பிரீமியம் ஸ்டோரி
சினிமா பிட்ஸ்

அறைக்குள் `தாயம்'

து சிங்கிள் ரூம் த்ரில்லர்! ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ இறந்துவிட, அந்தப் பதவிக்காக இன்டர்வியூவுக்கு ஆட்கள் அழைக்கப்படுகிறார்கள். இன்டர்வியூ நடக்கும் அறைக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்புவது இல்லை அல்லது மனநலம் பாதிக்கப்படுவார்கள். காரணம், இறந்துபோன சி.இ.ஓ-வின் ஆவி. இவை எல்லாம் அறிந்தும் இன்டர்வியூவுக்கு எட்டு பேர் வருகின்றனர். சி.இ.ஓ-வின் ரூமில் ஒரு மணி நேரம் இருந்து, எந்தப் பாதிப்பும் இல்லாமல் யார் வெளியே வருகிறார்களோ, அவருக்குத்தான் அந்தப் பதவி. ஒருவேளை எட்டு பேருமே வந்தால், எட்டு பேருக்குமே பதவி என்பது கண்டிஷன். இதில் கலந்துகொள்ளும் எட்டு பேருக்கு என்ன ஆகிறது என்ற த்ரில்லர்தான் படம். இதன் இயக்குநர் கண்ணன், நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் சினிமா பயின்றவர்.

``சிங்கிள் ரூம் த்ரில்லர்னா பட்ஜெட் கம்மிங்கிற ப்ளஸ் இருக்கு. அதே சமயம் ஒரே ரூம்தான் லொக்கேஷன். அதில் போர் அடிக்காம கதை சொல்லணும்கிற சவாலும் இருக்கு. அந்த விதத்தில் `தாயம்' ரொம்பவே ஃப்ரெஷ்ஷான படமா இருக்கும்'' - நம்பிக்கையாகப் பேசுகிறார் கண்ணன். தாயம் விழட்டும்!

சினிமா பிட்ஸ்

பழிவாங்கும் பூனைக்குட்டி!

நான்கு இளைஞர்களை ஒரு பூனை கொல்கிறது என்ற வித்தியாச லைனுடன் வரவிருக்கிறது `மியாவ்'. வழக்கமாக, ஹாரர் படங்களில் மனிதர்களுக்குள், டி.வி-க்குள், மொபைலுக்குள் பேய் புகுந்துவிடும்படி நிறையப் படங்கள் பார்த்துவிட்டோம். ஆனால், இந்த முறை பூனைக்குள் புகுந்து மிரட்ட இருக்கிறது. நாய், குதிரையைப் பழக்குவதுபோல் பூனையைப் பழக்க முடியாது என்பதால், நிறைய சி.ஜி பயன்​படுத்தியுள்ளனர். 

``ஒளிப்பதிவு, இசை, ஆடை வடிவமைப்பு எல்லாத்திலும் என் விளம்பரத் துறை நண்பர்கள்தான் வேலை செய்திருக்காங்க. ராஜா, சஞ்ஜய், ஹேடன், குமார், ஊர்மிளா, சைனினு பலருடன்   `செல்ஃபி'னு ஒரு பூனை நடிச்சிருக்கு. படத்தின் ஹீரோவே செல்ஃபிதான்!'' என்று ஆர்வம் கூட்டுகிறார் அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி. குழந்தைகளுக்குப் பிடிக்கிற மாதிரி எடுங்க ப்ரோ!

சினிமா பிட்ஸ்

முந்தப்போவது யார்?

புற்றுநோய்க்கான மருந்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போராடும் ஒருவனது ஆக்‌ஷன் பயணமே `முந்தல்'. பேங்காங், அந்தமான், கம்போடியா என 42 வெவ்வேறு இடங்களில் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ஜெயந்த். சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராகத் தன் பயணத்தைத் தொடங்கியவருக்கு, `முந்தல்' மூலம் இயக்குநர் புரமோஷன்.

``ஒரு விஞ்ஞானி, புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டுபிடிச்சு, வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பார்க்கிறார். ஆனால், அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சித்த மருத்துவர் அதைக் கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை விஞ்ஞானி கைக்குக் கிடைக்கவிடாமல், எப்படியாவது அரசாங்கத்திடம் சேர்க்கப் போராடுகிறார் அவருடைய பேரன். இந்த சேஸிங்கில் யார் முந்தப்போறாங்​கங்கிறதுதான் கதை. அதனாலதான் `முந்தல்'னு பேர் வெச்சோம்'' - அழுத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் ஜெயந்த்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு