Published:Updated:

சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பிட்ஸ்

பா.ஜான்ஸன்

சினிமா பிட்ஸ்

பா.ஜான்ஸன்

Published:Updated:
சினிமா பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா பிட்ஸ்
சினிமா பிட்ஸ்

‘‘பெண்களால் பெண்களுக்காக!’’

‘‘ `வாய்ப்பு கிடைக்கலைனா, நாமளே உருவாக்கிக்கணும்'னு சொல்வாங்க, அந்த மாதிரி நானே தயாரிப்பாளராகி இயக்கியிருக்கும் படம்தான் `பிரபா'. இது முழுக்க முழுக்க பெண்கள் பிரச்னைகளைப் பற்றி பேசும் படம்’’ - அழுத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் நந்தன்.

‘‘மூணு வயசுக் குழந்தைக்கு அம்மாவா நடிக்கணும்னு சொன்னதும் நிறையப் பேர் தயங்கினாங்க. ஆனா, அதை சவாலா எடுத்துக்கிட்டு நடிக்க வந்தாங்க சுவாசிகா. முழுக்கதையும் சுவாசிகா, தமிழிசைங்கிற குழந்தை நட்சத்திரத்தைச் சுற்றித்தான் நகரும். ‘உங்களுக்கு வரும் பிரச்னைகளைத் தீர்க்க, ஆண்களைத் தேடாதீங்க. உங்களுக்குள் இருக்கும் ஆற்றல், ஆண்களுக்குள் இருக்கும் ஆற்றலைவிடப் பெருசு' - இதுதான் படத்தின் பேசுபொருள். இதில் முக்கியமான ரோலில் நடிக்கும் சுவாசிகாவின் கதாபாத்திரப் பெயர்தான் `பிரபாவதி'. இதன் சுருக்கமே படத்தலைப்பு.

தலைப்பு மட்டும் இல்ல, ஸ்ரீதேவி, சபிதா போஜன்னு ரெண்டு பெண் பாடலாசிரியர்கள், ஆடை வடிவமைப்பாளர் தேன்மொழி நந்தன், பாடகி சௌமியா, இசையமைப்பாளர் ஜனனினு பாதிக்கும் மேல் படத்தில் பெண்களின் பங்களிப்புதான். மறைந்த பாடகர் பாலமுரளிகிருஷ்ணா ஐயா பாடின கடைசிப் பாடல் இந்தப் படத்தில் இருக்கிறது என்பது, எங்களுக்கான பெருமை’’ - நம்பிக்கையுடன் முடிக்கிறார் நந்தன்.

சினிமா பிட்ஸ்

‘‘தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பகை!’’

‘‘கூட்டுக் குடும்பக் கலாசாரம்தான் நம் பாரம்பர்யம். அது நம் கிராமங்களில் இருந்தும் அழிஞ்சுட்டிருக்கு. சின்னச்சின்னப் பிரச்னைகளால் உருவாகும் பகை, தலைமுறைகளைத் தாண்டி தொடர்வதால்தான் வீடு உடையுது; ஊர் ரெண்டாகுது.

ஒற்றுமைக்கு இலக்கணமா இருக்கும் ஒரு ஊரில் பாக்யராஜ் சார், பொன்வண்ணன் சார் இருவரும் நண்பர்கள். இந்த ஊருக்கு சில பிரச்னைகள் வருது. அதில் இருந்து ஊரின் ஒற்றுமையை இருவரும் எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படம்'' என்கிறார் `அய்யனார் வீதி’ படத்தின் இயக்குநர் ஜிப்ஸி ராஜ்குமார்.

`` ‘சாட்டை’ யுவன்தான் படத்தின் ஹீரோ. சாரா செஃபி, சஞ்சி மோகன்னு ரெண்டு ஹீரோயின்கள். ரொம்பப் பழகிய ஊருங்கிறதால், ராஜபாளையத்திலேயே ஷூட் பண்ணியிருக்கேன். நிஜமான ஊர்த் திருவிழா, அந்தத் திருவிழாக் கொண்டாட்டத்துக்கு நடுவில் பாட்டுனு ஷூட் பண்ண, சொந்த ஊர் எனக்கு அவ்வளவு பக்கபலம். ‘இரட்டை அர்த்த வசனம், ஆபாசம்னு எதுவுமே என் படத்தில் இருக்காது’னு என் தயாரிப்பாளர் செந்தில்வேல்கிட்ட சொன்னேன். ஊக்கப்படுத்தினதோடு அல்லாமல், முக்கியமான ஒரு கதாபாத்திரத்திலயும் அவர் நடிச்சிருக்கார். ரொம்ப அழகான, எளிமையான கிராமத்துப் படமா இது இருக்கும்’’ என்கிறார் ஜிப்ஸி ராஜ்குமார்.

சினிமா பிட்ஸ்

‘‘வில்லன் இப்ப ஹீரோவானேன்!’’

‘‘வில்லனா நடிக்க, இப்ப யாரும் என்னைக் கூப்பிடுறது இல்லை பிரதர். அதான் ஹீரோ ஆகிட்டேன். பாலா சாருடைய ஸ்பெஷலே அவர் படத்தில் நடிக்கிறவங்ககிட்ட இருந்து முழு நடிப்பையும் மிச்சமே இல்லாம வாங்கிடுவார். ‘தாரை தப்பட்டை’யிலேயே என் வில்லன் நடிப்பு மொத்தத்தையும் வாங்கிட்டார்போல’’ எனச் சிரிக்கும் ஆர்.கே.சுரேஷ், இப்போது ‘தனிமுகம்’ படத்தின் ஹீரோ. அறிமுக இயக்குநர் சஜித் தயாரித்து இயக்குகிறார்.

‘‘ ‘எல்லாம் அவன் செயல்’ பட இயக்குநர் ஷாஜி கைலாஷிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சஜித். ‘தர்மதுரை’ பட நிகழ்ச்சியில் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னார். எனக்குப் பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு. டூயல் ரோல். ஒரு ரோல் போலீஸ், இன்னொரு ரோல் என்னன்னு கேட்காதீங்க. அது சஸ்பென்ஸ். ஹீரோயின் இருக்காங்க. ஆனாலும் இதில் எனக்கு ரொமான்ஸ் கிடையாது. ஒரு சூப்பர் த்ரில்லர் படம். ஹீரோனு சொன்னதும், ‘சூப்பர்டா நல்லா பண்ணு’னு சொன்னது நண்பர்கள் விஷால், சசிகுமார்தான். இவங்களோட சப்போர்ட்லதான் தயாரிப்பாளர், வில்லன், ஹீரோனு என் டிராவல் தொடருது’’ என நெகிழ்கிறார் ஆர்.கே.சுரேஷ்.