``காஷ்மீர்ல லடாக்குக்கும் மேலே ஒரு ஏரியா... கார்துங்லா. உலகத்துலேயே மோட்டார் பைக்ல போக முடியுற உயரமான இடம் அதுமட்டும்தான். அங்கே யார் போனாலும் இருபது நிமிஷத்துல கீழே வந்துடச் சொல்றாங்க. காரணம், ஆக்ஸிஜன் ரொம்பக் குறைவா இருக்கும். அங்கதான் ஷூட்டிங். மூணு மணி நேரம் தாண்டியும் எடுத்துட்டே இருக்கோம். டீம்ல ஒவ்வொருத்தரா மயங்கி விழுறாங்க. ஆனா, ஷூட் மட்டும் போயிட்டே இருக்கு. எனக்கும் கேமராமேன் ரவிவர்மன் சாருக்கும் இது கனவுப்படம். நின்னுட்டோம். மணி சார் எப்படிச் சமாளிச்சார்னே தெரியலை. அப்படி ஒருத்தரோட படம் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறப்பவே பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு” - செம ஸ்டைலாக, ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் கார்த்தி.

`` `காற்று வெளியிடை' என்ன மாதிரியான படம்?''

``செம லவ் ஸ்டோரி. `அலைபாயுதே' மாதிரி சாஃப்ட்டா, மனசுக்கு இதமா ஒரு படம். ஒரு போர் விமான பைலட்டுக்கும் டாக்டருக்குமான காதல்தான் படம். எவ்ளோ வயசானாலும் இங்க எல்லோருமே ஒரு சின்னப்பையனாத்தான் நடிக்கிறாங்க. மேன் - அப்படிங்கிற விஷயத்தைச் சொல்றமாதிரி யாருமே நடிக்கிறது இல்லை. மணி சார் ஆரம்பத்திலேயே `I dont want a boy. I want a man'னு சொல்லிட்டார். அப்போது இருந்தே எனக்கு சவால் ஆரம்பிச்சிடுச்சு.

மணி சாரின் `ஓ காதல் கண்மணி' சமகாலக் காதல் விஷயங்களை அதிகம் சொன்னது. `காற்று வெளியிடை' ஒரு கிளாசிக்கல் லவ் ஸ்டோரி. எப்பவும், எந்தக் காலத்துக்கும் செட் ஆகிற ஒரு படம். மனித உறவுகளைப் பற்றி பேச, மணி சாரை விட்டா இங்கே வேறு யார் இருக்கா?''

``போர் விமானி, காஷ்மீர், பாகிஸ்தான் எல்லை... படம் தீவிரவாதம் பற்றியும் பேசுமா?''

``இல்லை... இது 100 சதவிகிதம் காதல். நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு பின்னணி இருந்தா, சுவாரஸ்யம் கூடும். அதுமட்டும் இல்லாம போர் விமானி பற்றி தமிழ் மக்களுக்கு அதிகம் தெரியாது. சினிமாவிலும் அது வரலை. அவங்களோடது சாதாரண வாழ்க்கை இல்லை. ராணுவத்துல மற்ற ஆட்களுக்குப் போர் நடக்கும்போதுதான் ஆபத்து அதிகம். ஆனால், போர் விமானிகளுக்கு ட்ரெய்னிங் போற முதல் நாள்ல இருந்தே ஆபத்துதான். உடல்ரீதியாவும் மனரீதியாவும் அவங்க ஃபிட்டா இருக்கணும். எப்பவும் அலெர்ட்டா இருக்கணும். கொஞ்சம் கேர்லெஸா இருந்தாலும், உயர் அதிகாரிகளின் கடும் நடவடிக்கைக்கு ஆளாகணும். அப்படி ஒரு வாழ்க்கை வாழும் ஒருத்தனுக்கு வர்ற காதல் புதுசாத்தானே இருக்கும்? அதுதான் `காற்று வெளியிடை'. மத்தபடி நான், ஹீரோயின் ரெண்டு பேருமே தமிழ்ப் பசங்கதான். எல்லாமே நம்ம ஊர் விஷயங்கள்தான். கதை நடக்கிறது மட்டும்தான் காஷ்மீர்.''

``மணிரத்னத்தின் `ஆய்தஎழுத்து' படத்தில் உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கீங்க. இப்போ ஹீரோ. எப்படி இருக்கு இந்த அனுபவம்?''

``மணி சாரின் ஷூட்டிங் ஸ்பாட்ல ஏதாச்சும் வேலை இருந்தா, உடனே ஒரு உதவி இயக்குநரா அதைச் செய்யணும்னு தோணிட்டே இருந்தது. ஆனா, நான் நடிகனாகி பத்து வருஷங்கள் ஆகிடுச்சு. அது எனக்கு ஒரு மெச்சூரிட்டியைக் கொடுத்திருக்கு. மணி சார் எப்படி ஒரு விஷயத்தை யோசிக்கிறார், என்ன காரணத்தால் இப்படிப் பண்றார்னு யோசிக்க நேரம் கிடைச்சது. அதை அவர்கிட்ட கேட்கிற கான்ஃபிடன்ஸை, இந்தப் பத்து வருஷ அனுபவம் எனக்குக் கொடுத்திருக்கு. கேவலமா ஏதாவது சந்தேகம் கேட்டா, `வாயை மூடுடா'ன்னு சொல்லிடுவார். அவர் பதில் சொல்றதைவெச்சு `பரவாயில்லை... கொஞ்சம் டீசன்டாத்தான் கேட்டிருக்கோம்'னு மனசைத் தேத்திப்பேன்.''

``ஹீரோயின் அதிதி ராவ்...''

`` இது கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர். பார்க்க ரொம்ப சாஃப்ட்டாவும், ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப ஸ்ட்ராங்காவும் இருக்கிற ஒரு கேரக்டர். தமிழ் தெரியலைன்னாலும், ஆர்வத்தோடு அதைப் படிச்சு, புரிஞ்சு ஆடிஷனுக்கு வந்த அந்த டெடிக்கேஷன் மணி சாருக்குப் பிடிச்சது. வேலையில் ஆர்வமா இருக்கிற ஆட்கள்கூட வேலை செய்றது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவே எனக்குப் பெரிய பூஸ்ட்டா இருந்தது. இது ரிலேஷன்ஷிப்பைப் பத்தின படம்கிறதால, அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கங்கிறதை வெச்சுதான் என் நடிப்பும் இருக்கும். அதை அதிதி அவ்வளவு அழகா பண்ணதால, எனக்கு ஈஸியா இருந்தது.''

``நடிகர் சங்கச் செயல்பாடுகள் எப்படி இருக்கு?’’

``நாங்க என்னலாம் பண்ணுவோம்னு சொன்னோமோ, அதை ஒவ்வொண்ணா செஞ்சுட்டே வர்றோம். சி.எம்.டி.ஏ அப்ரூவலுக்காகக் காத்திட்டிருக்கோம். அது வந்ததும் நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவோம். அதுதான் எங்களோட பெரிய கனவு. அதைத் தவிர, 400 பேருக்கு பென்ஷன் கொடுத்துட்டிருக்கோம். அதுக்கு சினிமா தாண்டியும், முன்னாடி சினிமா தொடர்புள்ள பல பேர் டொனேஷன் தர்றாங்க. சினிமாவுல நான் பார்த்து ஷாக் ஆன விஷயம் என்னன்னா, ஃபேமிலி சப்போர்ட் நிறையப் பேருக்கு இல்லை. வயதான பல பேர், `நான் தனியாத்தான் இருக்கேன். எனக்குன்னு யாரும் இல்லை’ன்னு சொல்றாங்க. அவங்களுக்கு பென்ஷன் கொடுக்க முடியுதுங்கிறது சந்தோஷமா இருக்கு.''

``பைரஸிக்கு எதிராக பலமான குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றனவே...''

``ஒரு இணையதளம் இத்தனை மணிக்கு இந்தப் படத்தை ஆன்லைன்ல ரிலீஸ் பண்றோம்னு ஓப்பனா சொன்னாலும், ஒண்ணும் செய்ய முடியாத அளவுக்குத்தான் இண்டஸ்ட்ரி இருக்கு. `இந்த தியேட்டர்லதான் இந்தப் படத்தைத் திருட்டுத்தனமா எடுத்திருக்காங்க'னு கண்டுபிடிச்சுச் சொன்ன பிறகும்கூட எந்த ஆக்ஷனும் எடுக்கப்படலை. பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு தியேட்டரில் இருந்துதான் எடுத்திருக்காங்கன்னு, க்யூப் நிறுவனம் தந்த ஆதாரத்தை இணைத்து நானே புகார் கொடுத்திருக்கேன். ஆனா, இதுவரைக்கும் எந்த ஒரு ஆக்ஷனும் இல்லை. ரிலீஸ் ஆன அன்னிக்்கே எடுக்கிறாங்க. நிச்சயம் இதுக்கு ஒரு முடிவு வரும்... வரணும்.''

``மெரினா இளைஞர் போராட்டத்துக்கு நீங்களும் நேரடியாகப் போனீங்க. எப்படி உணர்ந்தீங்க?''

``இளைஞர்களின் ஒழுக்கம் என்னைப் பிரமிக்கவெச்சது. ஒருநாள் இரவு போய் ரெண்டு மணி நேரம் உட்கார்ந்துட்டு வந்தேன். எனக்குள்ள பெரிய எனர்ஜி வந்தது. ஒரு குடும்பம் மாதிரி இருந்தாங்க. பெண்களைக் கவனமா பார்த்துக் கிட்டாங்க. எல்லோரிடமும் ஒரு அமைதி இருந்தது. ஆனா, மனசுக்குள்ள ஒரு அழுத்தம் இருந்தது. அந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் நடக்கலை. நமக்கு வேண்டியதை நாம கேட்டு வாங்கணும்கிற ஒரு எண்ணம் முக்கியமா பரவி இருந்தது. இந்த ஜெனரேஷன் பசங்க கலக்குறாங்க!''