பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

''மன்னா... எதிரி மன்னன் புறாவுக்குப் பதில் சிட்டுக்குருவி மூலம் ஓலை அனுப்பியுள்ளான்!''

ஜோக்ஸ்''நான் குழந்தை பாக்கியம் இல்லாதவன் என்பதை எப்படிக் குத்திக் காண்பிக்கிறான் பார்த்தீர்களா அமைச்சரே?''

ஜோக்ஸ்

''மது மன்னர் புறநானூறு படித்தவரா?''

''புறா நானூறு பிடித்தவர்!''

ஜோக்ஸ்

''என் பெரிய பையன் டாக்டர்; சின்னவன் ஐ.டி-யில இருக்கான்!''

''பலே! ஒருத்தன் 'லப்டப்’, இன்னொருத்தன் 'லாப்டாப்’பா!''

ஜோக்ஸ்

''மன்னருக்கு இது முதல் போராம்!''

ஜோக்ஸ்

''மன்னா! எதிரி மன்னன் 'சக்கர’ வியூகம் அமைத்துள்ளானாம்!''

''சரியாப் போச்சு! எனக்கு 'சங்கு’ உறுதி!''

ஜோக்ஸ்

‘‘நீதிபதிக்குப் பொண்ணைக் கட்டிக் கொடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’

‘‘அடிக்கடி தள்ளி வெச்சுடறாரு!’’

- ராம்.ஆதிநாராயணன்

ஜோக்ஸ்

‘‘நான் தலைவரோட நிழல்!’’

‘‘அப்ப நீங்களும் ஜீப்லே ஏறுங்க! போகலாம் புழல்!’’

- ரிஷிவந்தியா

ஜோக்ஸ்

‘‘என்னங்க... நாளைக்கு நமக்குக் கல்யாண நாள்!’’

‘‘ஆபீஸ்லேர்ந்து வந்ததும் வராததுமா என்கிட்டே பிரச்னைகளைச் சொல்லாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?’’

- ராம்.ஆதிநாராயணன்

ஜோக்ஸ்

‘‘நம்ப மன்னருக்கு முன்னைவிட இப்போது வீரம் அதிகரித்துவிட்டது!’’

‘‘எப்படிச் சொல்றே?!’’

‘‘போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடி வராமல் புறமுதுகிட்டு நடந்து வராரே?’’

- எஸ்.கோபாலன்

ஜோக்ஸ்

‘‘தலைவர் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கார்’’

‘‘அடடா! சமீபத்துலதானே ஜாமீன்ல வந்தார்?’’

‘‘யோவ்! அவர் தன் மனைவியோட அம்மா வீட்டுக்குப் போயிருக்கார்!’’

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ்

‘‘அந்தச் சலூனுக்குப் போக ஏன் பயப்படுறே?’’

‘‘அவர் டைரக்டர் பாலாவோட விசிறியாமே?!’’

- அ.ரியாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு