
``அந்த நடிகர், காளையை அடக்கப் போனாரே என்ன ஆச்சு?''
``வாடிவாசல் வரை போயிட்டு, மீதி தூரத்துக்கு அவரோட `டூப்'பை அனுப்பிட்டாராம்.''
- ஆர்.மணிவண்ணன்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``தலைவர் வீட்டுக்கு ரெய்டு வந்த அதிகாரிங்க கடுப்பாகிட்டாங்களாமே ஏன்?''
``தகவல் கசிந்ததுல, `ரெய்டாளர்களே வருக'னு ஃப்ளெக்ஸ் வெச்சிருக்கார்!''
- எஸ்.ராமன்

``தலைவர் எதுக்காக திடீர்னு ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் போறார்?''
``கூட்டத்தைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சாம்.''
- என்.உஷாதேவி

``தலைவர் ஜெயிலுக்குப் போன 100-வது நாளைக் கொண்டாடி, கட்சி ஆபீஸ்ல விருந்து போடுறாங்களாம்.''
``என்ன... கறி விருந்தா?''
``இல்லை, களி விருந்து.''
- S.N.பாலா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism