
``ரெய்டுல உங்ககிட்ட என்ன கேட்டாங்க தலைவரே?’’
`` `இவ்வளவு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு வெச்சிருக்கீங்களே... எப்படி சில்லறை மாத்துவீங்க?’னு!’’
- அம்பை தேவா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``தன்னைத் தனியா விட்டுட்டு, எல்லோரும் போயிட்டாங்களேன்னு தலைவர் செம கடுப்பில் இருக்கிறார்.’’
``கட்சியில் இருந்தா?’’
``இல்லை... வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து.’’
- கி.ரவிக்குமார்

``தலைவரை, தொகுதி பக்கம் தள்ளிக்கொண்டுவந்த வர்தா புயலுக்கு நன்றி... நன்றி... நன்றி!’’
- எம்.விக்னேஷ்

``பயந்தாங்கோலிபோல் கதவு, ஜன்னலை எல்லாம் இப்படி வேகமா அடிப்பதை நிறுத்திட்டு, நேருக்கு நேர் வாங்கடா பார்க்கலாம்!’’
``அது `வர்தா’ புயல் தலைவரே!’’
- கோ.பகவான்