Published:Updated:

சினிமா விமர்சனம் : தம்பி வெட்டோத்தி சுந்திரம்

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : தம்பி வெட்டோத்தி சுந்திரம்

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

வேலை இல்லாத் திண்டாட்டத்தால் திசை மாறிச் செல்பவனே... 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்’!

 பி.எட். படித்துவிட்டு ஆசிரியர் வேலைக்காகக் காத்திருக்கும் கரண், வங்கிக் கடனில் மூழ்கும் வீட்டை மீட்க, கடத்தல்காரராக மாறுகிறார். நடுவே, உள்ளூர் தாதா மகள் அஞ்சலியோடு காதல். கடத்தலும் காதலும் கரணின் வாழ்க்கையை எப்படித் திசை மாற்றுகின்றன என்பதே மீதிக் கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இறந்தவர்களை வீட்டுக்குப் பின்னாலேயே புதைத்து கல்லறை கட்டும் வழக்கம், தமிழக-கேரள எல்லை அரிசி, சாராயக் கடத்தல்கள், சற்றே மலையாளம் கலந்த வட்டாரமொழி எனக் குமரி மாவட்டத்தை அசலாகப் படம் பிடித்துக் காட்டியதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான்.

சினிமா விமர்சனம் : தம்பி வெட்டோத்தி சுந்திரம்

காதல், புத்திசாலித்தனம், கோபம், வீரம், அந்த க்ளைமாக்ஸ் சிதைவுக்குப் பிறகு பரிதாபம் என 'வெட்டோத்தி சுந்தர’மாகத் தேர்ந்த 'பாடி லாங்குவேஜ்’ கரணிடம். 'படிப்புக்குனு ஒரு மரியாதை இருக்கு’ என்று கடத்தல் தொழிலைக் கடந்துபோகும் போதும், பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சவால்விட்டுக் கடத்தும்போதும் இரு வேறு பரிமாணங்களைக் காட்டுகிறார்.

'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்று தோள்களைக் குலுக்கி நடப்ப தாகட்டும், 'தோழா ரூமை போடுறோம்... ஒரு கட்டிங்கைப் போடுறோம்... யோசிக்கிறோம்’ என்று அத்தனை சிக்கலிலும் அலட்சியமாகப் பேசுவதாகட்டும் குண்டக்க மண்டக்க கலக்கியிருக்கிறார் சரவணன். கூடவே இருந்து வளர்த்துவிட்ட நண்பன் விரட்டி விட்டதும் 'அவன் நல்லா இருக்கணும்டா... இல்லைன்னா, நான் அவனுக்காக உழைச் சது வீணாப்போயிரும்’ என்று கலங்கும் இடத்தில்... சரவணன் வெல்டன்!

அஞ்சலிக்கு நடிப்பை நிரூபிக்க மீண்டும் ஒரு படம். கரணின் காதலுக்கும் அப்பாவின் பாசத் துக்கும் இடையில் அல்லாடும் பெண்ணாக கச்சிதமாக நடித்துஇருக்கிறார். வில்லனாக வரும் ஜே.எஸ். தாதா கேரக்டருக்கு ஏகப் பொருத்தம்.

வித்யாசாகரின் இசையில் 'கொலைகாரா’ பாடல் மட்டும் வருடல் சுகம். பின்னணி இசையில் இன்னும் வேகம் புதைத்திருக் கலாம்!  

சினிமா விமர்சனம் : தம்பி வெட்டோத்தி சுந்திரம்

சாராயக் கடத்தல் தொடர்பான விதவித மான டெக்னிக்குகள், கடத்தல்காரர்களோடு கூட்டணிவைத்துக் கவிழ்க்கும் போலீஸ் உத்தி, எதிரிகளின் கண்களைக் குருடாக்கும் சுண்ணாம்பு ஆசிட் ஆயுதம், திருவிழாவில் ஊற்றப்படும் மாங்காத்தண்ணீர் எனப் பல விஷயங்களைச் சுவாரஸ்யமாக, இயல்பாகப் பதிவுசெய்திருப்பது பலம். ஒவ்வொரு கேரக்டருக்கும் கிளைக் கதைகளைச் சொல்லிக் குழப்பியடிப்பது பலவீனம்.

கதை எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது சார்?  தடுக்கி விழுந்தால் ஆயிரம் தனியார் நிறுவனங்கள் இருக்க... அரசு வேலை கிடைக்காமல்  தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை எப்படி நம்பு வது?

இருந்தாலும் புதிய களம், புதிய கதை எடுத்த விதத்தில் மனம் தொடுகிறார் இந்தத் 'தம்பி’!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism