Published:Updated:

ஐ லவ் யூ சொன்னதே இல்லை!

ம.கா.செந்தில்குமார்

ஐ லவ் யூ சொன்னதே இல்லை!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
ஐ லவ் யூ சொன்னதே இல்லை!
##~##

''நம்புவீங்களா... 'அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் வெளியான சமயம் 'பிரசன்னா - சினேகா காதல்’னு விகடன்ல ரேப்பர் ஸ்டோரி வந்திருந்தது. அந்தச் செய்திக்காகவே பிரஸ் மீட்வெச்சு, 'அப்படிலாம் இல்லை... எங்க ரெண்டு பேருக்கும் இடையே நட்பு மட்டும்தான்’னு சொன்னோம். ஆனா, சும்மா பேசிச் சிரிச்சுக்கக்கூட தமிழ் பேசும் ஆட்கள் இல்லாம, அமெரிக்காவில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயம்தான் நாங்க ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஷூட்டிங்ல சும்மா பேசிட்டு இருந்த நாங்க, அது முடிஞ்ச பிறகு தினமும் பேசிக்காம இருக்க முடியலை. ஒரு நாள் பேசாம இருந்தாக்கூட எதையோ மிஸ் பண்ண மாதிரி இருக்கும். அதுதான் காதல்னு ரொம்ப லேட்டாதான் புரிஞ்சது. ஆனா, இப்போ வரை 'ஐ லவ் யூ’னு ஒரு எஸ்.எம்.எஸ்-கூட அனுப்பிக்கிட்டது இல்லை. ஆனாலும், நாங்க காதலில் இருக்கிறோம்!'' - 'கவித கவித’யாகப் பேசுகிறார் பிரசன்னா. தமிழ் சினிமா கொண்டாடும் புன்னகை தேவதையைக் கரம்பற்றப்போகும் பூரிப்பு

ஐ லவ் யூ சொன்னதே இல்லை!

அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளிலும்!

''இத்தனைக்கும் 'சினேகா-பிரசன்னா’ காதல்னு முதல் கிசு கிசு கிளம்பினப்போ, அவங்க நான் நடிச்ச ஒரு படத்தைக்கூடப் பார்த்தது இல்லையாம். நான் அவங்க நடிச்ச 'ஆட்டோகிராஃப்’, 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படங்களை மட்டுமே பார்த்திருந்தேன். 'ஏன் இப்படிலாம் எழுதுறாங்க’னு ஆரம்பத்துல எரிச்சலாத் தான் இருந்துச்சு.  

எங்கேயாவது பொது இடங்களில் பார்த்தால் 'ஹாய்... ஹலோ...’ சொல்லிக்குவோம். சும்மா ஒரு ப்ரீமியர் ஷோவில் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலே, மறு நாள் முந்தைய கிசுகிசுக்களுக்கு ஆதாரம் கிடைச்ச மாதிரி அந்தப் படங்களை பப்ளிஷ் பண்ணுவாங்க. அதைப் பத்தி கமென்ட்ஸ் பாஸ் பண்ணிக்க ஆரம்பிச்சுதான் ரெண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்.

அப்புறம் ரெண்டு பேரும் நடிச்ச படங்களை பரஸ்பரம் பார்க்கணும்னு அக்ரிமென்ட் போட்டுக்கிட்டோம். 'கோவா’ படத்தில் நான் அவங்களுக்குக் கணவனா கெஸ்ட் அப்பியரன்ஸ்ல நடிச்சது ரொம்ப எதேச்சையா நடந்தது. அது கிசுகிசு ஜுரத்தை இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோனது. கூடவே எங்க காதலையும்! அந்தக் கிசுகிசுக் கள்தான் எங்களைச் சேர்த்து வெச்சதுனு சொல்லணும்.

ஐ லவ் யூ சொன்னதே இல்லை!

அறிமுகம் இல்லாதவர்களின் வாழ்த்துக்கள் ஃபேஸ்புக், டிவிட்டர்ல கொட்டுது. வெளியே போறப்ப யாரைப் பார்த்தாலும் 'நல்ல விஷயம் சார்’னு கைகுலுக்கி வாழ்த்துறாங்க.

நரேன், வெங்கட்பிரபு டீம்னு ஃப்ரெண்ட்ஸ்தான் கலாய்க்குறாங்க. 'டேய்! வழக்கமா காதல் விஷயத்தை நண்பர்களுக்குத்தான் முதல்ல சொல்வாங்க. அவங்க மூலமாத் தான் உலகத்துக்குச் செய்தி போகும். ஆனா, மீடியாகிட்ட முதல்ல 'நான் காதலிக்கிறேன்’னு பிரஸ் ரிலீஸ் அனுப்பிச்சது நீ ஒருத்தன்தான்டா’னு செம வாரு வார்றாங்க. எங்க ரெண்டு வீட்லயும் சம்மதிச்சுட்டாங்க.

சினேகா இப்போ கத்தார்ல அவங்க அண்ணன் வீட்ல இருக்காங்க. அனேகமா அடுத்த வருஷம் கல்யாணத்தை ஃபிக்ஸ் செய்வாங்க.  

'

ஐ லவ் யூ சொன்னதே இல்லை!

டேய் மச்சி, சுசி.கணேசனோட 'விரும்புகிறேன்’ படத்துலதான் சினேகா அறிமுகம். அவரோட அடுத்த படமான 'ஃபைவ் ஸ்டார்’ல நீ அறிமுகம். அப்பவே பிக்கப் பண்ணிட்டியா? உண்மை சொல்லுடா’னு காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்தான் செம ராவடி பண்றாங்க. அவங்க சொன்ன பிறகுதான் எனக்கே அது ஃப்ளாஷ் ஆச்சு. சினேகாகிட்ட சொன்னேன். 'அட... ஆமாம்ல’னு சந்தோஷப்பட்டாங்க. அந்த சந்தோஷம் எங்க ரெண்டு பேருக்கும் இடையில காலம் முழுக்க நிலைச்சு இருக்கணும். அதுதான் இப்போ என் வேண்டுதல். எங்களுக்காக வேண்டிக்கங்க!''

கனிவாக முடிக்கிறார் பிரசன்னா.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism