ஒரு குக்கிராமத்துக்குப் புதிதாக இடம்பெயரும் நாயகனுக்கு, அந்த ஊரில் வரும் காதலும் பகையுமே கதை.

300 குடும்பங்களே இருக்கும் அழகிய கிராமம் வயலூர். அங்கே கேபிள் பிசினஸ் செய்யும் வளவன், யாராவது டி.டி.ஹெச் வாங்கினால் போட்டுப் பொளந்துவிடுவார். இது தெரியாமல், சசிகுமார் ஒரு டி.டி.ஹெச் குடையை மாட்ட, ஆரம்பிக்கிறது பிரச்னை. இடையில் காமெடி, காதல் என நகர்ந்து ஆக்ஷனோ ரொமான்ட்டிக்கோ காமெடிப் படமாக முடிகிறது `பலே வெள்ளையத் தேவா’.

ஆங்ரிமேன் சசிகுமார், கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருக்கிறார். அம்மா சொன்னதற்காக ஒரு கும்பலை துவம்சம் செய்வதோடு சரி. மற்ற நேரமெல்லாம் காமெடி மற்றும் காதலில் பிஸி. நாயகி தான்யா, நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பதைச் சொன்னதும் நம்பிவிடும் முகம். அந்தக் கூடுதல் உயரம்தான் ஹைலைட். அம்மா கேரக்டருக்கு புது வரவு ரோகிணி.

கோவை சரளாவுக்கு போஸ்டரிலும் டைட்டிலிலும் தந்த முக்கியத்துவத்தை, ஸ்க்ரிப்ட்டிலும் தந்திருக்கலாம். எந்த கெமிஸ்ட்ரியும் இல்லாமல் சர்க்கரைப் பொங்கல்-வடகறி என ஒட்டாத காம்பினேஷனில் வலம்வருகிறது சசிகுமார்-கோவை சரளா கூட்டணி. அவரைவிட சங்கிலி முருகன் கலகலக்க வைக்கிறார்.

நகைச்சுவைதான் ரூட்டு என ஃபிக்ஸ் செய்து இறங்கிய பிறகும் தயங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சோலை பிரகாஷ். டெலிஷாப்பிங், லோக்கல் கேபிள் அட்ராசிட்டிஸ், கல்யாண வீட்டு சீனில் ஸ்வைப்பிங் மெஷின்... என ரகளையான ஐடியாக் களைப் பிடித்தவர், அதை எல்லாம் கதைக்கு வெளியே வைத்ததுதான் சிக்கல்.

க்ளிஷேதான் என்றாலும் சிரிக்க வைக்கின்றன அந்த ஃப்ளாஷ் பேக்குகளும் க்ளைமாக்ஸும்.

200 வீட்டில் கேபிள் கனெக்ஷன். எல்லோரும் பணம் செலுத்தினாலே 20,000 ரூபாய்தான் கலெக்ஷன் ஆகும்.இதற்காகவா வளவன் இத்தனை டேபிள் ஏறி ஃபேனை உடைக்கிறார்? தியேட்டரே இல்லாத ஊரில் `தம்பிக்கு எந்த ஊரு’ படத்தில் இருந்து `கபாலி’ படம் வரை போஸ்டர் மாறிக்கொண்டே இருப்பது மெடிக்கல் ஷாப் மிராக்கிள்.

`கிடாரி’யில் இருந்த மெட்டுக்களைப் பட்டி டிங்கரிங் பார்த்து மீண்டும் இறக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் தர்புகா சிவா.

`அடேய்’ வெள்ளையத் தேவா!

- விகடன் விமர்சனக் குழு