Published:Updated:

“விஜய் என்னைப் பாராட்டினார் தெரியுமா!”

“விஜய் என்னைப் பாராட்டினார் தெரியுமா!”
பிரீமியம் ஸ்டோரி
“விஜய் என்னைப் பாராட்டினார் தெரியுமா!”

பா.ஜான்ஸன்

“விஜய் என்னைப் பாராட்டினார் தெரியுமா!”

பா.ஜான்ஸன்

Published:Updated:
“விஜய் என்னைப் பாராட்டினார் தெரியுமா!”
பிரீமியம் ஸ்டோரி
“விஜய் என்னைப் பாராட்டினார் தெரியுமா!”

``நான் எப்பவும் எதையும் எதிர்பார்த்துப் பண்ணுவதும் இல்லை; எதற்குமே எக்ஸைட் ஆனதும் இல்லை. ஆனா, நான் நடிகையானது, பெரிய ஹீரோக்களோடு நடிப்பது என என்னென்னவோ நடந்துட்டு இருக்கு. எல்லாமே கனவுபோல இருக்கு ப்ரோ'' - செம ஜாலியாகப் பேசுகிறார் கீர்த்தி சுரேஷ். 

“விஜய் என்னைப் பாராட்டினார் தெரியுமா!”

`பைரவா' விஜய், `தானா சேர்ந்த கூட்டம்' சூர்யா, பவன் கல்யாணுடன் அடுத்த படம்  என கீர்த்தியின் கிராஃப் எகிறிக்கொண்டிருக்கிறது!

``விஜய் சாரோட மிகப்பெரிய ரசிகை நான். `போக்கிரி' சக்சஸ் மீட்டுக்காக அவர் கேரளா வந்திருந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில்தான் நான் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட். அங்க இருந்து அவருக்குக் கைகாட்டி, கத்தி ரகளை பண்ணியிருக்கேன். அந்த அளவுக்கு ஃபேன். எல்லாரும் சொல்ற மாதிரி விஜய் சார் ரொம்ப சைலன்ட். அதிகம் பேச மாட்டார். ரெண்டு பாட்டு ஷூட் பண்ணி முடிச்சதுக்குப் பிறகுதான் `நல்லா நடிச்சிருக்கீங்க'னு ரெண்டு வார்த்தைகள் சொன்னார். ஆனால், `அதுவே விஜய் சார்கிட்ட இருந்து அதிகம்’னு ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லோரும் சொன்னாங்க. கீர்த்தி செம ஹேப்பி!

சூர்யா சாரையும் ரொம்பப் பிடிக்கும். `கஜினி', `சிங்கம்' எல்லாம் நிறைய முறை பார்த்திருக்கேன். என் அம்மா, சிவகுமார் சார்கூட நடிச்சிருக்காங்க. நான் சின்ன வயசுல அந்தப் படத்தை டி.வி-யில் பார்த்தபோது எல்லாம், `நாளைக்கு நானும் ஹீரோயினாகி சூர்யா சார்கூட நடிப்பேன்'னு விளையாட்டா சொல்வேன். அது இப்ப நிஜமாகிடுச்சு.''

``சினிமாவில் உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யார்?''


``சினிமா ஃப்ரெண்ட்ஸைவிட அவங்க குடும்பத்தோடுதான் நான் ரொம்ப க்ளோஸ் ஆகிடுவேன். முதல் படம் விக்ரம் பிரபுகூட நடிச்சேன். அம்மா, பிரபு சார்கூட நடிச்சிருக்காங்கங்கிறதால முன்னாடி இருந்தே அவங்க எல்லாருமே ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ்.  சிவகார்த்திகேயனைவிட அவங்க மனைவி ஆர்த்தி, பொண்ணு ஆராதனா எல்லாரும் திக் ஃப்ரெண்ட்ஸ். அடிக்கடி மீட்டிங், ஈட்டிங்னு செம ஜாலியா பொழுதுபோகும்.''

``குழந்தை நட்சத்திரம் டு ஹீரோயின் டிராவல் எப்படி இருக்கு?''


``மூணு படங்கள்தான் குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். மூணு படங்களுமே அப்பாவுடைய தயாரிப்பு. ஸ்கூல் விடுமுறையில் ஷூட்டிங் பார்க்கப் போகும்போது கூப்பிட்டு நடிக்கவெச்சுடுவார். அதில் ஒரு சுவாரஸ்யம்... திலீப் சாருக்குப் பொண்ணா `குபேரன்' படத்தில் நடிச்சேன். அப்புறம் அவருக்கு ஜோடியா `ரிங் மாஸ்டர்' படத்தில் நடிச்சேன். சூப்பர்ல!''

“விஜய் என்னைப் பாராட்டினார் தெரியுமா!”

``உங்ளோட கிரிட்டிக் யாரு?''

``என் அக்கா ரேவதி. அவங்க ஃபிலிம் ஸ்கூல் நடத்திட்டிருக்காங்க. பத்து பேர் `உன் நடிப்பு நல்லா இருக்கு’னு சொன்னாங்கன்னா, பதினொண்ணாவதா `நல்லா இல்லை’னு அக்காவிடம் இருந்து கமென்ட் வரும். `கண்ணு ஏன் அப்படிப்போச்சு, வாய் ஏன் இப்படி இருக்கு?’னு சின்னச்சின்னக் குறைகளையும் ஓப்பனா சொல்வாங்க. ஆனா, அதுதான் என்னை மோட்டிவேட் பண்ணும். அவளை எப்படியாவது `நீ நல்லா நடிக்கிறடி’னு சொல்ல வெச்சுடணும் அதான் லட்சியம்.''

``சோஷியல் மீடியாவில் உங்களைப் பற்றி நிறைய மீம்ஸ் சுத்துதே... பார்த்தீங்களா?''


``உடனடியா சிரிச்சுடுவேன். அதிகமா என்னைக் கலாய்ச்சுத்தான் மீம்ஸ் பண்ணுவாங்க. ஆனா, செம க்ரியேட்டிவா இருக்கும். நாம கொஞ்சம்கூட அப்படி யோசிச்சிருக்க மாட்டோம். அப்படி ஒருத்தர் யோசிக்கிறார்னா அவரோட சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் எந்த அளவு இருக்கும்னு ரசிப்பேன்.''

``யார் இயக்கத்தில் நடிக்க ஆசை?''


``மணிரத்னம் சார்.''