Published:Updated:

நாம எல்லாருமே கூட்டத்தில் ஒருத்தன்தான்!

நாம எல்லாருமே கூட்டத்தில் ஒருத்தன்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாம எல்லாருமே கூட்டத்தில் ஒருத்தன்தான்!

பரிசல் கிருஷ்ணா

நாம எல்லாருமே கூட்டத்தில் ஒருத்தன்தான்!

த்திரிகையாளர் டு இயக்குநர் பட்டியலில் புதுவரவு த.செ.ஞானவேல். `தோனி' படத்தில் உதவி இயக்குநர் மற்றும் வசனகர்த்தா, `பயணம்' படத்தின் வசனகர்த்தா என சினிமா கற்றவரின் இயக்கத்தில் முதல் படம், ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ரிலீஸுக்கு ரெடி.

நாம எல்லாருமே கூட்டத்தில் ஒருத்தன்தான்!



“ `கூட்டத்தில் ஒருத்தன்' தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுதே?”

“ஒரு வகுப்பில் இருக்கிற அறுபது பேர்ல, முதல் பெஞ்ச்ல பத்து பேர், கடைசி பெஞ்ச்ல பத்து பேர்னு எடுத்துக்கிட்டா, பாக்கி நாற்பது பேர் மிடில் பெஞ்சர்ஸ்தான். அப்படி இந்த உலகமே மிடில் பெஞ்சர்ஸ்களால் நிறைந்தது.

ஒருநாள் நடிகர் கார்த்திகிட்ட பேசிட்டிருந்தப்ப, ‘நடுவுல மாட்டிக்கிட்டேன்’னு ஒரு வார்த்தையைச் சொன்னார். அப்ப தோணிச்சு. நானும் வீட்ல ரெண்டாவது பையன். நடுவுல இருக்கிற எல்லாருமே உணர்ந்த பல விஷயங்களை நானும் உணர்ந்திருக்கேன். புதுப் புத்தக வாசனையை அனுபவிச்சதே இல்லை. அண்ணனோட புக், சைக்கிள்னே எனக்கு வரும். அதுல இருந்து உருவானதுதான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை.

மிடில் பெஞ்சர்ஸ் எப்பவுமே அமைதியாவே இருப்பாங்க. `ஆயிரத்தில் ஒருத்தன்’னுதானே சொல்றோம். மீதி தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது பேர் இவங்கதானே? இவங்க பெருமைப்படவும் சில விஷயங்கள் இருக்கும்தானே. அதை இந்தப் படம் சொல்லும்.”

நாம எல்லாருமே கூட்டத்தில் ஒருத்தன்தான்!

“இதில் காதல் எப்படி உள்ளே வந்தது?”

``டாக்டரா இருந்தாலும், இன்ஜினீயரா இருந்தாலும் எல்லாத்துலயுமே மிடில் பெஞ்சர்ஸ் இருக்காங்க. டிராஃபிக் சிக்னல்ல தப்பு பண்றவனை இறங்கி அடிக்கிறவன், ஹீரோவா இருக்கலாம் அல்லது வில்லனா இருக்கலாம். அடிக்கணும்னு நெனைச்சு அங்கே நிற்கிற முக்கால்வாசிப் பேர் மிடில் பெஞ்சர்ஸ்தான். நான் பார்த்ததுல, நல்லா படிச்சவங்க பணம், பங்களானு செட்டில் ஆகியிருக்கலாம். ஆனா, வாழ்க்கையில் ஜெயிச்சு முக்கியமான பல இடங்களில் இருப்​பவர்கள் மிடில் பெஞ்சர்ஸ்தான். அவங்ககிட்ட வன்மம் இருக்காது. அவங்​களால் யாருக்கும் எந்தத் தீங்கும் நடக்காது. அவங்களுக்குள்ள காதல் இருக்கும். ஆனா, சொல்லத் தெரியாது. அரவிந்த்தும் அப்படித்தான்.”

நாம எல்லாருமே கூட்டத்தில் ஒருத்தன்தான்!

“கதை எழுதினப்பவே அஷோக் செல்வன்தான் கதாநாயகன்னு முடிவுபண்ணிட்​டீங்களா?”

“நிவின் பாலிதான் மனசுல இருந்தார். அவரிடம் கதை சொன்னேன். ஆனா, தேதி கிடைக்கலை. டெக்னீஷியன்​களில் முதலில் முடிவானது, இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா. அவரும் அஷோக் செல்வனும் நண்பர்கள். நிவாஸ், கதையை அவர்கிட்ட சொல்லி, அஷோக் என்னைக் கூப்பிட்டு ‘வேற யாரும் முடிவு ஆகலைன்னா நான் பண்றேன்'னு சொன்னார். நல்ல கதையைத் தேடிவர்ற பழக்கம் அஷோக்கிட்ட இருக்கு. `ஹேண்ட்ஸம்மா இருப்பாரே... இவரை ஆவரேஜா காட்டுறது கஷ்டம்'னு தோணுச்சு. ஆனா, போட்டோஷூட் பண்ணிப்பார்த்தப்ப சரியா இருந்தார். ப்ரியா ஆனந்த் பாசிட்டிவான படம்னாலே அதுல இருப்பாங்க. காமெடிக்கு பாலசரவணன். சமுத்திரக்கனி, நாசர், ஜான் விஜய்னு எல்லாருமே இதை அவங்க படமா நினைச்சு நடிச்சிருக்காங்க.''