Published:Updated:

பைரவா - சினிமா விமர்சனம்

பைரவா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பைரவா - சினிமா விமர்சனம்

பைரவா - சினிமா விமர்சனம்

பைரவா - சினிமா விமர்சனம்

ல்வி நிலையங்கள் செய்யும் அநியாயங் களைத் தட்டிக்கேட்கிறான் `பைரவா'.

வாராக்கடன்களை வசூலிக்கும் கலெக்‌ஷன் ஏஜென்ட் விஜய். ஒரு திருமணத்துக்காக சென்னைக்கு வரும் நெல்லைப் பெண் கீர்த்தி மீது விஜய்க்கு, கண்டதும் காதல். ஊருக்குத் திரும்பும்முன் கீர்த்தியைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், ஃப்ளாஷ்பேக்கை விஜய்யிடம் சொல்லவைக்கிறது. அரிவாள் தேசத்தில், காதலிக்காக அடியெடுத்துவைக்கிறார் விஜய். அங்கு நடக்கும் வாய்ச் சண்டைகளும் வாள் சண்டைகளுமே படம்.

ஒரு சின்ன கேப்புக்குப் பிறகு மீண்டும் பழகிய கமர்ஷியல் களத்தில் கலக்கியிருக்கிறார் விஜய். ஓப்பனிங் கிரிக்கெட் சண்டை ஆயிரம் வாலா லந்து என்றால், இடைவேளை சண்டை பத்தாயிரம் வாலா பவர். `நில்லாயோ...' பாடலில் ஒரு குட்டி ஜம்ப்பிங்கையே நடனமாக மாற்றியதில் ஜொலிக்கிறார் விஜய். படம் நெடுக போனில் கத்துவதும், நேரில் குத்துவதுமாக அதே மாஸ் ஹீரோ பில்டப். 

பைரவா - சினிமா விமர்சனம்

டான்ஸைத் தவிர `குட் குட்' கீர்த்தி சுரேஷ். சதீஷ், `நான் கடவுள்' ராஜேந்திரன், தம்பி ராமையா என காமெடியை ஆளாளுக்கு பங்கு பிரித்ததில் மகிழவேண்டிய தருணங்கள் மிஸ்ஸிங். வில்லன் ஜெகபதிபாபுவைவிட, மெர்சல் காட்டுவது டேனியல் பாலாஜிதான்.

``மாணவனுக்குத் தகுதி இருக்கானு பார்க்கிறோம்... சொல்லிக்கொடுக்குற வாத்தியாருக்கு தகுதி இருக்கானு பார்க்கிறோம். ஆனா, அந்த காலேஜை நடத்துறவனுக்குத் தகுதி இருக்கானு பார்க்கிறோமா?''- எனப் படம் சொல்ல வரும் விஷயத்தை, வசனங்களிலேயே சொல்லிவிடுகிறார் இயக்குநர் பரதன். முக்கியமான மெசேஜ், மாஸ் ஹீரோ பில்டப், ஓ.கே-வான ஃப்ளாஷ்பேக், ஓங்கி அடிக்கும் இடைவேளை என எல்லாமே பக்கா. அதன் பிறகான திரைக்கதைதான் சறுக்கல்.

பைரவா - சினிமா விமர்சனம்

லாஜிக் கேள்விகள் லோடுலோடாக எழுகின்றன. கீர்த்திக்கு கூரியரில்தானே பத்திரிகை வருகிறது? அப்படியே அந்த ஆதார பென்டிரைவ் வருவதில் என்ன சிக்கல்? ஐந்து நிமிடங்களில் பஸ் வருவதற்குள் அரை மணி நேர ஃப்ளாஷ்பேக் சொல்கிறார் கீர்த்தி. எப்படியும் தன்னை சங்கிலியால் கட்டிப் போடுவார்கள் என முன்னரே தெரிந்து, குழந்தையிடம் ஹேர்பின் எடுக்கிறாரா விஜய்? அடப்போங்க ப்ரோ!

சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய் பாடியிருக்கும் `பாப்பா பாப்பா...'வும், டெரர் காட்டும் `பைரவா' தீம் மியூஸிக் மட்டுமே கேட்சிங். எம்.சுகுமாரின் கேமரா, செட்டுக்குள்ளேயே சுழல்கிறது. விறுவிறுப்பு குறையாமல் எடிட்டிங் செய்திருக்கிறார் பிரவீன் கே.எல்.

சொன்ன விதத்தைவிட சொன்ன விஷயத்துக்காக `பைரவா'வுக்கு வர்லாம்... வர்லாம்... வா!

- விகடன் விமர்சனக் குழு