`மக்களால் நான்... மக்களுக்காக நான்’ எனச் சொல்லும் இன்னொரு மாஸ் ஹீரோ படம்.

கோடிக்கணக்கான பணத்துடன் ஒரு கன்டெய்னர் லாரி பிடிபடுகிறது. அந்தப் பணத்துக்காக இரண்டு வில்லன்கள் அடித்துக்கொள்ளும்போது, இடையில் புகுந்து ஆட்டையைப் போடுகிறார் விஷால். அவர் யார், அந்தப் பணம் யாருடையது, கடைசியில் அந்தப் பணம் என்னவாகிறது என்பதைச் சொல்லும் கமர்ஷியல் கதகளியே `கத்தி சண்டை’.

நடிகர் சங்க அரசியலில் இருந்து நாட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் விஷால். நிறைய சண்டை, நிறைய நடனம், நிறைய சென்டிமென்ட் எனப் பழகிய ரூட்டிலேயே பைக் விட்டிருக்கிறார்.

படம் முழுவதும் பளிச் என ஜொலிக்கிறார் தமன்னா. ரஃப் அண்ட் டஃப் நடிப்பில் ஸ்ட்ரிக்ட் போலீஸாக ஜெகபதிபாபு. அவரின் ஸ்க்ரீன் பிரசென்ஸை மீறி சுப்புவின் டப்பிங் குரல், கண்ணுக்கு முன்னால் வருகிறது.
காமெடியை முதல் பாதி சூரியும், இரண்டாம் பாதியை வடிவேலுவும் பாகம் பிரித்திருக்கிறார்கள். திரையரங்கில் சிரித்துத் தள்ளுகிறார்கள்.

வழக்கம்போல சிலபல பறந்து செல்லும் இன்னோவாக்கள், சுமோக்கள், 50 சதவிகிதம் காமெடி, டாப்பிங்காக கவர்ச்சி எனப் பக்கா கமர்ஷியல் பேக்கேஜ். ஆனால், சுராஜுக்கு ஆரம்பக்காலத்தில் ஹிட்டுகள் பெற்றுத்தந்த ‘திரைக்கதைத் திருப்பங்கள்’ இதில் இல்லவே இல்லை. கன்டெய்னர், கட்டுக்கட்டாகப் பணம் எல்லாம் டாபிக்கல் மேட்டர்தான். ஆனால், தமிழ் சினிமாவுக்கு எல்லாமே ரிப்பீட்.

தலைப்பில் `கத்தி’ இருக்கிறது என்பதற்காக, அந்தப் படத்தில் இருந்தே சில காட்சிகள் எடுத்திருக்கிறார்கள். கூடவே, `மங்காத்தா’, `தில்லாலங்கடி’ எனப் படம் முழுக்க கோடம்பாக்கமே உறைந்துகிடக்கிறது.

டெம்ப்ளேட் என்றாலும் ஹிட் ரகம்தான் ஹிப்ஹாப் ஆதியின் பாடல்கள். ரிச்சர்டு எம்.நாதனின் கேமரா ஆக்ஷன் படத்துக்கான இலக்கணத்துடன் இன்ச் கேப் கிடைத்தால்கூட சர்ரென நுழைந்து லாகவமாக வெளியேறி மிளிர்கிறது. கனல் கண்ணனின் ஆக்ஷன் பன்ச் ஒவ்வொன்றும் நாக் அவுட். கார் சேஸிங் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி மிரட்டியிருக்கிறார்.

வடிவேலுவைத் திரும்ப அழைத்து வந்ததற்காக, ஹிஹி... ஹிஸ்டரியில் இடம் பிடிக்கும்.

- விகடன் விமர்சனக் குழு