Published:Updated:

“என்னை விடாது விரட்டிய கதை!''

“என்னை விடாது விரட்டிய கதை!''
பிரீமியம் ஸ்டோரி
News
“என்னை விடாது விரட்டிய கதை!''

ம.கா.செந்தில்குமார்

“என்னை விடாது விரட்டிய கதை!''

‘‘`இது எங்க வீட்டு விதை நெல்லு பன்னீரு. இன்னிக்கு இதை நல்லவிதமா விதைச்சாதான், நாளைக்கு அறுவடை நல்லா இருக்கும். எவ்வளவு சிறப்பா பண்ண முடியுமோ,  அவ்வளவு சிறப்பா பண்ணிக்கொடுங்க’ இது, வினோத்தைப் பக்கத்துல வெச்சுக்கிட்டு எங்க டைரக்டர் என்கிட்ட சொன்ன வார்த்தைகள். ஆமாம் சார்,

“என்னை விடாது விரட்டிய கதை!''

வினோத், எங்க டைரக்டர் லிங்குசாமி சாரோட அண்ணன் மகன். அதை மனசுல வெச்சு நான் பண்ணியிருக்கும் படம்தான் ‘நான்தான் சிவா’ ’’  - இயக்குநர் பன்னீர்செல்வத்தின் வார்த்தைகளில், தன் குரு லிங்குசாமி மீது அவர் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் வெளிப்படுகின்றன.

`` `ஆனந்தம்’, எங்க டைரக்டர் லிங்குசாமி சாரின் அறிமுகப் படம். அது, அவரின் குடும்பக் கதைன்னு சினிமா ரசிகர்களுக்குத் தெரியும். திருப்பதிசாமி, கேசவன், லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ்னு அவங்க பிரதர்ஸ் நாலு பேருமே பழைய கறுப்பு வெள்ளை சினிமா தொடங்கி, நேத்து ரிலீஸ் ஆன படம் வரைக்கும் அப்டேட்டா இருப்பாங்க. அதிலும் திருப்பதிசாமி அண்ணன், எப்பவோ பார்த்த பழையப் படப் பாடல்கள், வசனங்களை வரி மாறாம சொல்ற அதிதீவிர ரசிகர். ரெண்டாவது அண்ணன் கேசவனின் கேரக்டரைத் தான் ‘ஆனந்தம்’ல முரளி சாரின் கேரக்டரா வடிவமைச்சிருப்பார். அந்தக் கேசவன் அண்ணனின் மகன்தான் வினோத். அவர்தான் என் படத்தின் ஹீரோ’'.

‘‘ ‘நான்தான் சிவா’ படத்தின் கதை என்ன?’’

‘‘நாம தினமும் புதுசு புதுசா யார் யாரையோ எங்கெங்கயோ சந்திச்சுக்கிட்டே இருக்கோம். அவங்க நல்லவங்களா, கெட்டவங்களானு தெரியாமலேயே அவங்களைக் கடக்கிறோம். அப்படி ஒருகட்டத்தில் எதிர்பாராதவிதமா என் ஹீரோ சிவா ரெண்டு பேரைச் சந்திக்கிறான். ஒருத்தர், ஹீரோயின். இன்னொருத்தர் வில்லன். அவங்களைச் சந்திக்கிறதால் அவன் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்குது? இதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. இதுக்கு நான் அமைச்சிருக்கும் திரைக்கதைதான் ஸ்பெஷல்.’’

“என்னை விடாது விரட்டிய கதை!''

‘‘அறிமுக ஹீரோ வினோத் எப்படி தயாரானார்?’’

‘‘வினோத், ஒரு குழந்தை மாதிரி. அதுவும் ரொம்ப ஷார்ப்பான குழந்தை. ஒரு விஷயத்தை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தா, அதைச் செஞ்சுபார்க்கணும்னு முயற்சி பண்ணுவாங்கள்ல, அப்படி அவரை எப்படி வேணும்னாலும் மோல்டு பண்ணலாம். எது சொன்னாலும் அதை உடனே கத்துக்கணும்னு நினைப்பவர். ஆர்வம், திறமையைத் தவிர, அவரைக் கூத்துப்பட்டறைப் பயிற்சியாளர்கள் ட்ரெயின் பண்ணினாங்க. அனுபவ நடிகரை ஹேண்டில் பண்ற மாதிரி, வினோத்தை ஹேண்டில் பண்றது ரொம்ப ஈஸி.’’

“என்னை விடாது விரட்டிய கதை!''

‘‘உங்க ஹீரோயின் என்ன சொல்றாங்க?’’

‘‘ ‘உதயம் என்.ஹெச்-4’ல நடிச்ச அஷ்ரிதா ஷெட்டிதான் ஹீரோயின். தமிழை அப்படியே மனப்பாடம் பண்ணிப் பேசாம, புரிஞ்சு பேசக்கூடிய பெண். ‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த பிரசாந்த் நாராயணன்தான் வில்லன். மிரட்டியிருக்கார். ஜீவா சாரின் அசிஸ்டன்ட் ராஜசேகர்தான் ஒளிப்பதிவு. இமான்-யுகபாரதி ஹிட் காம்போவில் சூப்பர் மியூஸிக் ஆல்பம் காத்திருக்கு.’’

‘‘அடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ படம் பண்ணிட்டிருக்கீங்க. அதில் நாங்க என்ன எதிர்பார்க்கலாம்?’’

‘‘சில கதைகள் நம்மைத் தூங்கவிடாது. ‘எப்படியாவது எடுத்துட மாட்டாங்களா?’ங்கிற தவிப்பில் நம்மை விரட்டும். அவ்வளவு சீக்கிரம் தன்னை அழகுப்படுத்திக்கிட்டு தேவதை மாதிரி நம்ம முன்னாடி வந்து நின்னுடும். அப்படி என்னை விடாது விரட்டிய கதைதான் ‘கருப்பன்’. கதையைக் கேட்ட விஜய் சேதுபதி சார், எந்த மாற்றமும் சொல்லாமல் நடிக்க ஓகே சொன்னார். உற்சாகமா வேலை நடக்குது!''

“என்னை விடாது விரட்டிய கதை!''

‘‘ ‘அஞ்சான்’, ‘உத்தமவில்லன்’ படங்களால் ஏற்பட்ட பணப் பிரச்னைகள்ல இருந்து டைரக்டர் லிங்குசாமி வெளியே வந்துட்டாரா?’’

‘‘நான் ‘ரன்’ படம் தொடங்கி எட்டு வருஷங்கள் எங்க டைரக்டர்கூட இருந்தேன். அவரின் கதை விவாதங்கள் அவ்வளவு சுகமா, மனசுக்கு நெருக்கமா இருக்கும். அவர் லைஃப்ல நடந்த ஏதாவது விஷயத்தின் ஒரு புள்ளியில்தான் படத்துக்கான கதை விவாதம் ஆரம்பிக்கும். நாளாக நாளாக, அந்தப் புள்ளி நம் கண் முன்னாடியே பெருசாகி அழகா நிக்கும். நம்மை அறியாமலேயே ஒரு பெரிய பயிற்சிப் பட்டறையில் இருந்திருக்கோம்னு இப்ப தோணுது. என் ஸ்க்ரிப்ட் மேக்கிங் அவர்கிட்ட கத்துக்கிட்டதுதான். இப்பவும் நானா கேட்டு அவர் கதை விவாதத்தில் கலந்துப்பேன். அவர் எண்ணங்கள், அவரின் டிஸ்கஷன்ல இருக்கிறது எனக்கு அவ்வளவுப் பிடிக்கும்.

அவருக்கு சினிமா தவிர வேற எதிலும் ஆர்வம் கிடையாது. திடீர்னு மிட் நைட், அதிகாலைனு போன் பண்ணி எழுப்பி சீன் சொல்வார். இப்படி எந்த விலகலும் இல்லாம இருக்கிற ஒருத்தரைப் பார்க்கிறது அரிது. ஒருமுறை டைரக்டரைப் பற்றி கவிஞர் நா.முத்துக்குமார் பேசும்போது, ‘கவிஞர் வந்திருக்கார், கடவுள் வந்திருக்கார். யாரை உள்ளே அனுப்ப?’னு லிங்குட்ட கேட்டா, ‘முதல்ல கவிஞரை அனுப்பு’னுதான் சொல்வார்’னார். அது உண்மை. யாரோ முகம் தெரியாத ஒருத்தர் எழுதியிருந்த கவிதையாக்கூட இருக்கலாம். அது பிடிச்சிடுச்சுன்னா தேடிப் போய் பாராட்டுவார். ‘பழம் விழுங்கிய பறவை பறக்கிறது மரத்தைச் சுமந்துகொண்டு'. இது குகை மா.புகழேந்தி என்பவரின் கவிதை. இதைப் படிச்ச சமயத்தில் தான் கலந்துக்கிற எந்தச் சபையா இருந்தாலும் எல்லார்கிட்டயும் அந்தக் கவிதையை ஷேர் பண்ணிட்டே இருந்தார்.

அவரைச் சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் நடந்துட்டிருந்த சமயம். ‘லிங்கு அவ்வளவுதான்’னு பலரும் பேசினாங்க. ஆனா, எங்க டைரக்டர் நண்பர்களுக்கு போன் பண்ணி, ‘ஒரு கவிதை எழுதியிருக்கேன். எப்படி இருக்குனு சொல்லுங்க’னு தான் எழுதிய கவிதையை வாசித்துக்காட்டினார். இதுதான் எங்க டைரக்டர். இப்ப ‘சண்டக்கோழி-2’ டிஸ்கஷன் நடந்துட்டிருக்கு. டைரக்டரோட  அந்த டிஸ்கஷனுக்கு சீக்கிரமே போகணும்.”