Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: ஹாசிப்கான்

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: ஹாசிப்கான்

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

``பொண்ணு 2,000 ரூபாய் நோட்டு கலர்ல இருப்பா.’’

``நான் சொல்லலே, இந்தத் தரகர் அப்டேட்டான ஆளு!’’

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ் - 1

``ஃபேஸ்புக் வாட்ஸ்அப்... இதைவிட்டா உனக்கு வேறு எதுவுமே தெரியாதாடா?’’

``தெரியும்பா, ட்விட்டர்னு ஒண்ணு இருக்கு.’’

- தேனி எஸ்.பிரபுமதி

``இது ஜென் z நாய்.’’

``என்னடா சொல்றே?’’

``செல்ஃபி எடுத்தால் சிரிக்கும்!’’

- அஜித்

``என்னைப் பத்தின மீம்ஸ் குறைஞ்சுடுச்சே கவனிச்சியா?’’

``மீம்ஸ் கிரியேட் பண்றவங்க எல்லாரும் பணத்தை மாத்த பேங்குக்குப் போயிட்டாங்க தலைவரே, அதான்!’’

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ் - 1

``தலைவர் எப்படி இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிச்சார்?’’

`` `உழைப்பாளிகளின் சின்னம், பாட்டாளிகளின் சின்னம், விவசாயிகளின் சின்னம்'னு எல்லாம் சொல்லாம, `வேலையில்லாத இன்ஜினீயர்களின் சின்னம்'னு சொன்னார்!’’

- அஜித்