Published:Updated:

“ `தல' ஓ.கே சொல்லிட்டார்!”

“ `தல' ஓ.கே சொல்லிட்டார்!”
பிரீமியம் ஸ்டோரி
“ `தல' ஓ.கே சொல்லிட்டார்!”

ஆர்.வைதேகி - படம்: பா.காளிமுத்து

“ `தல' ஓ.கே சொல்லிட்டார்!”

ஆர்.வைதேகி - படம்: பா.காளிமுத்து

Published:Updated:
“ `தல' ஓ.கே சொல்லிட்டார்!”
பிரீமியம் ஸ்டோரி
“ `தல' ஓ.கே சொல்லிட்டார்!”
“ `தல' ஓ.கே சொல்லிட்டார்!”

``அஜித் சாருக்கு டிரெஸ் டிசைன் பண்ணும்போது​கூட நான் அவ்ளோ பயப்படலை. சிம்புவுக்குப் பண்ணப்போறோம்னதும் பயந்தேன். ஆனா, சிம்பு செம கூல். என்ன கொடுத்தேனோ, அதை அப்படியே போட்டுக்கிட்டார்'' - உற்சாகமாகப் பேசுகிறார் உத்தாரா மேனன். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் தங்கை. `என்னை அறிந்தால்', `அச்சம் என்பது மடமையடா', `என்னை நோக்கிப் பாயும் தோட்டா' என கெளதம் மேனனின் சமீபத்திய படங்களுக்கு உத்தாராதான் காஸ்ட்யூம் டிசைனர்.

``ஸ்கூல் படித்த காலத்தில் இருந்தே நிறைய மாடலிங் பண்ணியிருக்கேன். படிப்பை முடிச்சதும் என் ஃப்ரெண்ட்கூட சேர்ந்து காஸ்ட்டிங் கோஆர்டினேஷன் கம்பெனி ஆரம்பிச்சேன். என் கணவர் ரகு முத்தையா, விளம்பரப் பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். அவரோட விளம்பரங்களுக்கு நான்தான் காஸ்ட்யூம்ஸ் டிசைன் பண்ணுவேன்.

கெளதம்கூட ரெண்டு விளம்பரங்களுக்கு வொர்க் பண்ணினதும், `படத்துக்குப் பண்றியா?'னு கேட்டார்.

முதல்ல ஆரம்பிச்ச படம் `அச்சம் என்பது மடமையடா'. ஆனா, அது கொஞ்சம் தாமதமானதால் அதை நிறுத்திட்டு, `என்னை அறிந்தால்' ஆரம்பிச்சோம். அதுவே என் முதல் படமாகிருச்சு.

“ `தல' ஓ.கே சொல்லிட்டார்!”

என்கிட்ட ஒரு கேரக்டரைச் சொன்னீங்கன்னா, அவங்களுக்கு எப்படி டிரெஸ் பண்ணலாம், என்ன கலர்ஸ் செட் ஆகும்னு எல்லாம் சொல்லிடுவேன். மும்பையில் `ஸ்டைலிஸ்ட்'னு தனியா இருப்பாங்க. காஸ்ட்யூம் டிசைனிங்குக்குத் தனியா இருப்பாங்க. ஆனா, நம்ம ஊர்ல எல்லாத்தையும் ஒருத்தரேதான் பண்ணணும். ஸ்டைலிங்னு வரும்போது உடைகள் மட்டும் இல்லாம வீடு, வீட்டுக்குள்ள இன்டீரியர், ஃபர்னிச்சர்னு எல்லாமே அடக்கம். என்னை நான் ஸ்டைலிஸ்ட்டா அடையாளப் படுத்துவதைத்தான் விரும்புறேன்'' எனப் புதுத் தகவல் தருகிறார் உத்தாரா மேனன். `மனம்' என்கிற தெலுங்குப் படத்துக்கு ராஜீவன் போட்ட வீடு செட்டுக்கு, மொத்த இன்டீரியரும் உத்தாராதான்.

``அஜித் ஸ்டைலிஷ் ஹீரோ. அவருக்கு ஸ்டைலிஸ்ட்டா இருந்த அனுபவம் சொல்லுங்க?''

`` `என்னை அறிந்தால்' படம். டிரெஸ் ட்ரையல் பார்க்கிறதுக்காக அஜித் வீட்டுக்குப் போனேன். நான் பண்ணினது அவருக்குப் பிடிக்குமாங்கிற டென்ஷனோடு வெயிட் பண்ணிட்டிருந்தேன். ஒவ்வொரு டிரெஸ்ஸையும் போட்டுக்கிட்டு, ரூமுக்குள்ள இருந்து அவர் வெளியே வரும்போது அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ், அசோசியேட்ஸ்னு எல்லாரும் அவரோட லுக்கைப் பார்த்துப் பாராட்டினாங்க. அஜித்தும் பாராட்டிப் பேசினார். `தல'யே ஓ.கே சொல்லிட்டார்'னு என் தன்னம்பிக்கை லெவல் எங்கேயோ போயிருச்சு” - சிரிப்பும் சிலிர்ப்புமாகப் பேசுகிறார் உத்தாரா மேனன்.

“ `தல' ஓ.கே சொல்லிட்டார்!”

``லோக்கல் ஹீரோவாவே பார்த்துப் பழக்கப்பட்ட தனுஷை, கெளதம் பட ஹீரோவா எப்படி மாத்தியிருக்கீங்க?''

``இந்தப் படத்துல தனுஷ், இதுவரைக்கும் யாரும் பார்க்காத கெட்டப்ல இருப்பார். சீனோஸ், டிரவுஸர்ஸ்னு நமக்குத் தெரிஞ்ச டிரெஸ்லதான் வருவார். ஆனால், தனுஷை அந்த காஸ்ட்யூம்ல பார்க்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும்.''

``ஒரு தங்கையாக கெளதம் மேனனின் வொர்க்கிங் ஸ்டைலை எப்படிப் பார்க்கிறீங்க?''

``ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு வாரம் முன்னாடிதான் காஸ்ட்யூம்ஸ் பற்றி டிஸ்கஸ் பண்ணுவார். ஸ்பாட்டுக்குப் போனா `ஹாய்', `ஹலோ' சொல்லி ஹக் பண்றதோடு சரி. அண்ணனோட படங்கள்ல வொர்க் பண்றது ஸ்பெஷலாகவும் சேஃபாகவும் இருக்கு. கல்யாணத்துக்குப் பிறகு கெளதமை ரொம்பவே மிஸ்பண்ணிட்டிருந்தேன். இப்போ அடுத்தடுத்து அவர் படங்கள்... கூடவே இருக்கேன். சந்தோஷமா இருக்கு.''