Published:Updated:

சென்னை 600028 II - சினிமா விமர்சனம்

சென்னை 600028 II - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை 600028 II - சினிமா விமர்சனம்

சென்னை 600028 II - சினிமா விமர்சனம்

சென்னை 600028 II - சினிமா விமர்சனம்

சென்னை 600028 II - சினிமா விமர்சனம்

Published:Updated:
சென்னை 600028 II - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை 600028 II - சினிமா விமர்சனம்
சென்னை 600028 II - சினிமா விமர்சனம்

.பி.எல் லோக்கலில் டி.என்.பி.எல்-ஆக  அவதாரம் எடுத்ததுபோல், சென்னை கிரிக்கெட்டை தேனிக்குக் கொண்டு போயிருக்கிறது `சென்னை 600028 -II'

ஷார்க்ஸ் டீம் உறுப்பினர்களின் இன்றைய அப்டேட்டுடன் தொடங்குகிறது படம். காணாமல்போனவர்கள் தவிர, எஞ்சி நிற்பதில் ஜெய்யும் பிரேம்ஜியும் மட்டுமே பேச்சுலர்கள். ஜெய்க்குத் திருமணம் நிச்சயமாக, அதற்காக தேனிக்குக் கிளம்புகிறது ஷார்க்ஸ் டீம். வர்தா புயலே வந்தாலும் கிரிக்கெட்டை விடாதவர்கள், திருமணத்துக்குச் சென்ற இடத்திலும் ஒரு மேட்ச் போடுகிறார்கள். அது ஜெய் திருமணத்தில் கூக்ளியாகச் சுழன்றடிக்கிறது. நின்றுபோன திருமணத்தையும் கிரிக்கெட் போட்டிதான் நடத்தும் என்ற நிலை. ஷார்க்ஸ் டீம் என்ன செய்தது, திருமணம் நடந்ததா... என்பதை சில சிக்ஸர்கள், பல சிங்கிள்கள், சில டாட் பால்களில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

சென்னை 600028 II - சினிமா விமர்சனம்

இரண்டாம் பாகத்தை இவ்வளவு லாஜிக்கலாக முதல் பாகத்தோடு தொடர்புபடுத்தியதற்காக வெங்கட் பிரபுவுவைப் பாராட்டலாம். அவ்வப்போது ரன்ரேட்டைக் குறைக்கும் திரைக்கதையில், காமெடி சேட்டைகளே காப்பாற்றுகின்றன.

நடிகர்களில் ஜெய்தான் ஸ்டார் பேட்ஸ்மேன். ஆனால், சிக்ஸர்கள் சிவாவிடம் இருந்துதான் பறக்கின்றன. புது என்ட்ரி என்றாலும் வைபவ் பக்கா வில்லன். நான்கு நாயகிகளில், விஜயலட்சுமி மட்டுமே எப்போதாவது கவனிக்கவைக்கிறார்.

சென்னை 600028 II - சினிமா விமர்சனம்


சிலபல ஏமாற்று வித்தைகளும் படத்தில் உண்டு. போங்கு செய்தே ஜெயிக்கும் வைபவ், அவ்வளவு நேர்மையாகப் போட்டி முடியும் வரை ஷார்க்ஸ் டீமை விட்டுவைப்பரா? முதல் பாகத்தில் கிரிக்கெட் அதிகம் என்றாலும், இரண்டாம் பாகத்தில் ரொம்பவே அதிகம். இவ்வளவு கலாட்டாக்களும், காதலனைக் கொஞ்சமும் நம்பாத அந்தப் பெண்ணுக்காகவா என்பதுபோல இருக்கிறது நாயகியின் கேரக்டர்.
யுவன் ஷங்கர் ராஜா `சொப்பன சுந்தரி' பாடலில் மட்டும் தெரிகிறார். கே.எல்.பிரவீனின் எடிட்டிங், க்ளைமாக்ஸ் கிரிக்கெட் போட்டியைச் சூடுகுறையாமல் பரிமாற, ராஜேஷ் யாதவ் கேமரா தேனியை அழகாகக் காட்டியிருக்கிறது.

பாய்ஸிடம் பழைய வேகம் இப்போது இல்லை. குறையாத குறும்புத்தனம்தான் காப்பாற்றுகிறது!

- விகடன் விமர்சனக் குழு