ஆஸ்கருக்குத் தயாராகிவிட்டது ஹாலிவுட். பிப்ரவரி 26-ம் தேதி, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடக்கவிருக்கும் ஆஸ்கர் விழாவுக்கான உச்சகட்ட ஃபீவரில் தகிக்கிறது உலக சினிமா.

`கடந்த ஆண்டு ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் கறுப்பினத்தவர் ஒருவர்கூட இல்லை' எனக் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், இந்த ஆண்டு கறுப்பின நடிகர்கள் ஆறு பேரை இறுதித் தேர்வுக்கு அனுப்பியிருக்கிறது ஆஸ்கர் கமிட்டி. அதிசய நிகழ்வாக, ஒரு சின்ன பட்ஜெட் படம் 14 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. `2017-ம் ஆண்டு ஆஸ்கரில் விருது வெல்லும்' எனக் கணிக்கப்பட்டிருக்கும் முக்கியமான படங்களின் அப்டேட் இங்கே...

லா லா லேண்டு (La La Land)

`ஆல் அபௌட் ஈவ்', `டைட்டானிக்' படங்களுக்குப் பிறகு `லா லா லேண்டு' படம்தான் ஆஸ்கரில் 14 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. `லா லா லேண்டு', `டைட்டானிக்'போல பிரமாண்டமான படம் அல்ல; காதலும் காதல் நிமித்தமுமான சினிமா. இந்தப் படத்தின் இயக்குநர் டேமியன் சேஸிலி, ஏற்கெனவே `விப்லாஷ்' என்ற திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர்.

எவ்வளவு முயன்றும் நடிகையாக முடியாத விரக்தியில் இருக்கும் மியா (எம்மா ஸ்டோன்), அழிந்துவரும் ஜாஸ் இசையை மீட்கத் துடிக்கும் பியானோ இசைக் கலைஞனான செபாஸ்டியன் (ரியான் கோஸ்லிங்) இருவருக்கும் இடையேயான காதல்தான் படம். சின்னச்சின்ன ஈகோ, கோபம், சண்டை, விட்டுக்கொடுத்தல்... என அனைத்து கலந்து பயணிக்கிறது. ஐந்து வருட முயற்சிக்குப் பிறகு, நடிகை ஆகும் மியா ஒரு ஜாஸ் பாருக்குள் செல்ல, அங்கு `SEB' என தான் செபாஸ்டியனுக்கு வரைந்து கொடுத்த லோகோவைப் பார்க்கிறாள். உள்ளே சென்ற அவள், அங்கு ஒரு ஜாஸ் இசைக்கலைஞனாக பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் செபாஸ்டியனைப் பார்க்கிறாள். மியாவும் அவள் கணவரும் செபாஸ்டியன் இசைக்கும் அந்தப் பாடலை ரசிக்கிறார்கள். நிபந்தனைகள் ஏதுமற்ற அன்பு, விட்டுக்கொடுத்தல், கனிவு இருந்திருந்தால் மியாவும் செபாஸ்டியனும் சேர்ந்திருப்பார்கள் என்பதைக் காட்ட, முழுப் படத்தையும் மீண்டும் ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் எடுத்து முடித்திருப்பார் இயக்குநர். படம் பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள், அந்த ஐந்து நிமிடங்களை மட்டுமாவது பார்த்துவிடுங்கள். அடுத்த முறை உங்கள் அன்புக்குரியவர்களிடம் கோபம்கொள்ள, நிச்சயம் மனம் மறுக்கும்!

அரைவல்

`லா லா லேண்டு'க்கு அடுத்து, எட்டு விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது `அரைவல்'. வேற்றுக் கிரகத்தில் இருந்து பன்னிரண்டு விண்கலங்கள் உலகுக்கு வருகின்றன. உலகின் 12 இடங்களில் அவை நிறுவப்படுகின்றன. அந்த விண்கலங்களின் வழியே வந்திருக்கும் வேற்றுக்கிரகவாசிகளிடம் பேசுவதற்காக மொழியாளர் லூயிஸ் பேங்க்ஸ் (ஏமி ஆடம்ஸ்), இயற்பியல் நிபுணர் ஐயன் டொன்னெல்லி (ஜெரெமி ரென்னர்) அனுப்பப்படுகிறார்கள். வேற்றுக்கிரகவாசிகள் ஏன் வந்தார்கள், எப்படி வந்தார்கள், வேற்றுக்கிரகவாசி களையும் மனிதர்களையும் இவர்கள் இருவரும் காப்பாற்றினார்களா என்பதே படம். முதல்முறையாக ஹாலிவுட்டில் வேற்றுக்கிரகவாசிகளைப் பாசிட்டிவாகக் காட்டியிருக்கும் படம் `அரைவல்'.

மூன்லைட்

`அரைவல்' படத்தைப் போலவே எட்டு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது `மூன்லைட்'. ஆப்பிரிக்க அமெரிக்கரான சிரோனின் வாழ்க்கைப் பதிவே `மூன்லைட்'. இந்த உலகில் தனித்துவிடப்பட்ட ஒருவரின் வாழ்வியலை, தன் அடையாளத்தைத் தேடி அலையும் ஒருவரின் வாழ்க்கையை இவ்வளவு நுணுக்கமாக ஹாலிவுட் சினிமா கையாண்டு பல காலம் ஆகிறது. அமெரிக்காவில் நிலவும் கறுப்பின மக்களுக்கு எதிரான பிரிவினையையும் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது `மூன்லைட்'.

ஹாக்சா ரிட்ஜ்

`ஹாக்சா ரிட்ஜ்', `மான்செஸ்டர் பை தி சீ', `லயன்' ஆகிய மூன்று படங்களும், 2017-ம் ஆண்டு ஆஸ்கரில் ஆறு விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன.

20 வருடங்களுக்குப் பிறகு, மெல் கிப்சனுக்கு ஆஸ்கரின் சுவாசத்தை வழங்கியிருக்கிறது `ஹாக்சா ரிட்ஜ்'.

இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவின் ராணுவ வீரரான டெஸ்மான் தாஸ் என்பவர் எப்படி அறவழியில் 75-க்கும் அதிகமான போர்வீரர்களைக் காப்பாற்றினார் என்பதே `ஹாக்சா ரிட்ஜ்' திரைப்படம். `ஆயுதங்களைத் தொட மாட்டேன்' என டெஸ்மான் தாஸ் சொல்லும்போது, ராணுவப் பள்ளியில் பல்வேறு தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார். எல்லா சவால்களையும் எதிர்கொண்டு, ஆயுதம் ஏந்தாமல் யுத்தக் களத்தில் ஒரு மனிதனாக எப்படி உயர்ந்து நிற்கிறான் என்பதை இயல்பாகக் காட்சிப்படுத்தி, உணர்வுகளுடன் விளையாடியிருக்கிறார் இயக்குநர் மெல் கிப்சன். `அமேஸிங் ஸ்பைடர்மேன்' ஹீரோ ஆண்ட்ரூ கிராஃபில்ட்தான் தாஸாக நடித்திருக்கிறார்.

சிறந்த நடிகர் - நடிகை

`ஃபென்செஸ்' படத்தில் கலக்கிய டென்செல் வாஷிங்டன், `மான்செஸ்டர் பை தி சீ' படத்தில் அசத்திய கேஸி அஃப்லெக், `லா லா லேண்'டின் ரியான் கோஸ்லிங் இடையேதான் சிறந்த நடிகருக்கான போட்டி கடுமையாக இருக்கிறது.

20-வது முறையாக சிறந்த நடிகைக்கான விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார் மெரில் ஸ்ட்ரீப். ஆனால், `ஜாக்கி'யில் அசத்திய நட்டாலி போர்ட்மேன், `லா லா லேண்'டில் கலக்கிய எம்மா ஸ்டோன் என இருவரையும் முந்தி மெரிலுக்கு ஆஸ்கர் கிடைப்பது சிரமம்தான்.

சர்ச்சைகள் ஏதும் இன்றி சுமுகமாகவே செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட 2017-ம் ஆண்டு ஆஸ்கரில், முதல் திரியைக் கொளுத்தியுள்ளது சிறந்த வெளிநாட்டுப் பட விருது பட்டியல். இரானிய இயக்குநர் அஸ்கார் ஃபர்காடியின் `தி சேல்ஸ்மேன்'தான் விருதை வெல்லும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையால், ஃபர்காடி, அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத நிலை நீடிக்கிறது. `அவர்கள் ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்தாலும்கூட, இப்படிப்பட்ட ஒரு தேசத்துக்குள் நான் வருவதாக இல்லை' என கொதித்தெழுந்திருக்கிறார் ஃபர்காடி.