Published:Updated:

“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”

“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”

ம.கா.செந்தில்குமார்

“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”
“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”

`பலே வெள்ளையத் தேவா’ என்பது சிவாஜி சாரோட பிரமாதமான வார்த்தைகள். நம்மை உந்தித் தள்ளிக்கிட்டுப்போற உத்வேகமான குரல். இதே வார்த்தைகளை வடிவேலு சார் சொன்னப்ப, கலகலப்பும் கைகோத்துக் கிளம்பிச்சு. தன்னம்பிக்கையும், தளும்பத் தளும்ப காமெடியுமா போற கதைக்கு, இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு என்னவா இருக்க முடியும்?” – படத்தின் தலைப்புக்கு, பக்கா பதில் சொல்கிறார் இயக்குநர் சசிகுமார். ‘பலே வெள்ளையத் தேவா’, சசிகுமாருக்கு இந்த வருடத்தின் நான்காவது படம்.

“புயல் வேகத்தில் படம் பண்றீங்களே... என்ன திட்டம்?”

“ஓடியே தீரவேண்டிய கட்டாயம். நாம மட்டும் தனிமனுஷனா இருந்திருந்தால் பொறுமையா, நிதானமா ஓடலாம். நம்மளைச் சுத்தி நிற்கிறவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கணுமே! என் ஒருத்தனோட தொடர் ஓட்டம், பலருக்கு வாழ்க்கையா இருக்கு. அதனால, சந்தோஷமா ஓடிட்டிருக்கேன். கிளம்பிப் போன ஐம்பதாவது நாள், ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தை முடிச்சுட்டுத் திரும்பிட்டோம். மொத்த யூனிட்டுக்கும் படம் ரிலீஸ் ஆகிற கிறிஸ்துமஸ் தினம்தான் தீபாவளியும். உழைச்சவங்களை நினைச்சுப்பார்க்கிற அளவுக்கு ஒரே ஷெட்யூல்ல அவ்வளவு அற்புதமா வந்திருக்கு படம்.”

“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”

“தொடர்ந்து   புதுமுக இயக்குநர்களை அறிமுகம்செய்வது ஆச்சர்யப்படவைக்குது. இந்தப் படத்தில் புதுமுக இயக்குநர் சோலை பிரகாஷ் எப்படி?”

`` `குறைஞ்சது பத்து புதுமுக இயக்குநர்களை யாவது அறிமுகப்படுத்துவேன்’னு ஆனந்த விகடன்ல உறுதிகொடுத்திருந்தேன். ‘கிடாரி’ படத்தில் அறிமுகமான பிரசாத் முருகேசனுக்கு, கதையாவும் களமாவும் ரொம்ப நல்ல பேர். அந்த வரிசையில் சோலை பிரகாஷ் ஏழாவது ஆள். கதை சொன்னப்பவே நிமிர்ந்து உட்காரவெச்சவர்; துடிப்பானவர்; சத்தம் இல்லாமல் சாதிக்கும் சாமர்த்தியம்கொண்ட வெகுசிலரில் ஒருத்தர். சரியான பக்கபலமா கேமராமேன் ரவீந்திரநாத் அமைய, அருமையான ரிசல்ட்.’’

“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”

`` `கிடாரி' படம் டெக்னிக்கலா மிரட்டியது. `பலே வெள்ளையத் தேவா' படத்திலும் மேக்கிங் மிரட்டலை எதிர்பார்க்கலாமா?''

`` `கிடாரி' டெக்னிக்கலா மிரட்டிய படம்னா, `பலே வெள்ளையத் தேவா' டெக்னாலஜியா மிரட்டப்போற படம். டெக்னாலஜியின் வளர்ச்சியை, கிராமத்தின் வெகுளித்தனங்களோடு மிக்ஸ் பண்ணிப் புதுமையா சொல்லியிருக்கோம். கிராமங்களில் இருக்கிறவங்க, டெக்னாலஜியை வேறுவிதமா பயன்படுத்துறாங்க. வாழைத்தண்டை அழகா உறிச்சு எடுக்கிறதுபோல, கிராமங்களோட வெள்ளந்தியைப் பதிவாக்கியிருக்கோம்.”

“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”

``படத்தில் கோவை சரளாதான் லீட் ரோலா?''

``ஹீரோ, ஹீரோயின் எல்லாமே அவங்கதான். டைட்டில் கார்டுலேயே அவங்க பேர்தான் முதல்ல வரும். இயக்குநர் பிரகாஷ் என்கிட்ட கதையைச் சொன்னதும், நான் கோவை சரளா மேடம்கிட்ட போய்ச் சொல்லச் சொன்னேன். கதையை முழுசா கேட்டுட்டு, `எனக்கு ஓ.கே. ஆனா, இந்த அளவுக்கு ஒரு பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற கதைக்கு ஹீரோ ஒத்துக்கணுமே!’னு சொல்லியிருக்காங்க. ஷூட்டிங்ல அவங்களோட ஈடுபாட்டை ரசிச்சவனா சொல்றேன், நமக்குக் கிடைச்ச சின்ன மனோரமா அவங்க. ஆச்சியை நாம ரொம்ப சாதாரணமா இழந்துட்டோம். அவங்களை இழந்த பிறகுதான் நமக்கு அவங்களோட அருமை புரியுது. `சின்ன ஆச்சி’னு தைரியமா சொல்ற அளவுக்கு நடிப்பிலும் அர்ப்பணிப்பிலும் அசத்துறாங்க சரளா மேடம்.”

“சின்ன ஆச்சி அசத்துறாங்க!”

“புதுமுகம் தான்யா எப்படி?”

“நடிகர் ரவிச்சந்திரன் சாரோட பேத்தி. தாத்தா திறமையை வாங்கிட்டு வந்திருக்கிற பொண்ணு. ரொம்ப யதார்த்தமான முகம். டயலாக் டெலிவரி, முகபாவனை எல்லாம் ரொம்ப இயல்பா வருது. அருமையா நடிச்சிருக்காங்க.”