பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

''தீபாவளி ரிலீஸ் படத்துக்கு என்ன பேர் வெச்சிருக்கீங்க?''

ஜோக்ஸ்''இன்னும் வெக்கலே!''’

''அட! இப்பத்திய ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி புதுமையா பேர் வெச்சிருக்கீங்களே!''

- தீ.அசோகன்

ஜோக்ஸ்

''ராக்கெட் ஏவுதளத்துக்குத் தலைவர் விசிட் பண்ணப்போ உளறிக் கொட்டிட்டார்!''

''என்னன்னு..?''

''எவ்ளோ மைலேஜ் கொடுக்கும்னு கேட்டு வெச்சுட்டார்!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ்

''உங்க எழுத்துன்னா எங்க அப்பாவுக்கு உசிரு சார்!''

''அப்படியா! நான் எழுதறதை விட்டே பல வருஷமாச்சேப்பா!''

''எங்கப்பாவும் உசிரை விட்டுப் பல வருஷமாச்சு சார்!''

- அப்துல்

ஜோக்ஸ்

''தலைவருக்கு என்ன கொழுப்பு பாரு?''

''என்ன பண்ணாரு?''

''அவரோட குற்றப் பத்திரிகைக்கு தீபாவளி மலர் வெளியிடுவாங்களான்னு கேக்கறார்!''

- பா.ஜெயக்குமார்

ஜோக்ஸ்

''ஜாமீன் கிடைக்கலேங்கிற செய்தி கிடைச்சதும் தலைவர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கிட்டார்!''

''என்ன செஞ்சார்?''

''புழலிலும் திகாரிலும் என்னென்ன மெனு போடுறாங்கன்னு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருக்கார்!’

- திருவெறும்பூர் சி.ஸ்ரீரங்கம்

ஜோக்ஸ்

''சினிமா தியேட்டரை இடிச்சுட்டு இந்தக் கல்யாண மண்டபத்தைக் கட்டினாங்களா?''

''ஆமா... எப்படி கண்டுபிடிச்சே?''

''அங்கே பாரு... 'தினசரி மூன்று பந்திகள்’னு வாசல்ல போர்டு வெச்சிருக்காங்க!''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

''அவர்தான் மினிஸ்டரா?''

''இல்ல... இப்போ அவர் வெறும் மிஸ்டர்!''

- ராம் ஆதிநாராயணன்

ஜோக்ஸ்

''புலவரே! இந்தப் பாடலில் ஏகப்பட்ட பிழை இருக்கிறது.''

''கஜானா காலின்னு சொல்லக் கூச்சமா இருக்கலாம். அதுக்காக இந்த மாதிரி வெறுப்பேத்தற வேலையெல்லாம் வேண்டாம் மன்னா!''

- சிவம்

ஜோக்ஸ்

''அயோக்கியப் பயல்! என் தலையைப் பார்த்ததுமே எஸ்கேப் ஆகிட்டான்!''

''ஏன்..? அவன் ஏதாவது உனக்குக் கடன் பாக்கி தரணுமா?''

''ஊஹூம்! நான்தான் அவன்கிட்டே கடன் கேட்கலாம்னு இருந்தேன்!''

- ஜெயாமணாளன்

ஜோக்ஸ்

''மன்னா! எதிரி அனுப்பிய போர் அறிவிப்பு ஓலையைப் படிக்கட்டுமா?''

''வேண்டாம்! அவன் அனுப்பிய ஓலையை ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டி, என் முகத்தில் தோன்றும் பீதியை நைஸாகப் பார்த்து ரசிக்கலாம் என்று ஆசைப்படுகிறீர். எனக்குத் தெரியாதா உங்களைப் பற்றி..?''

- ராம் ஆதிநாராயணன்

ஜோக்ஸ்

''மன்னா! தீபாவளி முடிந்துவிட்டது. இனிமே வெடிச் சத்தம் கேட்காது. பயப்படாமல் பதுங்குக் குழியைவிட்டு வெளியே வாருங்கள்!''

- கே.வெங்கட்

ஜோக்ஸ்

''அந்த எழுத்தாளர் பழைமைவாதி!''

''எதனால அப்படிச் சொல்றே?''

''பயத்தில் கைகள் தந்தியடித்தனனு வர்ணிக்கிறாரே!''

- ரிஷிவந்தியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு