Published:Updated:

“சந்திரமுகி சீக்குவல் ரெடியா இருக்கு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சந்திரமுகி சீக்குவல் ரெடியா இருக்கு!”
“சந்திரமுகி சீக்குவல் ரெடியா இருக்கு!”

பா.ஜான்ஸன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
“சந்திரமுகி சீக்குவல் ரெடியா இருக்கு!”

`` `சிவலிங்கா', கன்னடத்தில் நான் இயக்கிய சூப்பர் ஹிட் படம். பொதுவா எந்த மொழிப்படமா இருந்தாலும் அது ஹிட்டுனு தெரிஞ்சாலே, தயாரிப்பாளர்கள், இயக்குநர்களைத் தேடுவாங்க . படம் நல்லா இருந்தா அது தானா அமையும். அப்படி அமைஞ்ச படம்தான் `சிவலிங்கா'. ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலுனு இது செம கூட்டணி. நிச்சயம் சூப்பர் ஹிட் படமா இருக்கும்'' - கனிவாகப் பேசுகிறார் இயக்குநர் பி.வாசு.

“சந்திரமுகி சீக்குவல் ரெடியா இருக்கு!”

``சி.ஐ.டி ஆபீஸர்னு சொன்னா, நம்புற மாதிரி இருக்கணும். இதுதான் இந்தப் படத்தின் ஹீரோவுக்கான மிக முக்கியத் தகுதி. ராகவா லாரன்ஸ் இந்த மாதிரி ரோல் பண்ணது இல்லை. அதனாலேயே படம் செம ஃப்ரெஷ்ஷா இருக்கு.

கன்னட `சிவலிங்கா' படம் ரிலீஸ் ஆகி பரபரப்பாப் பேசப்பட்டபோது, லாரன்ஸுக்கு போன் பண்ணி, படம் பார்க்கக் கூப்பிட்டேன். அவர் படம் பார்த்து முடிச்சதுமே `தமிழில் இதைப் பண்ணலாம்'னு ஆர்வமா வந்தார். ஒருத்தரை நடிங்கனு ஃபோர்ஸ் பண்ணி உள்ளே கொண்டுவர்றதைவிட, அவங்களே ஆர்வமா வரும்போது ரிசல்ட் மிகப் பிரமாதமா இருக்கும். அது `சிவலிங்கா'வில் நடந்திருக்கு.''

``ரித்திகா சிங்கை ஹீரோயினா நடிக்கவைக்க எதுவும் ஸ்பெஷல் காரணம் இருக்கா?''

`` `இறுதிச்சுற்று' படத்துல ரித்திகா சிங் பெர்ஃபாமன்ஸ் பார்த்துச் சிலிர்த்துட்டேன். இப்படி பெர்ஃபார்ம் பண்ற ஹீரோயின் தமிழுக்கு வந்திருக்கும்போது, அவங்களை மிஸ்பண்ணலாமா? `சிவலிங்கா' படத்தின் ஹீரோயின் செம துறுதுறுன்னு இருக்கணும். அதுக்கு அப்படியே பொருந்துற மாதிரி இருந்தாங்க ரித்திகா சிங். படத்தின் கதையை நான் ரித்திகாகிட்ட சொன்னதும், செம ஜாலியாகிட்டாங்க. `என்னோட ரியல் கேரக்டர் மாதிரியே இருக்கு. உடனே நடிக்கிறேன்'னு  ஓ.கே சொல்லிட்டாங்க.''

“சந்திரமுகி சீக்குவல் ரெடியா இருக்கு!”

``நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவும் உங்கள் படத்துக்குள் வந்திருக்கிறார். காமெடி எப்படி வந்திருக்கு?''

``என்னைப் பொறுத்தவரை ஒரு சின்ன இடைவெளியை அவர் எடுத்துக்கிட்டாரே தவிர, மக்கள் அவருக்கு பிரேக் கொடுக்கவே இல்லை. அவர் ஒரு இடத்துக்கு வந்தாலே, அந்த இடம் சிரிப்பால் நிறைஞ்சிருக்கும். ஷூட்டிங்குக்கு வந்து `குட்மார்னிங்ணே'னு அவர் பேச ஆரம்பிச்சாலே, சிரிப்பு வெடிக்கும். `சந்திரமுகி' படத்தில் நீங்கள் பார்த்த காமெடிகள் குறைவுதான். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு நொடியும் சிரிக்கவைத்துக்கொண்டே இருந்தார் வடிவேல். அவருக்கு டயலாக் காமெடியைவிட, பாடி லாங்வேஜ் காமெடி செமயா வொர்க்அவுட் ஆகும். அந்த மாதிரி ஒரு கேரக்டர்லதான் `சிவலிங்கா'வில் நடிச்சிருக்கிறார்.''

“சந்திரமுகி சீக்குவல் ரெடியா இருக்கு!”

``தமிழ், கன்னடம், மலையாளம்னு எல்லா மொழிகளிலும் படம் இயக்குறீங்க. மக்களின் ரசனையை எப்படிப் புரிஞ்சுக்குறீங்க?''

``கன்னடத்தில், மெதுவாக நகரும் காட்சிகளை வைக்க முடியும். மலையாளத்தில், பொயட்டிக்கா கதை சொன்னால் ரசிப்பாங்க. தமிழ்ப் படங்களை மலையாள ரசிகர்கள் ரசிக்கிறாங்க. ஆனால், மலையாளப் படத்தை அப்படியே தமிழில் எடுத்தால், இங்கே யாரும் ரசிக்க மாட்டாங்க. சிவராஜ்குமார் மெதுவா அப்படித் திரும்பிப் பார்த்துப் பேசறார்னு ஒரு சீன் வெச்சா, கன்னடத்தில் மாஸ் சீனா கொண்டாடுவாங்க. ஆனா, தமிழ்ல அப்படி ஒரு சீன் வெச்சா `அட சீக்கிரம் சொல்லுயா!'னு கிண்டலடிப்பாங்க. தமிழில் காமெடிக்கும் இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கணும். ரொம்ப இறுக்கமா படம் எடுத்தால், இங்கே வொர்க்அவுட் ஆகாது. ஆடியன்ஸுக்கு என்ன தேவைங்கிறதைவிட நாம சொல்ற விதம், இதுவரை சொன்ன விதம்னு ஒண்ணு இருக்கு. அதை மொழிக்கு, மக்களுக்கு ஏற்ற மாதிரி கொடுக்கணும். அவ்வளவுதான்.''

“சந்திரமுகி சீக்குவல் ரெடியா இருக்கு!”


`` `சந்திரமுகி பார்ட்-2' எடுக்கப்போறதா நிறையத் தகவல்கள் வெளிவருகின்றனவே... ரஜினிகாந்துடன் மீண்டும் இணையும் எண்ணம் இருக்கிறதா?''

``நான் ரஜினி சாரை ரசிச்சுப் பார்த்தவன். `இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் ஸ்ரீதர் சார்கிட்ட நான் உதவியாளராச் சேர்ந்தேன். அப்போ ரஜினி, கமல்னு எல்லோரையும் பார்த்துக்கிட்டே இருப்பேன். அப்படி நான் ரசிச்சுப் பார்த்த ரஜினி சார், `என் தங்கச்சி படிச்சவ' படம் பார்த்துட்டு `வாசு, எனக்கு ஒரு கதை பண்ணுங்க'னு சொன்னார். ஒரு கதையால் ஆரம்பிச்சது அந்தப் பயணம். `பணக்காரன்', `மன்னன்', `உழைப்பாளி', `சந்திரமுகி', `குசேலன்'னு ஐந்து படங்கள் பண்ணிட்டேன். இது எல்லாத்துக்கும் அவர் என் வேலை மீதும் என் மீதும் நம்பிக்கை வெச்சதுதான் காரணம். `சந்திரமுகி'யோட சீக்குவல் ஸ்க்ரிப்ட் ரெடியா இருக்கு. ரஜினி சார் நடிச்சா, அதைப் பண்ணலாம்னு வெச்சிருக்கேன். பொறுத்திருப்போம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு