Published:Updated:

“சூப்பர் ஸ்டார் ஆகணும்!”

“சூப்பர் ஸ்டார் ஆகணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“சூப்பர் ஸ்டார் ஆகணும்!”

இரா.கலைச்செல்வன், படங்கள்: கே.ராஜசேகரன்

“சூப்பர் ஸ்டார் ஆகணும்!”

இரா.கலைச்செல்வன், படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
“சூப்பர் ஸ்டார் ஆகணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“சூப்பர் ஸ்டார் ஆகணும்!”

``நடிப்பிலும் சொந்த வாழ்க்கையிலும் நான் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கேன். `அடுத்த ஜென்மத்தில் நீங்க யாராகப் பிறக்க ஆசை?’னு கேட்டா, நிச்சயம் `இதே ஹன்சிகாவாகத்தான் பிறக்கணும்’னு சொல்வேன். அந்த அளவுக்குத் திருப்தியான வாழ்க்கை'' - ஹேப்பி பேபியாகப் பேசுகிறார் ஹன்சிகா. `போகன்' படத்தில் ஹன்சிகாவோடு ஜெயம் ரவி, அர்விந்த் சுவாமி எனப் பெரிய கூட்டணி!

“சூப்பர் ஸ்டார் ஆகணும்!”

``ஜெயம் ரவி, அர்விந்த் சுவாமி... ரெண்டு பேருமே பெர்ஃபாமன்ஸில் மிரட்டுவாங்க. அவங்களை நடிப்பில் எப்படிச் சமாளிச்சீங்க?''

``ரவி எனக்கு நல்ல நண்பர். அதனால் கேஷுவலா இருந்தேன். ஆனால், அர்விந்த் சுவாமி சார்கிட்ட முதலில் பழகவே கொஞ்சம் பயமா இருந்தது. இப்போ அவரும் எனக்கு நல்ல நண்பர் ஆகிட்டார். `போகன்' படத்தின் கதை, எங்க மூணு பேரையும் சுற்றித்தான் நடக்கும். ஆனால், படத்தோட மெயின் பில்லர் என் கதாபாத்திரம்தான். எல்லாம் இருந்த ஹீரோ எதுவுமே இல்லாத ஆளாக மாறிடுறார். அவரை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவர்ற பொறுப்பு எனக்கு. அதில் என் கதாபாத்திரம் மூலம் ஒரு செம ட்விஸ்ட் நடக்கும். அதைப் பற்றி இப்போ எதுவும் சொல்ல முடியாது. ஆனால், `தனி ஒருவன்' படத்தில் இருந்த த்ரில், ப்ளஸ் `ரோமியோ ஜூலியட்’ படத்தில் பார்த்த லவ்னு `போகன்’ ஒரு டபுள் காம்போவா இருக்கும்.''

``எல்லா படங்களிலும் கமர்ஷியல் ஹீரோயினாகவே நடிக்கிறீங்களே... போரடிக்கலையா?'' 

``நிச்சயமா இல்லை. நான் இப்படி நடிக்கிறதுதான் எனக்கு மகிழ்ச்சி. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் எனக்கு ரொம்ப முக்கியம். என் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷமா ரசிக்கணும். அதே சமயம், தயாரிப்பாளர்களும் லாபம் அடையணும்.''

`` `டியர் ஜிந்தகி' படம் பார்த்தீங்களா... லவ் பிரேக்கப் டிப்ஸ் சொல்ல முடியுமா?''

``ம்ம்ம்... எல்லோருமே வாழ்க்கையில் ஒரு முறையாவது பிரேக்கப்பை அனுபவிச்சி ருப்பாங்க. அது உங்களைப் பக்குவப்படுத்தும்; தைரியப் படுத்தும். வாழ்க்கையில் மேடு, பள்ளங்கள் இருந்தால்தான் நல்லாயிருக்கும். ஒரே மாதிரி இருந்தால் போரடிச்சுடும். காதலில் தோற்பது, அந்த வலியை அனுபவிப்பது... நல்லதுதான். அதே சமயம் பாசிட்டிவ் எண்ணங்களோடு எதிர்காலத்தை நோக்கிப் போறது அவசியம். நான் அப்படித்தான்.''


``தமிழ் சினிமாவில் உங்களின் டார்கெட் என்ன?''


``தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் நானும் ஒருத்தியா இருக்கிறதே எனக்குப் பெருமைதான். ஆனால், நான் தமிழ் சினிமாவின் `லேடி சூப்பர் ஸ்டார்’ ஆகணும். அதுதான் என் டார்கெட். அதை நோக்கித்தான் என் பயணம் இருக்கும்.''

``டிசம்பர் வந்தாச்சு. 2016-ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கு?''

``நாலு படங்கள் ரிலீஸ் ஆகிடுச்சு. இன்னும் அஞ்சாறு படங்கள் வந்துடும். அடுத்த மூணு மாசத்துக்கு வீட்டுக்குக்கூடப் போக முடியாத அளவுக்கு நான் செம பிஸி. பெர்சனலா 2016-ம் ஆண்டு, எனக்கு நிறையப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்திருக்கு. எல்லாத்தையும் நான் பாசிட்டிவ்வா எடுத்துக்கிறேன். 2017-ம் ஆண்டு இதைவிட நல்லா இருக்கும்.''

``உங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத் திட்டம் என்ன?''

``எல்லா புத்தாண்டுகளுக்கும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் பறக்கிறது வழக்கம். அன்னிக்கு நான் எங்கே இருப்பேன்னு என் அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கே எனக்காக, என்னோடு மட்டுமே நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பேன். அதனால் நியூ இயர் ப்ளான் பற்றி எதுவும் சொல்ல முடியாதே!''

``அடுத்த பத்து ஆண்டுகளில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள்?''

``சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாராக இருப்பேன்; நிறையப் பணம் சம்பாதிப்பேன்; நிறையக் குழந்தைகளுக்கு உதவி செய்வேன்; முதியோர் இல்லம் ஒன்று கட்டுவேன். அப்புறம், இப்போ இருப்பதுபோலவே எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமா இருப்பேன்.''

“சூப்பர் ஸ்டார் ஆகணும்!”

``சமீபத்தில் அதிகம் முணுமுணுக்கும் பாடல்?’’

`` `போகன்’ படத்தில் கவிஞர் தாமரை எழுதிய `செந்தூரா...' ’’

``அம்மா (அ) கடவுள்?’’

“அம்மா.”

``சந்தோஷம்?’’


``என் வேலை.’’

``பயம்?’’

 ``தூங்க முடியாமல் போயிடுமோங்கிற எண்ணம்.’’

``பிடித்த வாசகம்?’’

``YOLO - you only live once.’’

``அலர்ஜி?’’

“பொய்.”

``பிடித்த இடம்?’’

“நியூயார்க்.”

``ரொட்டி (அ) இட்லி?’’

“இட்லி.”

``சாக்லேட் (அ) ஐஸ்கிரீம்?’’

“ரெண்டுமே இல்லை.”