பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

‘‘தீயா வேலை செய்யணும் குமாரு!’’

‘‘ஏங்க... பார்த்துப் பேசுங்க. இது பட்டாசுக் கடை!’’

ஜோக்ஸ்

‘‘ஞாபக மறதிக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்கப் போறேன்னியே... எடுத்துக்கிட்டியா?’’

‘‘அடடா! ஞாபக மறதி இருக்குங்கறதையே மறந்துட்டேன்!’’

ஜோக்ஸ்

‘‘பேச்சுலருக்குத் தர மாட்டோம்!’’

‘‘ஐயோ, குழப்பாதீங்க! இவர் வாடகை வீடு கேட்டு வரலை. பொண்ணு பார்க்க வந்திருக்கார்!’’

ஜோக்ஸ்

‘‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலதிலக, சேட்டையன் ராஜா பதுங்குக் குழியிலிருந்து வெளியே வருகிறார்... பராக்! பராக்..!’’

ஜோக்ஸ்

‘‘கபாலி கொள்கைத் திருடனா! என்ன சொல்றே?’’

‘‘ஆமாம், நோ பார்க்கிங்ல நிக்குற கார்களை மட்டும்தான் திருடுவான்!’’

ஜோக்ஸ்

‘‘தலைவர் தொகுதி மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வைப்பர்; வெளிச்சம் காட்டும் ஹெட்லைட்; தீங்கு வராமல் தடுக்கும் பிரேக்!’’

‘‘பேச்சாளருக்கு கார் கன்ஃபர்ம்..!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ்

‘‘நீங்க அனுப்பியுள்ள கதையை ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தர் எழுதி இருக்கார்!’’

‘‘சான்ஸே இல்லை! எப்படி சார் அவனால என் கதையை காப்பி அடிக்க முடியும?’’

- வீ.விஷ்ணுகுமார்

ஜோக்ஸ்

‘‘ ‘மான, ரோஷம் இருந்தால் போருக்கு வா’ என எதிரி மன்னர் ஓலை அனுப்பியுள்ளார் மன்னா!’’

‘‘நல்லதாய்ப் போயிற்று அமைச்சரே! அந்த இரண்டும் எங்களிடம் இல்லாத காரணத்தால் வரமுடியாது என பதில் அனுப்பி விடுங்கள்!’’

- வீ.விஷ்ணுகுமார்

ஜோக்ஸ்

‘‘என்ன தளபதியாரே இது?!’’

‘‘மன்னா! நீங்கள்தானே டாங்கி படை வேண்டும் என்று கேட்டீர்கள்!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ்

‘‘அந்த நாட்டு வைத்தியருக்கு எழுதப் படிக்கத் தெரியாது!’’

‘‘அப்ப ‘கைநாட்டு’ வைத்தியர்னு சொல்லு!’’

- ரிஷிவந்தியா

ஜோக்ஸ்

‘‘தலைவரே... உங்க செல் நம்பர் என்ன?!’’

‘‘யோவ்... பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா! மொபைல் நம்பர்னு கேளு!’

- ரிஷிவந்தியா

ஜோக்ஸ்

‘‘டாக்டர்! நீங்க அலோபதியா, ஹோமியோபதியா?!’’

‘‘பசுபதி!’’

- ரிஷிவந்தியா
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு