந்திடுமோன்னு பயப்படுறவனை இந்த உலகம் சைக்கோன்னு சொல்லும். அந்த மாதிரியான சைக்கோதான் ‘சைவ கோமாளி’ படத்தின் ஹீரோ'' என்கிறார் இயக்குநர் சுரேஷ் சீதாராம். 17 வருட சினிமா அனுபவம்கொண்டவர். `கில்லி', `வேட்டைக்காரன்' போன்ற பல விஜய் படங்களின் உதவி இயக்குநர். ``ஆம்புலன்ஸ் ஓட்டுநராக கதையின் நாயகன் ரஞ்சித் நடிச்சிருக்கார். ஆம்புலன்ஸில் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் மருத்துவராக ரஹேனா நடிச்சிருக்காங்க. படத்தில் சொல்ற விஷயங்கள் நெகிழ்ச்சியாக இருந்தாலும், பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். என் பதினேழு வருட சினிமா அனுபவத்தைவைத்து வேறு ஜானர்ல படம் பண்ணியிருக்க முடியும். ஆனா, மனசு வரலை. பெண்களுக்கு எதிரான செய்திகளை என்னால் `ஜஸ்ட் லைக் தட்'னு கடக்க முடியலை. என் சினிமாவில் இதைக் காட்டணும்னு நினைச்சேன். மக்கள்தான் பார்த்துட்டுத் தீர்ப்பு சொல்லணும்’’ -அக்கறையாகப் பேசுகிறார் சுரேஷ் சீதாராம்.

சினிமா பிட்ஸ்

``பாக்யராஜ் சார்தான் லவ் குரு.''

``கமல் சார் மேல எனக்குப் பெரிய ப்ரியம். அதனாலதான் `இவன் யாரென்று தெரிகிறதா'னு படத்துக்குத் தலைப்பு வெச்சிருக்கேன். காதலர் தினத்தில் பிறந்தவனுக்கு ரொம்ப வருஷமா காதல் அமையலை. அவனுக்குக் காதலி கிடைச்சாங்களா... இல்லையா... என்பதுதான் படத்தின் ஒன் லைன்'' என அறிமுகம் கொடுக்கிறார் இயக்குநர் சுரேஷ் குமார்.

`` `இவன் யாரென்று தெரிகிறதா’ படக் கதை பற்றி என் அண்ணன், ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்போ உடனே நாங்களே தயாரிக்கிறோம்னு சொல்லி முன்வந்தாங்க. `ஆபீஸ்’ சீரியல்ல நடிச்ச விஷ்ணு, `வெற்றிவேல்' படத்தில் நடிச்ச வர்ஷா, `சதுரங்கவேட்டை'யில நடிச்ச இஷாரா நடிச்சிருக்காங்க. எனக்கு பாக்யராஜ் சார்தான் இன்ஸ்ப்ரேஷன். அவர் இந்தப் படத்தில், `லவ் குரு'னு ஒரு கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கார். குடும்பத்தோடு பார்க்கும்படி செம ரொமான்டிக் காமெடி படமா இது இருக்கும்'' என்கிறார் சுரேஷ் குமார்.

சினிமா பிட்ஸ்

``கண்கள்தான் பேசுபொருள்.''

`` `அதே கண்கள்'னு படத்துக்கு ஏன் தலைப்பு வெச்சோம்னா... கண்கள்தான் இந்தப் படத்தின் பேசுபொருள். அதனாலதான் ‘அதே கண்கள்’ என்கிற கிளாசிக் டைட்டிலை முறைப்படி அனுமதி வாங்கி படத்துக்கு வெச்சிருக்கோம்'' என்கிறார் அறிமுக இயக்குநர் ரோகின் வெங்கடேசன். இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் சினிமா கற்றவர்.

`` `மெட்ராஸ்' கலையரசன்தான் ஹீரோ. அவருக்கு பார்வையற்ற செஃப் கேரக்டர். ஜனனி, ஷிவிதான்னு ரெண்டு ஹீரோயின்கள். படத்தில் காதலைத் தாண்டியும் பல விஷயங்கள் பேசியிருக்கோம். அமெரிக்காவில் கிறிஸ்டைன் ஹா என்கிற கண்பார்வையற்ற ஒரு பெண் செஃப் இருக்காங்க. `மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி மூலமா அவங்க அங்கே ரொம்பப் பிரபலம். அவங்கதான் என் ஹீரோவுக்கு முன்மாதிரி. டீஸரை கிறிஸ்டைன் ஹா பார்த்துட்டு, `அதே கண்கள்’ படத் திரையிடலில் கலந்துக்க விரும்புறதா ட்வீட் பண்ணியிருக்காங்க.

ஜிப்ரான்தான் படத்துக்கு இசை. பாடல்களை பார்வதியும் உமாதேவியும் எழுதியிருக்காங்க. படத்தைத் தயாரிக்கும் சி.வி.குமார் சார், `பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க முடியுமா?’னு கேட்டார். `முடியும்’னு சொன்னேன். அடுத்த நாளே அக்ரிமென்ட் போட்டு வேலையை ஆரம்பிச்சிட்டோம். இனி மக்கள்தான் படம் பார்த்துட்டுச் சொல்லணும்’’ என்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன்.