Published:Updated:

சைத்தான் - சினிமா விமர்சனம்

சைத்தான் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சைத்தான் - சினிமா விமர்சனம்

சைத்தான் - சினிமா விமர்சனம்

சைத்தான் - சினிமா விமர்சனம்

சைத்தான் - சினிமா விமர்சனம்

Published:Updated:
சைத்தான் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சைத்தான் - சினிமா விமர்சனம்
சைத்தான் - சினிமா விமர்சனம்

விஜய் ஆண்டனியின் தலைக்குள் கேட்கும் ஒரு குரலும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே `சைத்தான்’.

புது மாப்பிள்ளை விஜய் ஆண்டனி, ஒரு திறமையான மென்பொறியாளர். திடீரென அவருக்கு, அவருடைய குரல் இல்லாமல் இன்னொரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அந்தக் குரலால் பல பிரச்னைகள். அமானுஷ்யமான விஷயம் என்பதால், மாந்திரீகம் முதல் மனநல மருத்துவர்கள் வரை பலரிடமும் உதவி கேட்கிறார் ஹீரோ. அந்தக் குரல், அவரைத் தற்கொலைக்குத் தூண்டுகிறது; ஜெயலட்சுமியைத் தேடுகிறது. யார் அந்த ஜெயலட்சுமி, அந்தக் குரல் ஜெயலட்சுமியை என்ன செய்யத் துடிக்கிறது, குரலின் துரத்தலில் இருந்து விஜய் ஆண்டனி தப்பித்தாரா என்ற தேடலே கதை.

சைத்தான் - சினிமா விமர்சனம்

கதைத் தேர்வில் செம தெளிவு, விஜய் ஆண்டனி சைஸுக்கு ஏற்ற ஷெர்வானி. அருந்ததி நாயர் கண்கள் வழி காட்டும் உணர்ச்சிகள் எல்லாமுமே கச்சிதம். முருகதாஸ் ஐ.டி ஊழியர் என்பது எல்லாம் ஓ.கே-தான். ஆனால், `வாட் த ஹெல்’ வசனம்தான் சிரிக்கவைத்துவிடுகிறது.

சுஜாதாவின் `ஆ' நாவலை அனுமதி வாங்கி ஆங்காங்கே கலர் கோட்டிங் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. கதையையும் காலத்தையும் மனதில்வைத்து இரண்டாம் பாதியை மாற்றியிருக்கிறார். எதில் கை வைத்தாரோ, அதில் சறுக்கியதுதான் சோகம்.  இன்டர்வெல் பிளாக்கில் இறங்கி சிக்ஸ் அடித்தவர்கள்,  வில்லன் ட்விஸ்ட்டில்     கிட்டத்தட்ட டக்அவுட். இருந்தாலும், வித்தியாசமான ஓர் அனுபவத்துக்காக, நிச்சயமாக ஒரு ஹைஃபை தரலாம்.

சைத்தான் - சினிமா விமர்சனம்



இரண்டாம் பாதியில் லாஜிக்படி நினைவுகள் மட்டும்தானே விஜய் ஆண்டனிக்கு வர வேண்டும். குரல்கள் கேட்பது எப்படி? மேட்ரிமோனியல் திருமணம் என்பதால் பின்னணி தெரியாது என்பது சரி. வயதுதான் புரொஃபைல் பக்கத்தில் இருக்குமே?... இப்படிச் சில சந்தேகக் குரல்கள் கேட்டபடியே வெளியே வரவேண்டியிருக்கிறது.

பில்டப் பின்னணி இசை என்பது விஜய் ஆண்டனியின் பலமான ஏரியா. தனக்கென வரும்போது ஓவர்டைம் பார்த்துவிடுகிறார். பாடல்களும் ஹிட் ரகம்தான். பிரதீப் கலிபுரயாத்தின் கேமரா நேர்த்தி.

டெரர்தான்... ஆனால், கொஞ்சம் சைல்டிஷ் சைத்தான்!

- விகடன் விமர்சனக் குழு