ஃபேஸ்புக்கும் லைக்ஸும்போல, பாலும் தண்ணீரும்போல, வடிவேலுவும் மீம்ஸும்போல, தமிழ் சினிமாவும் காதலும் இரண்டறக் கலந்தவை. நம் ஊரில் கதையே இல்லாத படத்தைக்கூடப் பார்த்துவிடலாம். ஆனால், காதல் இல்லாத படம் ரொம்ப சிரமம்.

அப்படி, இருண்டுபோன இரண்டாம் உலகத்திலேயே பூப்பூக்கவைத்துப் பூச்சிகளை வாழவைக்கும் சக்தி படைத்தது தமிழ் சினிமா காதல். அப்படிப்பட்ட சினிமாவில், `காதல்' எனப்படும் கொடிய விலங்கு எந்தெந்தத் தருணத்தில் ஹீரோ - ஹீரோயின்களுக்கு இடையில் `பட்டறையைப் போட்டது’ எனப் பார்ப்போமா ஃப்ரெண்ட்ஸ்?

வழிகள் மூன்று...

வாழையடிவாழையாக தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு இருக்கவேண்டிய மிக முக்கியத் தகுதிகள், `அநியாயத்தைக் கண்டால் பொங்கணும்', `ஆபத்து நேரத்தில் உதவணும்', `அடிமனசை டச் பண்ணணும்'. இந்த மூன்று முத்தான மேட்டர்கள்தான் ஹீரோக்கள் மீது ஹீரோயின்களுக்குக் காதல் வைரஸைத் தாக்கச்செய்கின்றன. அந்தக் காலத்துக் கறுப்பு - வெள்ளை நாயகர்கள், இந்த மூன்று மேட்டர்களில் ஏதாவது ஒன்றை மட்டுமே கையில் எடுப்பார்கள்.

எம்.ஜி.ஆர்., `அநியாயத்தைக் கண்டால் பொங்கணும்' கோட்டாவைக் கையில் எடுத்துப்

புகுந்துவிளையாடியவர். வாயில் புகை பைப்போடு திரியும் பணக்காரர்கள், ஏழை மக்களைத் தாக்கும்போதும், நிரபராதிகள் தண்டிக்கப்படும்போதும், சட்டையை மடித்துவிட்டுக்கொண்டு மல்லுக்கட்டுவார். கூட்டத்தின் முன்வரிசையில் நின்று நெகிழ்ந்துபோய் அதைப் பார்க்கும் ஹீரோயின்கள், அவரை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பிப்பார்கள். அதேபோல், `அடி மனசை டச் பண்ணணும்' கோட்டாவை எடுத்துக்கொண்டு சென்டிமென்ட் சாறு பிழிவார் சிவாஜி. அதில் உருகி ஹீரோயின்களும் கண்களைக் கசக்க, காதல் துளிர்விட்டு முதல் பாதியிலே குடும்பம் குட்டி என செட்டில் ஆகிவிடுவார். மீதம் இருக்கும், `ஆபத்து நேரத்தில் உதவணும்' கோட்டாவைத் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் பார்த்துக்கொண்டார். அப்போது எல்லாம், இப்படித்தான் ஹீரோயின்களுக்கு ஹீரோக்கள் மீது காதல் வந்தது.

ரபரிபரிபரபா...

பெல்பாட்டம் போட்டுத் திரிந்த ஹீரோக்கள் மீது மட்டும் அந்தக்கால ஹீரோயின்களுக்கு ஏனோ காதலே வராது. `எங்கே காதலிப்பது... வீட்டில் தெரிந்தால் காலேஜைவிட்டு நிறுத்தி காரைக்குடியில் இருக்கும் சித்தி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்களோ!' என்ற பயம்தான், அதற்கு மிக முக்கியமான காரணம். `நீ படிச்சு, பெரிய ஆளா வரணும்’, `உன்னைக் கட்டிக்கப்போற பொண்ணு ரொம்பக் கொடுத்துவெச்சவ' போன்ற டயலாக்குகளை ஹீரோயின்கள் உச்சரிக்க ஆரம்பித்தது அங்குதான். ஆனாலும், வாங்கிய அடியில் வாயில் ரத்தம் சொட்டச்சொட்ட `நான் உன்னைக் காதலிக்கிறேன்' என வசனம் பேசி, எப்படியாவது ஹீரோயின்களைக் காதலிக்க வைத்துவிடுவார்கள் பெல்பாட்டம்வாலாக்கள். ஹீரோயின்களுக்கு ஹீரோவின் கள்ளங்கபடம் இல்லாத மனதைப் பார்த்துதான் காதல் வந்தது.

அதே நேரத்தில், திமிர் பிடித்து அலையும் பணக்கார ஹீரோயினுக்குப் பயம்காட்டியே காதலில் விழவைக்கும் சில ஹீரோக்களும் உள்ளனர். சில ஹீரோயின்கள், `நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?' என ஹீரோவைப் பார்த்துக் கேட்டுவிட, `ஆம்பள' படத்தில் வரும் டாடா சுமோபோல் துள்ளிக்குதித்து வருவார் ஹீரோ. `நான் ஆம்பளைதான்னு நிரூபிச்சுக் காட்டட்டுமா?' என அந்தப் பக்கிகள் செய்யும் செயல்கள் அபசாரம். ஆனாலும், அந்த நேரத்தில்தான் அவர்களுக்கு லவ் வரும் என்பது கோக்குமாக்கான டிசைன்.

அடி வாங்கி... மிதி வாங்கி...

டார்ச்சர் செய்தே லவ் பண்ணவைப்பதுதான் பேகி பேன்ட் ஹீரோக்களின் ஸ்டைல். `நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன்' என ஹீரோயின்கள் பின்னாலேயே சுஸூகி சாமுராயில் சுற்றி, அவர்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்புக்கு விடியற்காலையிலேயே ஆஜராகி, நெஞ்சில் பச்சைக்குத்தி, ஹீரோயின் அண்ணன்களிடம் அடி வாங்கி... மிதி வாங்கி, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, இதுக்கு மேல அடி வாங்கினா இந்த பாடி தாங்காது எனப் பயந்துபோய் ஹீரோயின்கள் ஓ.கே பண்ணிவிடுவார்கள். முக்கியமாக, ஹீரோயினின் ஹேண்ட்பேக்கை அடித்துச் சென்றவனிடம் சண்டைபோட்டு அதை மீட்டுத் தருவது, ஹாஸ்பிட்டலில் முடியாமல் கிடக்கும் குழந்தைகளிடம் கதை சொல்லியே அவர்களைக் காப்பாற்றுவது, கோயிலில் எண்ணெயை ஊற்றி கால் வழுக்கிக் காதலில் விழச்செய்வது, ரத்தத்தில் லெட்டர் எழுதுவது, ரோஜாப் பூவைக் காப்பாற்ற லாரி டயருக்குள் பாய்வது, கிணற்றிலோ கடலிலோ விழுந்த ஹீரோயினைக் காப்பாற்றுவது என உயிரைக் கொடுத்துக் காதலித்த ஹீரோ வம்சம் இது.

பஸநிஸநிககரிஸா...

சமகால மில்லினியம் ஹீரோக்கள் வேறு லெவல். தனது முன்னோர்கள் செய்த அனைத்தையும் செய்வது மட்டும் அல்லாது, கூடுதலாகச் சில முயற்சிகளையும் பரிசோதித்துவருகிறார்கள். ஹீரோயின் கண் முன்னால் வேறு ஒரு பெண்ணோடு சிரித்துப் பேசினால், ஹீரோயின்கள் கடுப்பாகி அவர்களே வந்து காதலைச் சொல்வார்கள் என்பதுதான் இவர்கள் கண்டுபிடித்ததிலேயே அதிபயங்கர உத்தி. சமீபமாக சில ஹீரோயின்களுக்கு ஹீரோவைப் பார்த்ததுமே காதல் வந்துவிடுவது ஆறுதல் அளிக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் க்ளைமாக்ஸில் குறுக்கே புகுந்து, கடப்பாரைக் குத்தை வயிற்றில் தாங்கும் செகண்ட் ஹீரோயின்கள்தான் ஹீரோவைப் பார்த்ததும் காதலிப்பார்கள். ஆனால் இப்போதோ, `ஹீரோயின்களே அதைச் செய்வது ஆரோக்கியமான மாற்றம்' என்று தாய்லாந்து உளவியல் நிபுணர் டகாசுகா சொல்கிறார் என வாட்ஸ்அப்பில் சொல்கிறார்கள். மொத்தத்தில், எந்தக் காலமானாலும் ஹீரோயின்களுக்கு லவ் வர ஹீரோக்கள் தென்னைமரம் ஏறித்தான் ஆக வேண்டும்.

ஹீரோக்களுக்கு எப்போது லவ் வரும் என்றால்... கொட்டும் மழையில் நடுரோட்டில் ஹீரோயின்கள் நடனம் ஆடினாலோ, சோப்புக் குமிழ்கள்அல்லது பூக்கள் உதிரும் இடத்தில் ஸ்லோமோஷனில் நடந்து வந்தாலோ, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாலோ போதும். சில நேரங்களில் ஹீரோயின் அணிந்திருக்கும் ஜிமிக்கியைப் பார்க்கும்போதுகூட ஹீரோக்களுக்கு `பஸநிஸநிககரிஸா ஸநிதபமகபமகபரி'ன்னு மனசுக்குள்ளே காதல் ரிதம் வாசிக்க ஆரம்பித்துவிடும். அதனால், இந்தப் பயபுள்ளைகளைப் பற்றி பெரிதாகப் பயப்படத் தேவையில்லை.