``ஹைய்... டீம் மீட்டா? செம ஜாலி. தோ வந்துர்றோம்'' எனச் சொல்லி, அதே உற்சாகத்துடன் ஒன்றுகூடியது `அதே கண்கள்' படக் குழு. ஹீரோ கலையரசன், நடிகைகள் ஜனனி - ஷிவதா, காமெடியன் பாலசரவணன், இயக்குநர் ரோஹின் வெங்கடேசன், எழுத்தாளர் முகில், இசையமைப்பாளர் ஜிப்ரான், எடிட்டர் லியோ ஜான் பால், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் என அத்தனை பேரும் ஒன்றுசேர, கூட்டம் களைகட்டியது.

``பேட்டிக்காக வந்துட்டு, உங்களுக்குள்ளயே பேசிட்டிருந்தா எப்படி?'' என ஸ்ட்ரிக்ட் காட்டிய ரோஹினிடம் ``சரி... சரி, ஹீரோ சார் நீங்களே சொல்லுங்க'' என ஜனனி மைக்கை நீட்டினார். உடனே ``நான் கிளம்புறேன்யா'' எனக் கோபத்துடன் எழுந்தார் கலையரசன். அவரைச் சமாதானப்படுத்தி உட்காரவைத்து, மொத்த டீமும் விசாரித்தது. ``ரோஹினைப் பார்க்கிறவங்க எல்லாரும் `நீங்கதான் ஹீரோவா?, யார் டைரக்டர்?'னு கேட்டா, நான் பாவம் இல்லையா!'' எனச் சொல்ல, படக் குழுவினர் வெடித்துச் சிரித்தனர்.

``படத்தில் ஜனனிதான் ரிப்போர்ட்டர். ஆனா இங்கே நான்தான் ரிப்போர்ட்டர்'' என்றபடி ``சொல்லுங்க ரோஹின். இந்தக் கதை எப்படி உருவாச்சு?'' என்றார் கலையரசன்.

``இந்தக் கதை, அசோக் நகர்ல இருக்கும் ஒரு அப்பார்ட்மென்ட் பார்க் பெஞ்ச்ல உருவாச்சு. கண் தெரியாத ஒருத்தருக்குப் பார்வை வந்ததும் அவருடைய காதலியைத் தேடுறாருனு காதல் கதையாகத்தான் ப்ளான் பண்ணோம். எழுத்தாளர் முகிலுடன் பேசி, நிறைய விவாதிச்சேன். இது ஒரு த்ரில்லரா இருந்தா இன்னும் விறுவிறுப்பான படமா இருக்கும்னு தோணுச்சு. உடனே பேப்பர்ல நாம படிச்ச பல மோசடிச் கதைகளை உள்ளே சேர்த்து, த்ரில்லரா மாத்தினோம். படத்தில் நான் மட்டும்தான் புதுசு. கலையரசன், ஷிவதா, ஜனனி, ஜிப்ரான், எடிட்டர் லியோ ஜான் பால், ஒளிப்பதி வாளர் ரவிவர்மன் என எல்லோருமே சீனியர்ஸ். எனக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்கணும்னு அவங்க முயற்சி பண்ணதாலதான் இந்தப் படம் இவ்வளவு மெச்சூர்டா இருக்கு'' என ரோஹின் சொல்ல, எழுத்தாளர் முகிலிடம் மைக்கை நீட்டினார் கலையரசன்.

``இதுதான் நான் சினிமாவுல ஸ்கிரிப்ட் வொர்க் பண்ற முதல் படம். படத்தில் கலையரசனுக்கும் பாலசரவணனுக்கும் எப்படி ஒரு கெமிஸ்ட்ரி இருக்குமோ, அப்படித்தான் எனக்கும் ரோஹினுக்கும். காதல் கதைக் குள்ள வசுந்தரா கேரக்டரைக் கொண்டுவந்தோம். அதுக்குப் பிறகுதான் இந்தக் கதை ஹிட் ஆகும்கிற நம்பிக்கை எங்களுக்கு அதிகமாச்சு'' என்றார் முகில்.

``அது இருக்கட்டும், நான் இந்த ரோலுக்குப் பொருத்தமா இருப்பேன்னு எப்படித் தோணுச்சு?'' என

ரோஹினிடம் கலையரசன் கேட்க, ``இயல்பான நடிப்புன்னா கலையரசன்தானே'' என ரோஹின் சீரியஸாகச் சொல்ல, ``தலைவரே, இதுல ரெண்டு மீனிங் இருக்கு. பார்த்துப் பண்ணுங்க'' என ரோஹினை மிரட்டுகிறார் கலை. ``யார் யாருக்கெல்லாம் கண்கள் அழகா இருக்கும்னு யோசிச்சுட்டிருந்தோம். உடனே எடிட்டர் லியோதான் `கலையரசன் கண்கள் பவர்ஃபுல்லா இருக்கும்'னார். (`தலைவா... நன்றி தலைவா!' என லியோவுக்கு ஒரு ஹைஃபை போடுகிறார் கலை.) தயாரிப்பாளர் சி.வி.குமாரும், `கலை பொருத்தமா இருப்பார்'னு சொல்லி, அவரைச் சந்திக்க வெச்சார்'' என இயக்குநர் ரோஹின் சொல்ல, ``கதை எனக்கு ரொம்பப் பிடிச்சது. இப்போ வளர்ந்துவர்ற நிலையில் இந்த மாதிரி முயற்சி பண்றது நல்லதுனு தோணுச்சு. உடனே ஓ.கே சொல்லிட்டேன்'' என்றார் கலையரசன்.

``நீங்க வளர்ந்துவரும் நடிகை. அதுக்குள்ள இப்படி ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள ரோல்ல எப்படி நடிக்க ஒப்புக்கிட்டீங்க?'' என, ஷிவதாவிடம் கேட்டார் கலை. ``முதல்ல இந்த ரோல்ல நடிக்கலாமாங்கிற சந்தேகம் எனக்கும் இருந்தது. `கொஞ்சம் யோசி'னு சில பேர் பயமுறுத்தினாங்க. ஆனா, எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை நூறு சதவிகிதம் சரின்னு இப்போ தோணுது'' எனச் சிலிக்கிறார் ஷிவதா.

``ஆமா, ட்விட்டர், ஃபேஸ்புக்ல எல்லாம் `உங்க கண்களுக்காகத்தான் `அதே கண்கள்' படத்தையே நாங்க பார்த்தோம்'னு சொல்றாங்களாமே... ஏன் எங்க கண்களுக்காக எல்லாம் படம் பார்க்க மாட்டாங்களா?'' என ஜனனியை வம்புக்கு இழுத்தார் கலையரசன். ``இந்த மாதிரி ரசிகர்களுக்கு நான் நன்றியைத் தவிர வேற என்ன சொல்ல முடியும்?'' என, பதில் கமென்ட் அடிக்கிறார் ஜனனி.

``ரொம்ப ஜாலியான பொண்ணு ஜனனி. நானும் பாலசரவணனும் சேர்ந்தா, ஜனனியைத்தான் பயங்கரமா கிண்டல் பண்ணுவோம். ஆனா, எதுக்குமே அசராம செம ஸ்போர்ட்டிவ்வா எடுத்துப்பாங்க'' என்ற கலையிடம், ``சரிப்பா, என்னைக் கொஞ்சம் பேசவிடு'' என, தனது ரவுண்டை ஆரம்பித்தார் பாலசரவணன். `` `அதே கண்கள்' படத்தில் நடித்ததில் எனக்கு ரெண்டு ஆசைகள் நிறைவேறியிருக்கு. சில படங்களில் காமெடியனா நடிச்சிருக்கேன். ஆனா, குணச்சித்திரம் கலந்த காமெடி ரோல் பண்ணணும்னு ரொம்ப நாள் தோணிட்டே இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கு. சிவகார்த்திகேயன் சார் கால் பண்ணி, டயலாக், எக்ஸ்பிரஷன் எல்லாத்தையும் நோட் பண்ணி, சொல்லிச் சொல்லிப் பாராட்டினார். ஜனனி, ஷிவதா, கலைனு எங்க டீமே செம கெத்து டீம்'' என பாலசரவணன் சொல்ல, ஒட்டுமொத்த டீமும் `ஹோ... ஹோ' போடுகிறது.