Published:Updated:

அம்மான்னா சும்மா இல்லடா!

அம்மான்னா சும்மா இல்லடா!
பிரீமியம் ஸ்டோரி
அம்மான்னா சும்மா இல்லடா!

ப.சூரியராஜ்

அம்மான்னா சும்மா இல்லடா!

ப.சூரியராஜ்

Published:Updated:
அம்மான்னா சும்மா இல்லடா!
பிரீமியம் ஸ்டோரி
அம்மான்னா சும்மா இல்லடா!

மிழ் சினிமா கதாபாத்திரங்களில் `அம்மா' கதாபாத்திரங்கள்தான் எப்போதுமே மிகமிக முக்கியமானவை. அப்படியான `அம்மா' கதாபாத்திரங்கள், எம்.கே.டி காலம் முதல் ஏமிஜாக்சன் காலம் வரை எந்த அளவுக்குப் பரிணாமம் அடைந்துள்ளது...

அம்மான்னா சும்மா இல்லடா!

கறுப்பு வெள்ளை மம்மீஸ்

பொதுவாக, கறுப்பு வெள்ளைப் படங்களில் வரும் அம்மாக்கள், ஏவி.எம்.ராஜனைப் போல் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சாந்தசொரூபமாக இருப்பார்கள். `சொல்லடா என் ஷெல்வமே!' என்ற ஒரே டயலாக்கைப் பேசி, கர்ச்சீப் நனையும் அளவுக்கு நம்மைக் கண்ணீர் சிந்தவைப்பார்கள் இந்த சென்டிமென்ட் அம்மாக்கள். எம்.ஜி.ஆரின் அம்மாக்களோ, சாதத்தில் பருப்போடு கொஞ்சம் நீதி, நேர்மை, நியாயத்தையும் பிசைந்து ஊட்டி, சமத்துப்பிள்ளையாக அவரை வளர்ப்பார்கள். `என் தாயின் மீது ஆணையாகக் கூறுகிறேன்...' எனச் சொல்லி ஏதேனும் சபதம் எடுத்துவிட்டால், அதைச் செய்யாமல் விட மாட்டார் எம்.ஜி.ஆர். அதேபோல், வீட்டுக்குள்ளேயே ஃபுல் மேக்கப்பில் திரியும் பேராசைக்கார அம்மாக்களுக்கு முழுநேர வேலையே, வீட்டுக்கு விளக்கேற்ற வரும் மருமகளைக் குமுறிக் குமுறி அழவைப்பதுதான். அவர்களும், க்ளைமாக்ஸில் வீட்டு பீரோ சாவியை மருமகளிடம் கொடுத்துவிட்டு மனம் திருந்திவிடுவார்கள்.

அம்மான்னா சும்மா இல்லடா!

80-ஸ் மம்மீஸ்

80-களில் இருந்த ஹீரோக்களுக்கு, வில்லன்களைவிட அதிக துயரங்களைத் தருவது அம்மாக்கள்.  `தான் உண்டு தன் சோலி உண்டு' என வாழும் அவர்களுக்கு, அநியாயத்தைக் கண்டால் உடனே பொங்கிவிடும் ஹீரோதான் பெரும் பிரச்னை. அதனாலேயே, அவர்கள் ஹீரோக்களோடு அன்னம், தண்ணி புழங்காமல் மைண்ட் டார்ச்சர் செய்வார்கள். `அம்மானா சும்மா இல்லடா...', `அம்மா என் ஆருயிரே...' என முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு முகாரி ராகம் பாடினாலும் ஹீரோக்களைப் புரிந்துகொள்ளவே மாட்டார்கள்.

அம்மான்னா சும்மா இல்லடா!

90-ஸ் மம்மீஸ்

`உனக்கு ஒரு கல்யாணங்காச்சிப் பண்ணிப் பார்த்துட்டா, நான் சந்தோஷமா கண்ணை மூடிடுவேன். எனக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து, கையில குடுத்துட்டின்னா...' என ஹீரோக்களிடம் டிமாண்ட் வைப்பதுதான் பெரும்பாலான 90-ஸ் மம்மீக்களின் பகுதிநேர வேலை. மீதி நேரங்களில் மருமகள் நடக்கும் இடங்களில் விளக்கெண்ணெய் ஊற்றுவது, குறை கூறிக் கடுப்படிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கும். சில அம்மாக்களோ, மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அவர்களும் வில்லன், ஹீரோவைப் பார்த்துச் சுடும்போது குறுக்கே பாய்ந்து வந்து கோமா ஸ்டேஜுக்குப் போய்விடுவார்கள். இல்லையேல், ஹீரோ இல்லாத நேரம் அவன் வீட்டுக்கு வரும் வில்லன், ஹீரோவின் அம்மாவை பீரோவை நோக்கித் தள்ளிவிட, அவர்கள் அதில் மோதி ரத்தத்தை கேமராவுக்குக் காட்டிவிட்டு மூர்ச்சையாகிவிடுவார்கள். அது தமிழ் சினிமா அம்மாக்களின் இருண்ட காலம்.

அம்மான்னா சும்மா இல்லடா!

மில்லினியம் மம்மீஸ்

ரம்பத்தில் அராத்தாகத் திரியும் தன் மகனுக்கே பாயசத்தைப் போடுவது, சோற்றில் அரளி விதையைப் பிசைந்து உருண்டைப் பிடித்து ஊட்டிவிடுவது போன்ற வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லா மம்மீஸும் செம ஜாலி கேரக்டர்கள் ஆகிவிட்டார்கள். `உன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணை, ஒரே நாள்ல மூணு தடவை வேற வேற இடங்கள்ல மீட் பண்ணினா, அவதான் உன் லைஃப்... அவதான் உன் வொயிஃப்' என ஹீரோக்களுக்கு லவ் டிப்ஸ் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால், கதாநாயகிகளின் அம்மாக்கள் அன்றில் இருந்து இன்று வரையிலும் `உனக்கு என்னைவிட உன் காதல்தான் முக்கியம்னா, என்னை மறந்துட்டுப் போடி...' என மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீப்பெட்டியோடு மிரட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ப்ச்ச்!