Published:Updated:

“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”

“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”

ஆர்.வைதேகி

“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”

ஆர்.வைதேகி

Published:Updated:
“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”

மிஸ் இந்தியா எமிரேட்ஸ், ஃபிட்னஸ் பயிற்சியாளர், தற்காப்புக் கலைஞர், ஓவியர், ஹெச்ஆர் பட்டதாரி, இப்போது நடிகை... என நிவேதா பெத்துராஜின் புரொஃபைல் நிஜமாகவே செம அழகு!

`அடியே... அழகே..' என உருகவைத்தவர், இப்போது உதயநிதி ஸ்டாலினுடன் `பொதுவாக என் மனசு தங்கம்', ஜெயம் ரவியுடன் `டிக் டிக் டிக்' என பிஸி. 

“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”

``மதுரைப் பொண்ணு, எமிரேட்ஸ்ல எப்படி மிஸ் இந்தியா பட்டம்?''

``என் அப்பா பெத்துராஜ், இன்ஜினீயர். அப்பாவோட வேலை காரணமா, சின்ன வயசுலேயே மதுரையில் இருந்து துபாய்க்குப் போயிட்டோம். அங்கேதான் ஸ்கூல் படிச்சேன். என் ஃப்ரெண்ட் திடீர்னு ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப்போய், `முதல் மாடிக்குப் போ. அங்கே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு'னு சொல்லி அனுப்பினார். போய்ப் பார்த்தா, அங்கே மிஸ் இந்தியா ஆடிஷன் நடந்துட்டிருந்தது.

`ஃபெமினா மிஸ் இந்தியா' போட்டியில் கலந்துக்கணும்னு ஆசை இருந்தது. பிகினி உடைக்காகவே அதை வேணாம்னு முடிவுபண்ணினேன். ஆனா, இது துபாய்ல நடக்கிற மிஸ் இந்தியா. அங்கே உடம்பு தெரியுற மாதிரி டிரெஸ் பண்ண முடியாது. அதனால் ரொம்ப தைரியமா கலந்துக்கிட்டேன். டைட்டில் ஜெயிச்ச அந்தத் தருணம், வாழ்க்கையில் மறக்கவே முடியாது.''

“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”

``மாடலிங் டு சினிமாவா?''

``மிஸ் இந்தியாவுக்குப் பிறகு எனக்கு மாடலிங் ஆர்வம் போயிடுச்சு. ஒரே மாதிரி டிரெஸ் பண்றதும் போஸ் கொடுக்கிறதும் அலுத்துப்போச்சு. அப்பதான் ஈராஸ் இன்டர்நேஷனலோட `பொன்னியின் செல்வன்' நாடகத்துல நந்தினி கேரக்டரில் நடிக்கத் தேர்வானேன். அதுவரைக்கும் நான் `பொன்னியின் செல்வன்' படிச்சது இல்லை. ரொம்ப காலத்துக்குப் பிறகு தமிழ் படிச்சேன். நந்தினி கேரக்டர் எவ்வளவு பவர்ஃபுல்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, ஏதோ காரணத்தால் அந்த புராஜெக்ட் நின்னுடுச்சு. அன்னிக்கு, காஸ்ட்யூம் டிசைனர் ஜெயாவைச் சந்திச்சேன். அவங்கதான் `ஒருநாள் கூத்து' படத்துக்கு ஹீரோயின் தேடிட்டிருக்கிற விஷயத்தைச் சொல்லி, `நீ அந்த கேரக்டருக்குப் பொருத்தமா இருப்பே'னு அனுப்பினாங்க. செலெக்ட் ஆகிட்டேன்.''

``தமிழ் சினிமா அனுபவம் எப்படி இருக்கு?''


``எந்த மாதிரி கதையானாலும் ஓ.கே சொல்ல மாட்டேன். அப்படி நினைச்சிருந்தா, இத்தனை நாள்ல ஏகப்பட்ட படங்களில் நடிச்சிருப்பேன். என்னோட கேரக்டருக்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் இருக்கிற மாதிரியான கதை அவசியம்.”

“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”

``நீங்க ஃபிட்னஸ் ட்ரெய்னராமே!''

``ஜுஜிட்ஸு, கிக் பாக்ஸிங், ரெஸ்ட்லிங்னு எல்லாமே தெரியும். ஜுஜிட்ஸு... கொஞ்சம் ஒரு பிரேஸிலியன் மார்ஷியல் ஆர்ட். இதைக் கத்துக்கிற பெண்ணை, யாரும் எந்தத் தொந்தரவும் பண்ணிட முடியாது. என்னைப் பற்றி தெரிஞ்ச பசங்க, `இவங்ககிட்ட தள்ளியே இருக்கணும்'னு சொல்வாங்க.”

``உங்க ஓவியங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் பரவுதே... கலை ஆர்வம் எப்படி வந்தது?''

“விஜய் ரொம்பப் பிடிக்கும்!”

``வரையறது ரொம்பப் பிடிக்கும். விண்வெளி, விண்மீன்கள், வேற்றுக்கிரகங்கள் இதெல்லாம் எனக்கு கனவுல வரும். என்னோட கனவுகள் பெரும்பாலும் ஆறு மாசத்துலயோ, ஒரு வருஷத்துலயோ நிஜத்துல நடக்கும். அப்படி இல்லைன்னா அதை எல்லாம் படத்துல பார்ப்பேன். அதை எல்லாம் எழுதி வைச்சுக்கிட்டு வரைவேன்.''

``பிடித்த ஹீரோ?''

``இளையதளபதி விஜய் ரொம்பப் பிடிக்கும்.''

``மதுரையில் பிடித்த விஷயங்கள்?''

``கோயிலும் மல்லிகைப்பூவும்.''

``அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை?''

``வாட் எ ஹெல்!''

``பிடித்த காமெடி வசனம்?''

``இட்ஸ் மீ... ஸ்நேக் பாபு!''

``பிடித்த பன்ச்?''

``நான் ஒருதடவை முடிவெடுத்துட்டா, அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.''