Published:Updated:

`என்னை பிக்பாஸ் 2ல கூப்பிட்டாக, ஏழெட்டு சினிமாவுல கூப்பிட்டாக..' - 'ஆத்தாடி என்ன உடம்பீ' ராமர்!

`என்னை பிக்பாஸ் 2ல கூப்பிட்டாக, ஏழெட்டு சினிமாவுல கூப்பிட்டாக..' - 'ஆத்தாடி என்ன உடம்பீ' ராமர்!
`என்னை பிக்பாஸ் 2ல கூப்பிட்டாக, ஏழெட்டு சினிமாவுல கூப்பிட்டாக..' - 'ஆத்தாடி என்ன உடம்பீ' ராமர்!

திரும்புற பக்கமெல்லாம்`ராமர் ராமர்'னு குரல்... ``ஒருவழியா எப்படியோ தமிழ்நாட்டுல ராமர் ராஜ்ஜியத்த உண்டு பண்ணிட்டீங்கள்ல?'' என கேட்டால் பதறிச் சிதறுகிறார் ராமர். சோஷியல் மீடியாவின் மோஸ்ட் வாண்டட் நபர்.

``திரும்புற பக்கமெல்லாம் `ராமர் ராமர்'னு குரல்...  ஒருவழியா எப்படியோ தமிழ்நாட்டுல 'ராமர்' ராஜ்ஜியத்தை உண்டுபண்ணிட்டீங்கள்ல?'' எனக் கேட்டால், பதறிச் சிதறுகிறார் ராமர். சோஷியல் மீடியாவின் மோஸ்ட் வான்டட் நபர். வார்த்தைக்கு வார்த்தை உடல்மொழியிலும் கவுன்ட்டர் அடிக்கக்கூடிய கலைஞர் `அது இது எது?' ராமர்! 

``அய்யய்யோ தலைவா இந்தக் கேள்வியில எந்த அரசியலும் இல்லையில? இல்ல... அரசியல பற்றித்தான் கேட்குறீங்களானுகூட அளவுக்கு அரசியல் தெரியாத ஆளு... என்னய எங்கிட்டாச்சும் குந்தாங்கூறா கோர்த்துவுட்டுராதீங்க...பாடி தாங்காது. அப்றம் எனக்கு நானே ஆத்தாடி என்ன உடம்பீனு பாடவேண்டியதா இருக்கும்!''

``என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா'வில் ஆரம்பித்து தற்போதைய ஆத்தாடி என்ன உடம்பீ வரை ராமர் என்ன செய்தாலும் அதுதான் சமூகவலைதளத்துக்கு வைரல் என்டெர்டெயிண்மென்ட். எப்படி ஆரம்பிச்சீங்க பாஸ்?''

``சொந்த ஊரு மதுரை மாவட்டம் மேலூர் பக்கத்துல அரிட்டாபட்டி கிராமம்.  இந்த கலை என்னோட அப்பாகிட்ட இருந்து வந்ததுதான். செம லந்து பண்ணுவாரு. அவர் பேச்சைக்கேட்டுக் கேட்டு அப்படியே எனக்கு இயல்பாவே வந்துடுச்சு. டிவில எங்கேயாச்சும் ஒரு நிமிஷம் நம்ம முகம் ஃப்ரேம்ல வந்துட்டு போயிராதான்னு ஏங்குன ஆளு நான்... `கலக்கப்போவது யாரு சீசன் 3'ல நானும் சிவகார்த்திகேயனும் தான் பங்கேற்பாளர்கள். இப்போ சிவா வேற ஒரு இடத்துக்கு போயிட்டாரு... என்னையும் மக்கள் அங்கீகரிச்சு இந்த இடத்துல வச்சுருக்காங்க. நிஜமா ரொம்ப சந்தோஷமா இருக்கு!''

``டி.வி ஷோவுல யாரயாச்சும் வம்பிழுத்துக்கிட்டு தானே இருக்கீங்க..?''

``அய்யோ... அதெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தைங்க. ஒரு கலைஞனா எனக்கு ஸ்கிரிப்ட் குடுக்குற இயக்குநர்களோட வார்த்தைக்கு வேலை செய்யுறேன்... கோவணம் கட்டி நடிக்கச் சொன்னாலும் நான் செய்யணும். அதுதானே என்னோட வேலை. மத்தபடி இதுல நான் அம்பு மட்டும்தான். வில் எல்லாம் என்னோட இயக்குநர்கள்தான்.''

``சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குப் பிறகு , நிறைய மிரட்டல்கள் ராமருக்கு வந்துச்சாமே..?''

``அந்த எபிசோட் மட்டுமில்ல. கலா மாஸ்டர் மாதிரி பண்ணுனப்போ, சாண்டி மாஸ்டர் மாதிரி பண்ணுனப்போ அப்டின்னு, நிறைய பாராட்டுகளும் வந்துச்சு, நிறைய மிரட்டல்களும் வந்துச்சு. இன்னும் சொல்லப்போனா அதுக்குப் பிறகு ஜீதமிழ்ல ஆயிரத்தி ஐநூறாவது எபிசோடுக்கு என்னயும் கூப்பிட்டு இருந்தாங்க. அப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் என்னைய ரொம்பவே என்கரேஜ் பண்ணினாங்க. நான் பயந்தமாதிரி எதுவும் சொல்லலை. 'என்ன தோணுதோ பண்ணுங்க ராமர், தயக்கம் வேண்டாம்'னு சொன்னாங்க. கலா மாஸ்டர் கெட்டப் போட்டுக்கிட்டு சாண்டி மாஸ்டர் பத்தியும் ஒரண்டை இழுத்து வச்சுருப்பேன்... ஆனா நீங்க நம்புவீங்களானு தெரியாது. சாண்டி மாஸ்டரும் நானும் அவ்வளவு க்ளோஸ். அதனால வெளில இருந்து வர்ற மிரட்டல்களையெல்லாம்  நான் பெருசா கண்டுக்கிறது இல்ல. காமெடிய காமெடியா மட்டும் பார்க்கிறவங்க இவங்கள்லாம்.''

``ராமர் பிக்பாஸ் 2 ல வரப்போறாருன்னு ஒரு நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கே...?''

``ஹாஹாஹா... ஆமா  பிக்பாஸ்-2 ல என்னைக் கூப்பிட்டது உண்மைதான்... ஆனா அதுக்கு முன்னாலேயே ஏழெட்டு சினிமாவுல கமிட் ஆகிட்டதால போக முடியாத சூழல். பார்க்கலாம்... எதாச்சும் மாற்றம் நடக்குதான்னு!''

``ஆத்தாடி என்ன உடம்பீ சுவாரஸ்யம் சொல்லுங்க...?''

``நான் டிவிக்கு வர்றதுக்கு முன்னால கோவில் திருவிழா நிகழ்ச்சிகள்ல எல்லாம் நாடகம் போட்டப்போ இந்த மாதிரியான பாடல்கள் அதிகமா ஒளிபரப்பாவது உண்டு. அந்த ஷோவுலயே திருவிழா செட்டப் அப்டின்னு சொன்னதும் இந்தப் பாட்டைப் பாடுனேன். அது இவ்வளவு வைரல் ஆகிருச்சு. இன்னும் சொல்லப்போனா இந்த எபிசோடு வெளிவந்து ரொம்ப நாளாச்சு. ஆனா இப்போ எடுத்துவெச்சு கொண்டாடுறாங்க. மீம்ஸ், ரிங்டோன்னு எங்கே பார்த்தாலும் இப்போ ஆத்தாடி என்ன உடம்பீயாத்தான் இருக்கு. சமூக வலைதளத்துல எப்ப என்ன நடக்கும்னு யாரு கண்டா..?''
 

``ராமருக்கு சம்பளம் எவ்வளவு?''

``காசா பணமா உங்களுக்கு எவ்வளவு போட தோணுதோ அவ்வளவும் போட்டுக்கங்க!''

``ராமரை பாதிச்ச சம்பவம் இருக்கா?''

`` அம்மா தான்... என்னோடய ஒவ்வொரு கஷ்டத்துலயும் என் கூட இருந்து பார்த்தவங்க என்னோட அம்மா. இப்போதான் நான் கொஞ்சம் கொஞ்சமா வெளில தெரிய ஆரம்பிச்சுருக்கேன். எல்லோருக்கும் இந்த ராமரைத் தெரிஞ்ச சமயத்துல இதைப் பார்க்க என்னோட அம்மா இப்போ உயிரோட இல்ல. அது எப்பவும் எனக்குள்ள வடுவா இருந்துக்கிட்டே இருக்கும்.'' 

அடுத்த கட்டுரைக்கு