Published:Updated:

“அவர் விக்ரமாதித்தன்... நான்தான் வேதாளம்!”

“அவர் விக்ரமாதித்தன்... நான்தான் வேதாளம்!”
பிரீமியம் ஸ்டோரி
“அவர் விக்ரமாதித்தன்... நான்தான் வேதாளம்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படம்: ஆ.முத்துக்குமார்

“அவர் விக்ரமாதித்தன்... நான்தான் வேதாளம்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
“அவர் விக்ரமாதித்தன்... நான்தான் வேதாளம்!”
பிரீமியம் ஸ்டோரி
“அவர் விக்ரமாதித்தன்... நான்தான் வேதாளம்!”
“அவர் விக்ரமாதித்தன்... நான்தான் வேதாளம்!”

மிழ் சினிமாவில், 2016 போலவே 2017-ம் விஜய் சேதுபதி ஆண்டுதான். `விக்ரம் வேதா', `கவண்', `அநீதிக் கதைகள்', `கருப்பன்', `96' என விஜய் சேதுபதியின் காலண்டரில் ஷூட்டிங் இல்லா நாட்களே இல்லை.

``2016-ம் ஆண்டில் உங்களுடைய ஆறு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி, எல்லாமே ட்ரெண்ட் ஆச்சே! இதை எப்படி ப்ளான் பண்ணீங்க?''

``அட... ப்ளான் எல்லாம் பண்ணலைங்க. ஆறு படங்களும் தள்ளித் தள்ளி ரிலீஸ் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். எல்லா படங்களுமே ஒரே மாதிரி இருந்துடக் கூடாதுங்கிறதுல ரொம்பக் கவனமா இருந்தேன். ஆனால், கதையைத் தவிர எதுவுமே என் கட்டுப்பாட்டுல இல்லை.

தொடக்கத்துல எல்லாருமே `ஒரு வருஷத்துல ஆறு படம்... ஆறு படம்'னு சொல்லும்போது, எனக்கும் பயமாத்தான் இருந்தது. முக்கியமா, ரசிகர்கள் எங்கே என்னைக் கிண்டல் பண்ணிடுவாங்களோனு ரொம்பவே பயந்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கலை. எல்லாருக்குமே என் படங்கள் பிடிச்சிருந்தது.''

`` `விக்ரம் வேதா'ல நீங்கதான் வில்லனாமே?''

``இங்கே ஹீரோ, வில்லன்... கறுப்பு, வெள்ளை அப்படி எதுவுமே இல்லை. எல்லாமே ஒண்ணுதான்னு சொல்லக்கூடிய படம்தான் `விக்ரம் வேதா'. சின்ன வயசுல விக்ரமாதித்தன், வேதாளம் கதை படிச்சிருப்போம்ல, அதோட மாடர்ன் வெர்ஷன்தான் இந்தப் படம். மாதவன்தான் விக்ரமாதித்தன், நான் வேதாளம். அவர் போலீஸ், நான் கேங்ஸ்டர். இன்னிக்கான சினிமாவா, இப்போதைய ட்ரெண்ட்ல படம் பக்காவா இருக்கும்.''

`` `விக்ரம் வேதா'ல மாதவன், `கவண்'ல டி.ஆர்., `அநீதிக் கதைகள்'ல ஃபகத் பாசில்னு தொடர்ந்து டபுள் ஹீரோ படங்கள்லயே அதிகம் நடிக்கிறீங்களே?''

`` `நீங்க இனிமே மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்ல நடிக்காதீங்க'னு எனக்கு நிறையப் பேர் அட்வைஸ் பண்ணினாங்க. ஆனா, எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. அதனால், விருப்பப்பட்டுத்தான் நான் இந்த மாதிரி படங்கள்ல நடிக்கிறேன். நிறையக் கத்துக்கிறேன்.

இங்கே சினிமாங்கிறது வெறும் கலை மட்டும் இல்லை. அதுகூடவே பெரிய வியாபாரமும் இருக்கு. என் படங்கள், வியாபாரரீதியாகவும் வெற்றி அடையணும்; பார்க்கும் மக்களையும் சந்தோஷப்படுத்தணும்.

`விக்ரம் வேதா'ல மாதவன்கூட நடிக்கிறேன். அவருக்கு என்னைவிட மெச்சூரிட்டி அதிகம். அதனால் சேர்ந்து நடிக்கிறது ரெண்டு பேருக்குமே ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்கு. டி.ஆர் சார், படங்களில் பார்த்ததைவிட நேர்ல என்னை செமையா மிரளவெச்சார். ஒரு சீனை அவர் பல கோணங்கள்ல பார்க்கிறார். ஒவ்வொரு சீன்லயும் அவ்வளவு இம்ப்ரூவ்மென்ட் கொடுத்தார். ஃபகத் பாசிலை இன்னும் ஷூட்டிங்ல சந்திக்கவே இல்லை. ஒரே ஒருமுறை ஏர்போர்ட்ல பார்த்திருக்கோம். நல்ல நடிகர். இனிமேல்தான் பேசணும்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அவர் விக்ரமாதித்தன்... நான்தான் வேதாளம்!”

`` `அநீதிக் கதைகள்' படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கே வைரலாகிடுச்சே?''

``பிரதர், அந்தப் படம் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. தியாகராஜன் குமாரராஜாதான் அந்தப் படத்தைப் பற்றி பேசுவதற்குத் தகுதியான ஆள். நான் ரொம்ப மதிக்கிற இயக்குநர். நிச்சயம் நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கும்.''

``புதுசா வந்திருக்கிற இளைஞர்களில் உங்களைக் கவனிக்கவைத்தவர்கள் யார் யார்?''

``அய்யோ! இப்படி திடீர்னு கேட்டா எப்படி? (கொஞ்ச நேரம் யோசிக்கிறார்) நிவாஸ் கே.பிரசன்னா, ஜஸ்டின் பிரபாகரன் இவங்க ரெண்டு பேரும் மியூஸிக் டைரக்டரா எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க. அடுத்து `உறியடி' படம் இயக்கிய விஜய் குமார். படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. `உறியடி' இன்டர்வல் பிளாக் அடிக்கடி பார்ப்பேன். செம ஃபைட் அது.''
 
``இவ்வளவு பரபரப்புக்கு நடுவில் வீட்டுக்கு எப்படி நேரம் ஒதுக்குறீங்க?''

``அதுக்கான ஸ்பேஸ் ரொம்பக் குறைவுதான். சினிமாவையே நான் இப்பதான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். அதையும் நிறையத் தப்புப் பண்ணி தப்புப் பண்ணித்தான் கத்துக்கிறேன். என்னன்னு தெரியலை... 35 வயசுக்கு மேலதான் வேலை வேலைனு மனசு ஓடுது. ஒரு வருஷம் கழிச்சு இது மாறலாம். ஆனால், எனக்கும் என் ஃபேமிலிகூட நேரம் செலவழிக்கணும்னுதான் ஆசை.''

``தமிழ் சினிமாவில் நீங்க கற்றதும் பெற்றதும் எதைனு நினைக்கிறீங்க?''

``தமிழ் சினிமா, எனக்கு நிறையக் கொடுத்திருக்கு பிரதர் (கையை அகலமாக விரித்துக்காட்டுகிறார்). நான் இந்த சினிமாவுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன். நான் காசு, பணத்தைச் சொல்லலை. நிறையப் பேரோட அன்பைக் கொடுத்தது; நிறைய தைரியம் கொடுத்தது, வாழ்க்கையைக் கத்துக்கொடுத்தது; நிறைய சவால்களைக் கொடுத்து என்னை ஃபேஸ் பண்ணவெச்சிருக்கு.

நான் காசு இல்லாம இருந்த நாட்களைவிட, இப்போ நான் வாழ்ற வாழ்க்கை எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நிறைய ஏமாற்றங்கள், நிறைய துரோகங்கள், பொய்யான பேச்சுக்கள்னு இப்பதான் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை அதிகமாப் பார்க்கிறேன். இதை ஃபேஸ் பண்றதும், பேலன்ஸ் பண்றதும்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி `காசு சம்பாதிச்சா, எல்லாமே சரியாகிடும்'னு ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனா, காசு, பணம் சம்பாதிச்ச பிறகும் அப்படி எல்லாம் ஒண்ணும் சரியாகாதுனு இப்பதான் தோணுது. இப்ப நான் சினிமா ரேஸ்ல வந்துட்டேன். நானே நினைச்சாலும் அதை நிறுத்த முடியாது. இங்கே ஓடிட்டே இருக்கவேண்டியதுதான். `ஏன் இப்படி எல்லாம் நடக்குது?'னு முன்னாடி தோணும். இப்போ இது இப்படித்தான் நடக்கும்னு புரிய ஆரம்பிச்சுடுச்சு. நான் கொஞ்சம் பக்குவப்பட்ட மனிதனா இப்போ மாறியிருக்கேன்.''

“அவர் விக்ரமாதித்தன்... நான்தான் வேதாளம்!”

``சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக்குறீங்க?''

``ஊர் வாயை என்னிக்குமே மூட முடியாது. 1,000 பேருக்கும் 1,000 விதமான கருத்துகள் இருக்கும். என்னைப் பற்றி பாசிட்டிவாவோ, நெகட்டிவாவோ சொன்னா, `அப்படியாங்க!'னு கேட்டுட்டுப் போயிடுவேன். இங்கே எல்லாத்தையும் ரிசீவ் பண்ணலாம். எல்லாத்துக்கும் ரியாக்ட் பண்ணக் கூடாது.''

``தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கான இடம் என்ன?''

``நான் எந்த இடத்தையும் எதிர்பார்க்கலை. இருப்பதை சுவாரஸ்யமா பண்ணணும்னுதான் ட்ரை பண்றேன். இருக்கும் இடத்தை விட்டுட்டு இன்னொரு இடத்தை நோக்கிப் போகணும்னு நினைக்கிற ஆள் நான் கிடையாது. `தொடர்ந்து படங்களா நடிச்சுத் தள்ளணும், என்னைப் பற்றி எல்லோரும் வித்தியாசமாப் பேசணும், ஒரு பெரிய ரேஞ்சுல என்னைக் காட்டிக்கணும்'னு எல்லாம் எனக்கு எந்தக் கனவும் இல்லை. எனக்குப் பிடிச்ச படங்களை, ஜனங்களுக்குப் பிடிச்ச மாதிரி தரணும். நான் நடிக்கிறது உண்மையா இருக்கணும். அது சரியில்லைனு தோணுச்சுனா, நானே சமயங்களில்  ஒன் மோர் கேட்பேன்... கேட்கிறேன். அப்படித்தான் கத்துக்கிறேன்.''

``வாழ்க்கை என்றால் என்ன சார்?''

``வாழ்க்கை என்பது செம காமெடி பிரதர். என்னதான் கணக்குப் போட்டாலும் முட்டையில்தான் வந்து வந்து முடியுது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism