Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா, பிரேம் டாவின்ஸி

ஜோக்ஸ் - 1

``சொன்னா கேளுடி, எந்தப் பொம்பளையும் எனக்கு மை வெக்கலை. இது பேங்க்ல வெச்ச மை.''

- பெ.பொன்ராஜபாண்டி

ஜோக்ஸ் - 1

``அந்தக் கல்யாண வீட்டுக்காரங்க பண்றது சரியில்லைன்னு எப்படிச் சொல்றீங்க?''

``நூறு ரூபாய் மொய் செஞ்சவங்களுக்கு மட்டன் பிரியாணியும், ஐந்நூறு ரூபாய் செஞ்சவங்களுக்கு தயிர்சாதமும் போடுறாங்க!''

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

ஜோக்ஸ் - 1

``படத்தோட பேரைக் கேட்டதும் ஜனங்க கூட்டம் அலைமோதணும். அப்படி ஒரு பேர் சொல்லுய்யா பார்க்கலாம்!''

`` `ஏ.டி.எம்-ல பணம் இருக்கு' ஓ.கே-வா சார்?''

- சாய்ராம்

ஜோக்ஸ் - 1

``மன்னர், மாறுவேஷத்துல எங்கே கிளம்பிட்டார்?''

``பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றப்போகிறாராம்!''

- பெ.பொன்ராஜபாண்டி