
News
ஓவியங்கள்: கண்ணா

``எதுக்குய்யா என்னைக் கலாய்ச்சு இவ்ளோ சின்னதா மீம் போட்டிருக்காங்க?''
``இது `சோட்டா மீம்' தலைவரே!''
- கே.லக்ஷ்மணன்

``தவ வாழ்க்கை வாழ ஆசைப்படும் தலைவர் அவர்களே...
சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்படும் எம்.எல்.ஏ-க்களே..!''
- பெ.பாண்டியன்

``மன்னா, ஓலை வந்திருக்கிறது.''
``எங்கிருந்து... எதற்கு அமைச்சரே?''
``நீங்கள் பதுங்கி இருந்த ரிசார்ட்டிலிருந்து. க்ளீன் பண்ணிட்டுப் போகணுமாம்!''
- வேம்பார் மு.க.இப்ராஹிம்

``ஒரு டிக்கெட் எடுத்துட்டு, மூணு பேர் பயணம் பண்றீங்களே!''
``ஒரு ஓட்டு வாங்கிட்டு மூணு பேர் முதலமைச்சர் ஆகுறாங்க. நாங்க பண்ணா மட்டும் தப்பா!''
- கொளக்குடி சரவணன்