“எல்லாருக்கும் பிப்ரவரி 14 ஒரு நாள் மட்டும் தான் வேலன்டைன்ஸ் டே. ஆனா எங்களுக்கு, அது வேலன்டைன்ஸ் மாசம். நாங்க முதல்முதல்ல சந்திச்சது, ரியோவோட பிறந்தநாள், எங்க கல்யாணம்னு பிப்ரவரி எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல்'' - ஸ்ருதியின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கிறது உற்சாகம். `சரவணன் - மீனாட்சி' ரியோவின் `ஓ.கே கண்மணி'தான் ஸ்ருதி. இந்தக் காதலர் தினத்துக்கு முன்னதாகவே கல்யாணத்துக்குத் தயாராகிவருகிறது ரியோ-ஸ்ருதி ஜோடி.

``நான் ஈரோட்டுப் பையன். கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் படிப்புக்கு ஆறே மாசத்துல குட்பை சொல்லிட்டு, நண்பர்களின் வழிகாட்டுதலால் மீடியா பக்கம் வந்தேன். விஜய் டி.வி-யில் `கனாக்காணும் காலங்கள்' நடிச்சேன். சன் மியூஸிக் சேனல்ல டெஸ்ட் ஷூட்டுக்காகப் போயிருந்தேன். அதைச் சரியா பண்ணிட்டேன்னா, சேனல்ல வி.ஜே ஆகிடலாம்னு ஒரு நம்பிக்கை. இன்னொரு பக்கம் மாடலிங் வாய்ப்புக்கும் ட்ரை பண்ணிட்டிருந்தேன். போர்ட்ஃபோலியோ பண்றதுக்காக ஒரு போட்டோகிராஃபர்கிட்ட கேட்டப்ப, `உன்கூட சேர்ந்து போட்டோஷூட் பண்ண அழகான ஒரு பொண்ணு கிடைச்சா, உனக்கு போர்ட்ஃபோலியோ பண்ணித் தர்றேன்'னார். அப்படித் தேடினபோது அழகா யாரும் கிடைக்கலை. இவதான் கிடைச்சா'' என ஸ்ருதியை டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டத்துக்குள் இழுக்கிறார் ரியோ.

``நான் அப்போ விஸ்காம் கடைசி வருஷம் படிச்சுட்டிருந்தேன். முன்பின் தெரியாத ஒரு பொண்ணுகிட்ட கொஞ்சம்கூட வெட்கமே இல்லாம `போட்டோ ஷூட்டுக்கு வர முடியுமா?'னு ரியோ கேட்டான். அப்ப நான் குட்டி முடியோடு கொழுகொழுனு ரொம்ப க்யூட்டா இருப்பேன்.''

``இப்பவும் அப்படித்தான். ஹட்ச் டாக் மாதிரி க்யூட்டா இருக்கியே!'' என ஸ்ருதியை மீண்டும் உரசுகிறார் ரியோ.

``நான் போய்க் கேட்டதும், கேவலமான ஒரு ரியாக்ஷன் கொடுத்தா. அதையும் கண்டுக்காம என் நம்பரைக் கொடுத்துட்டு, `தப்பா எடுத்துக்காதீங்க, ஆர்வம் இருந்தா கூப்பிடுங்க'னு சொல்லிட்டு வந்துட்டேன். அடுத்த நாளே போன் பண்ணினா. ஆனா, அது என் போட்டோ ஷூட்டுக்கு ஓ.கே சொல்ல இல்லை. `உங்களை சன் மியூஸிக் டெஸ்ட் ஷூட்ல பார்த்தேன். அங்கே எனக்கு இன்டர்ன்ஷிப் கிடைக்க ஹெல்ப் பண்ண முடியுமா?'னு கேட்க. ஒருத்தன் நம்மகிட்ட ஒரு ஹெல்ப் கேட்டானே... அதைப் பற்றி யோசிக்காம, வெட்கமே இல்லாம என்கிட்ட இன்னொரு ஹெல்ப் கேட்டா'' என கவுன்டர் கொடுக்கிறார் ரியோ.

``ஒரு பொண்ணு உதவி கேட்கிறாளே... கட்டாயம் ஹெல்ப் பண்ணுவான்னு நினைச்சா, `எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை. என் டைரக்டர் நம்பர் தர்றேன்'னு கழண்டுக் கிட்டான். நான் டைரக்டர் கிட்ட பேசி இன்டர்ன்ஷிப் கிடைச்சுருச்சு. தேங்க்ஸ் சொல்றதுக்காக போன் பண்ணினேன். `ஓ... அப்படியா! எனக்கும் சேனல்ல வேலை கிடைச்சுருச்சு. அங்கே பார்ப்போம்'னு சொன்னான். மறுபடி நாங்க ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். ரெண்டு பேரும் பெர்சனல் விஷயங்களை நிறைய ஷேர் பண்ணிக் கிட்டோம். அது எங்களை இன்னும் குளோஸ் ஆக்கிடுச்சு. ரியோ எப்பவும் துறுதுறுனு இருப்பான். உண்மையைச் சொல்லணும்னா, அவனைப் பார்த்த முதல் நாளே எனக்குப் பிடிச்சுப்போச்சு. ஒருகட்டத்துல இது ஃப்ரெண்ட்ஷிப்புக்கும் மேலனு ரெண்டு பேருக்கும் புரிஞ்சது. அப்பவே நான் பாதி லவ்வைச் சொல்லிட்டேன். ஆனா ரியோ, எதுவுமே தெரியாத மாதிரி பயங்கரமா நடிச்சான். ரொம்ப யோசிச்சான். ஒரு வாரம் கழிச்சுத்தான் `நானும் லவ் பண்றேன்'னு ரியோ சொன்னான். ஒரு வார லேட்டுக்குக் காரணம், சஸ்பென்ஸ் கொடுக்கலாம்னு நினைச்சாராம்'' என ஸ்ருதி கலாய்க்க, தலை கோதுகிறார் ரியோ.

``ரியோவை, ஒரு ஃப்ரெண்டா எங்க வீட்டுக்கு அறிமுகப் படுத்தியிருந்தேன். ஒருகட்டத்துல அம்மாவுக்குச் சந்தேகம் வந்து கேட்டாங்க. நான் `ஆமாம்'னு சொன்னதும் அவங்களுக்கு ஷாக். என்கிட்ட நிறையப் பேசினாங்க. ரெண்டு பேரும் வேற வேற மதம், வேற வேற கலாசாரம். கல்யாணத்துக்குப் பிறகு, உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு யோசிச்சீங்களா? குழந்தையை எப்படி வளர்ப்பீங்கங்கிற அளவுக்குப் பல கேள்விகள். நானும் ரியோவும் தினம் தினம் அதைப் பற்றியெல்லாம் பேச ஆரம்பிச்சோம். அதுலதான் எங்க லவ் இன்னும் ஸ்ட்ராங் ஆச்சு. ஆனா, வீட்ல ஓ.கே-வா, இல்லையானு மட்டும் புரிஞ்சுக்க முடியலை. அந்த சஸ்பென்ஸ் எப்படி உடைஞ்சதுனு நீயே சொல்லு'' என்கிறார் ரியோவைப் பார்த்து.

``ஒருநாள் வீட்டுக்குக் கூப்பிட்டாங்க, போனேன். அவங்க அம்மா எனக்கு தடபுடலா விருந்துவெச்சு அசத்திட்டாங்க. அவங்க அப்பா ஒண்ணுமே பேசலை. திடீர்னு பக்கத்துல வந்து அவங்க அம்மாகிட்ட, `மாப்பிள்ளைனு ஒருத்தர் வந்துட்டா, என்னை மறந்துடணும்னு அர்த்தம் இல்லை'னார். எங்க காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைச்சுடுச்சுன்னு அப்பதான் தெரியும்.

எங்க வீட்டுல வேற மாதிரி சூழல். `ரஜினி முருகன்' படத்துல வர்ற மாதிரி பெரிய குடும்பம். எப்படிச் சொல்றதுனு தெரியலை. அப்ப எங்க வீட்டுல ஒரு விசேஷம் வந்தது. எங்க அக்காவோட ஃப்ரெண்டுனு சொல்லி ஸ்ருதியையும் வரவெச்சேன். வீட்ல எல்லாருக்கும் லேசா சந்தேகம் கிளம்பிருச்சு. சாப்பிட்டுக் கை கழுவப் போனவ, எங்க தாத்தாகிட்ட போய் `கை எங்கே அலம்பறது?'னு கேட்டிருக்கா. உடனே சத்தமா `ரியோ, ஐயர் பொண்ணைக் கூட்டிட்டு வந்திருக்கான்'னு சொல்லிட்டார். வீட்டுலயே ரொம்ப ஸ்ட்ரிக்ட்டானவர் எங்க தாத்தா. அவருக்கே இந்த மூஞ்சியைப் பிடிச்சிருச்சு. அவரே ஜாலியானதும் வீட்ல மத்தவங்களும் எங்களை ஏத்துக்கிட்டாங்க. இப்படியொரு சம்மதத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. ரெண்டு சைடும் பயங்கர சண்டை வரும். ஒரு லெவலுக்கு மேல வேணாம்னு சொல்லிடுவாங்க. ஓடிப்போயிடலாம்கிற அளவுக்கு யோசிச்சிருந்தோம்'' - ஆக்ஷன் எபிசோடு மிஸ் ஆனதில் ரியோ-ஸ்ருதி இருவருக்குமே வருத்தம்.

``பிப்ரவரி 9-ம் தேதி, ஈரோட்டுல இந்து முறைப்படி சடங்குகள். அடுத்த நாள் சர்ச்ல கல்யாணம். சென்னையில் ரிசப்ஷன். அவசியம் வந்துடுங்க'' என அன்போடு அழைக்கிறார் ஸ்ருதி.

``ஹனிமூன்..?''

``எங்க அப்பா, மாலத்தீவு கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல ஆர்த்தோ சர்ஜனா இருக்கார். அதனால மாலத்தீவுலயே அஞ்சு நாட்கள் ஹனிமூனுக்கு ஏற்பாடு பண்ணிக்கொடுக்கிறதா சொல்லியிருந்தார். `அஞ்சு நாள் கிடைக்கலைடி. ஷூட் இருக்கு. மூணு நாள்தான் இருக்கு'னு ரியோ சொன்னான். அதனால, கோவா வரைக்கும் ரோட் ட்ரிப் போகலாம்னு முடிவுபண்ணினோம். அதையும் சொதப்பி, `திடீர்னு ஒரு ஈவென்ட் வந்திருச்சு. ரெண்டு நாள்தான் இருக்கு'னான். வேற வழி இல்லாம கேரளா, ஆலப்பி போகலாம்னு முடிவுபண்ணினோம். அதையும் சொதப்பி ஒரு நாள்தான் இருக்குங்கிற நிலைமைக்குக் கொண்டுவந்துட்டான். `ஹனிமூனே வேணாம்டா... கல்யாணத்துக்காவது வருவியா?'ங்கிற நிலைமைதான் இப்போ'' என ஸ்ருதி கடுப்பாக, ``கூல் பேபி. ஆலப்பி ஹனிமூன் கன்ஃபர்ம். சன்செட் போட் ரைடு, கேண்டில் லைட் டின்னர்னு ரெண்டு நாளைக்குள்ள எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ரொமான்ஸை பேக் பண்ணி வெச்சிருக்கேன்'' என ஸ்ருதியின் முதுகில் தட்டுகிறார் ரியோ.

மீண்டும் ஆரம்பமாகிறது டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டம்!