Published:Updated:

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!
பிரீமியம் ஸ்டோரி
வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

ஆர்.வைதேகி

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

ஆர்.வைதேகி

Published:Updated:
வந்துட்டாங்க... வந்துட்டாங்க!
பிரீமியம் ஸ்டோரி
வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

து, பெண் இயக்குநர்களுக்கான சீஸன். சுதா கொங்கரா தொடங்கி உஷா கிருஷ்ணன் வரை முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த சில பெண் இயக்குநர்களின் அடுத்த படைப்புகள் பற்றிய ஹைலைட்ஸ் இங்கே...

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

ஐஸ்வர்யா தனுஷ்

தனுஷ் நடிப்பில் `3' படத்தில் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா, அடுத்து கவுதம் கார்த்திக் நடிப்பில் `வை ராஜா வை' படத்தை இயக்கினார்.

ஸ்டன்ட் கலைஞர்கள், ஜூனியர் நட்சத்திரங்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி `சினிமா வீரன்' என்ற பெயரில் டாகுமென்டரி வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

இப்போது பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் பயோபிக்கை இயக்கும் வேலைகளில் ஐஸ்வர்யா பிஸி. ராஜு முருகனின் வசனம், இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ஹைலைட். ஒளிப்பதிவு வேல்ராஜ். இசை ஷான் ரோல்டன். மாரியப்பனின் கேரக்டரில் தனுஷை நடிக்கவைப்பதா அல்லது மாரியப்பனையே நடிக்கவைப்பதா என ஆலோசனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டே திரைக்கு வர இருக்கிறான் `மாரியப்பன்'.

செளந்தர்யா ரஜினிகாந்த்

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

`இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் போட்டோ ரியலிஸ்ட்டிக் 3டி அனிமேட்டட் படம்' என்ற பெருமைக்குரிய `கோச்சடையான்' படம்தான், செளந்தர்யா ரஜினிகாந்தின் முதல் படம். அடுத்து பக்கா கமர்ஷியலாக ஒரு படம் பண்ணத் திட்டமிட்டார். கலைப்புலி தாணு தயாரிப்பில் முழுவதும் புதுமுகங்களைவைத்து ஒரு படம் இயக்கும் எண்ணத்தில் ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்தன. புதுமுகங்களை வைத்து எடுக்கும் படத்தில், தான் எதிர்பார்க்கும் அளவுக்கு ரீச் இருக்காது என நினைத்தவர், மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து அந்த புராஜெக்ட்டைத் திட்டமிட்டார். அந்த முயற்சியும் பாதியிலேயே கைவிடப்பட்டது. அடுத்து தனுஷ் ஹீரோவாக நடிக்க, `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?' என்ற படம் முடிவானது. அதையே `விஐபி 2' எனப் பெயர் மாற்றப்பட்டு, பட வேலைகள் தொடங்கின. ஹீரோ, இணை தயாரிப்பாளர், ஸ்கிரிப்ட் என தனுஷின் பங்கு இந்தப் படத்தில் அதிகம்.

அனிருத்துக்குப் பதில் ஷான் ரோல்டனின் இசை, பாலிவுட் நடிகை கஜோலின் நடிப்பு என `விஐபி-2' கூடுதல் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

உஷா கிருஷ்ணன்

`ராஜா மந்திரி' என்ற முதல் படத்திலேயே காமெடி அஸ்திரத்தைக் கையில் எடுத்துக் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் உஷா. அடுத்து, மனித மனங்களின் மெல்லிய உணர்வுகளைப் பற்றி பேசும் கதையோடு களம் இறங்குகிறார்.

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

`` `யாதும் ஊரே' என்ற இந்தப் படம், ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகிறது. பயணத்தில் ஆர்வம் உள்ள ஹீரோவும், உணர்வுகளின் கலவையான ஹீரோயினும் சந்திக்கிறார்கள். உறவுகளைப் பற்றியும், உறவுச் சிக்கல்களைப் பற்றியும், ஆண் பெண் பார்வைகள் எப்படி இருக்கின்றன என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்கிறது படம். பள்ளிக்கூடம், கல்லூரி, வேலை எனப் போட்டுவைத்த வட்டங்களுக்குள் வாழ்வதைத் தவிர்த்து, அந்தக் கணத்துக்காக மட்டுமே வாழும் இருவரின் கதை. இவர்களின் கடந்தகால முறிந்த உறவுகள், இலக்கு அற்ற வாழ்க்கை, இந்தக் கணத்துக்காக வாழத் துடிக்கும் ஆர்வம் ஆகியவற்றைச் சுற்றி நகரும் இந்தக் கதையில், அதீதக் கற்பனைகள் இருக்காது'' என்கிறார் இயக்குநர்.

தெற்றுப்பல் அழகி ஸ்வாதி ரெட்டி ஹீரோயினாகவும் மலையாள இளைஞர் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். அபிநந்தன், ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். பயணம் பற்றிய கதை என்பதால், லடாக்கில் இருந்து ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

ஹலீதா ஷமீம்

குழந்தைகளுக்கான சாகசக் கதையாக `பூவரசம் பீப்பீ'யை இயக்கிய ஹலீதாவின் அடுத்த முயற்சி, சற்றே வளர்ந்த குழந்தைகளைப் பற்றியது. படத்தின் பெயர் `மின்மினி'.

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

`பூவசரம் பீப்பீ'யில் நடித்த இரண்டு குழந்தைகளும், `பாபநாசம்' படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் அனிலும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த பாதியில் குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதுபோல் கதை நகர்வதால், மொத்த டீமும் குழந்தைகளின் நிஜ வளர்ச்சிக்காக வெயிட்டிங்.

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

``நாம் வளர வளர, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்கிறோம். ஆனால் பதின்ம வயதினர், தங்களின் நட்பு, கனவு, உணர்வுகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரண்டு கேரக்டர்கள் எதிர்கொள்ளும் குற்ற உணர்வில்தான் கதையே நகரும்'' - கதைக்கான ஒன்லைன் சொல்கிறார் ஹலீதா.

புஷ்கர் - காயத்ரி

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

`ஓரம் போ' மற்றும் `வ' என இரண்டு படங்களை இயக்கிவிட்டு, கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் புஷ்கர்-காயத்ரி. தமிழ் சினிமாவின் கணவன்-மனைவி இயக்குநர் கூட்டணி.

வந்துட்டாங்க... வந்துட்டாங்க!

விஜய் சேதுபதி, மாதவன் நடிக்கும் `விக்ரம்-வேதா' என்ற படத்தை இயக்குகிறார்கள். விக்ரமாதித்தன்- வேதாளம் கதை அமைப்பின் நவீன வடிவம்தான் படத்தின் கரு. வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா நாத் என இரண்டு ஹீரோயின்கள். 70 சதவிகிதப் பட வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், படம் மே மாதம் ரிலீஸ். ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத். இசையமைப்பாளர் சி.எஸ்.சாம்.

புஷ்கர் - காயத்ரியின் முந்தைய இரண்டு படங்களுமே காமெடிக்கு கியாரன்டி தந்தவை. `விக்ரம்-வேதா', ஆக் ஷன் ப்ளஸ் த்ரில்லர் கதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism