Published:Updated:

“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”

“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”
பிரீமியம் ஸ்டோரி
“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”

பா.ஜான்ஸன்

“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”

பா.ஜான்ஸன்

Published:Updated:
“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”
பிரீமியம் ஸ்டோரி
“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”

`` `குற்றம் கடிதல்’ படத்தைப் பொறுத்தவரை எனக்கு ரெண்டு கமென்ட்ஸ் முக்கியமானவை. ஒருத்தங்க ஃப்ளைட்ல `குற்றம் கடிதல்' பார்த்துட்டு, `இவ்ளோ நாள் பார்க்கத் தவறிட்டேன்’னு மெசேஜ் பண்ணாங்க. நம்மளைக் கவனிக்கிறாங்க என்ற எண்ணம் ஒரு பூஸ்ட் கொடுத்தது. இன்னொண்ணு, தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குனு பார்க்கப் போனேன். இடைவேளைக்குப் பிறகு உள்ளே நுழைஞ்சேன். எல்லாரும் படத்தை அமைதியாப் பார்த்துட்டிருந்தாங்க. படம் முடிஞ்சு தியேட்டருக்கு வெளியே போயிட்டிருந்த ஒருத்தரைக் கூப்பிட்டு, `தல... படம் எப்படி இருக்கு?'னு கேட்டேன். `செம்ம்ம்மய்யா இருக்கு. உள்ளே போய்ச் சிக்கிடாத'னு படத்தின் விமர்சனத்தை ஒரே வரியில் சொல்லிட்டார். `குற்றம் கடிதல்' படத்துக்கான ஆடியன்ஸ் வேறனு என்னால் சமாதானப்படுத்திக்க முடியலை. ஏன்னா, நான் சொல்ல விரும்பும் கருத்துகளை, எல்லாவித ஆடியன்ஸுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கணும்கிறதுதான் என் ஆசை. அப்பதான் எல்லாருக்குமான படம் எடுக்கணும்னு முடிவுபண்ணேன். அப்படியான படம்தான் `மகளிர் மட்டும்' '' - நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் பிரம்மா. `குற்றம் கடிதல்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர், இப்போது ஜோதிகாவை முன்னிலைப்படுத்தி `மகளிர் மட்டும்’ படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”


``ஜோதிகாவுக்கு என்ன ரோல்?''


``பிரபாவதிங்கிற கதாபாத்திரம். ஓர் ஆவணப்பட இயக்குநரா வர்றாங்க. பொண்ணுங்க ஃப்ளைட்டே ஓட்டுறாங்க. புல்லட் ஆச்சர்யமானது எல்லாம் இல்லை. ஆனாலும், திடீர்னு ரோட்ல ஒரு பொண்ணு புல்லட்ல போனா, ரெண்டு நொடிகளாவது கவனிப்போம்ல. `36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவைப் பார்த்த பலருக்கும் அனுதாபம் வந்திருக்கும். இந்தப் படத்தில் அவங்களைப் பார்க்கும் எல்லாருக்கும் ஒரு ஆச்சர்யமும் ஊக்கமும் வரும்.

வேலையில் அவ்வளவு உண்மையா இருக்கணும்னு நினைக்கும் நடிகை ஜோதிகா. அவங்க நடிக்காத ரோல் இல்லை. ஆனாலும் இப்பவும் கத்துக்கணும்கிற குணத்தோடு இருக்காங்க. மொத்தக் கதையும் அவங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டேன். இருந்தாலும் அடுத்த நாள் என்ன எடுக்கப்போறோம்னு தெரிஞ்சுப்பாங்க. அவங்க என்ன வசனம் பேசப்போறாங்கனு மட்டும் இல்ல... அந்த சீன்ல இன்னொரு கேரக்டர் இருந்தா, அவங்க என்ன பேசுவாங்கனும் கேட்டுட்டுப் போய் அதுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திட்டு, முதல் ஆளா வந்து நிற்பாங்க. பிரபாவதியா அவங்களே தன்னை மாத்திக்கிட்டு வந்தாங்க.

இந்த ரோலுக்கு அவங்களே டப்பிங் பேசினா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அவங்ககிட்ட சொன்னேன், இதுக்கு முன்னாடி `மாயாவி' படத்துக்கு மட்டும் அவங்க டப்பிங் பேசியிருக்காங்க. அதுக்குப் பிறகு டப்பிங் பேசலையேனு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா, அவங்க அதுக்கு எந்த மறுப்பும் சொல்லாம வந்து கலந்துகிட்டாங்க. வீட்ல அதிகமா தமிழ்ல பேசுவாங்கங்கிறதால சரளமா பேசினாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”

படத்தில் அவங்க பைக்ல போற மாதிரி ஒரு காட்சி இருக்கு. `நீங்க புல்லட் ஓட்டவேண்டியது இருக்கும்'னு சொன்னேன். அவங்க நினைச்சா, `எனக்கு ஓட்டத் தெரியாதே'னு சொல்லி, மறுத்திருக்கலாம். ஆனா, மூணே வாரங்கள்ல புல்லட் ஓட்டிப் பழகிட்டு வந்து நடிச்சாங்க. அவங்களுக்குக் கத்துக்கொடுத்தது சூர்யா சார்.''

``ஜோதிகா கூடவே ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியானு பெரிய மகளிர் அணியே இருக்கே?’’

``இவங்க எல்லோருமே படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள். சொல்லப்போனால், ஜோதிகாவுக்கு நிகரான கதாபாத்திரங்கள். ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா மூணு பேரும் படத்துல நிச்சயம் இருக்கணும்னு கதை பண்ணும்போதே முடிவுபண்ணிட்டேன். இந்த மகளிர் அணி தவிர, நாசர், லிவிங்ஸ்டன், பாவேல் நவகீதன், கோகுல் என முக்கியமான நான்கு பேரும் இருக்காங்க. படத்தில் நடிச்சிருக்கிற எல்லோருமே சூப்பர் சீனியர்ஸ். நான்தான் ஜூனியர்.''

“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”

``முதல் படத்தில் புதுமுகங்களை இயக்கினதுக்கும், இப்போது பிரபலமான நடிகர்களை இயக்குறதுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?''

``புதுமுகங்களை வெச்சு படம் பண்ணும்போது, கதை மட்டும்தான் ஹீரோ. அது மட்டுமே பிரதானம். ஆனால், பிரபலமான நடிகர்கள் நடிக்கும்போது அவர்கள் எப்படிச் சிரிப்பாங்க, எப்படிக் கோபப்படுவாங்கனு எல்லாமே ஆடியன்ஸுக்குத் தெரியும். சில நேரங்கள்ல கதையால் நாம கொடுக்க நினைக்கும் அதிர்வு விடுபட்டுப்போகும். சில நேரம் அந்த அதிர்வுகள் பல மடங்கு கூடும். அது மாஸ் ஆடியன்ஸுக்கும் போய்ச் சேரும். அதுக்கு ஏற்றபடி நாம் கதையையும் திரைக்கதையையும் கட்டமைக்கணும்.’’

``கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய படம் `குற்றம் குடிதல்'. இந்தப் படத்திலும் கருத்து இருக்குமா?''

“ஜோதிகா, பிரபாவதியா மாறிட்டாங்க”

``கருத்து சொல்ற படம்னாலே கொஞ்சம் வித்தியாசமாப் பார்க்கிறாங்க. அந்த வார்த்தை க்ளிஷேவா மாறிடுச்சு. ஆனா, எல்லா படங்களும் ஏதோ ஒரு விஷயத்தை உங்ககிட்ட சேர்க்கத்தான் செய்யுது. அதே போல இந்தப் படமும் ரொம்பவும் தேவையான கருத்தைப் பற்றி பேசப்போகுது. `நான் கருத்து சொல்றேன். நீ கேளு'னு இல்லாமல், பார்ப்பவர்களுக்கு உணர்வுபூர்வமான படமாக இருக்கும்.''

``தயாரிப்பாளர் சூர்யா என்ன சொன்னார்?''

``சூர்யா சாருக்கு இந்தக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. முதல் நாள் ஷூட் போறப்போ, `அழகான ஒரு படத்தை எடுத்துக் கொடுங்க. வாழ்த்துகள்'னு மெசேஜ் அனுப்பினார். அதுக்குப் பிறகான சந்திப்புகள் எல்லாவற்றிலும் படம் எப்படி வந்துட்டு இருக்குங்கிறதைவிட, `என்னத் தேவை? எந்த மாதிரியான சப்போர்ட் வேணும்'னுதான் கேட்டார். ரொம்ப அன்பான மனிதர். அவர் என் மேல் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கேன். ரசிகர்கள்தான் படம் பார்த்துட்டுச் சொல்லணும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism