Published:Updated:

"கார்த்தி என் நண்பர்!”

"கார்த்தி என் நண்பர்!”
பிரீமியம் ஸ்டோரி
"கார்த்தி என் நண்பர்!”

ஆர்.வைதேகி

"கார்த்தி என் நண்பர்!”

ஆர்.வைதேகி

Published:Updated:
"கார்த்தி என் நண்பர்!”
பிரீமியம் ஸ்டோரி
"கார்த்தி என் நண்பர்!”
"கார்த்தி என் நண்பர்!”

திதி ராவ்... தமிழ் சினிமாவுக்கு மணிரத்னம் தந்திருக்கும் புதுப் பரிசு. ஹைதராபாத் வனர்பதி ராஜா சமஸ்தானத்தின் வாரிசு!

``நான், மணி சார் படங்களைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவள். சமீபத்தில் வந்த `ஓகே கண்மணி'யைப் பார்த்து, அவ்ளோ ரசிச்சிருக்கேன். ரொம்பச் சின்ன வயசுல இருந்தே மணி சார் படத்தின் நாயகியா நடிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். அவர் படத்துக் கதாநாயகிகள், எப்பவுமே ஸ்ட்ராங்கான பெண்களா இருப்பாங்க. இப்போ நானும் அவரின் நாயகி.

மெட்ராஸ் டாக்கீஸ்ல இருந்து போன் வந்த அந்த நிமிஷத்தோட படபடப்பு, எனக்கு இன்னும் இருக்கு. சென்னை ஆர்.ஏ.புரத்தில் இருக்கும் அவர் அலுவலகத்துக்குப் போனேன். ஒரு காட்சியைச் சொல்லி நடிக்கச் சொன்னாங்க. டெஸ்ட்ஷூட் முடிஞ்சதும் `நீங்க என் படத்துல நடிக்கிறீங்களா?'னு மணி சார் கேட்டார். அய்யோ... அந்த நிமிஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது'' எனப் பட்டாசாகப் பேசுகிறார் அதிதி.


``மணி சார், ஒரு மெஜிஷியன். தான் நினைச்சதை 100 சதவிகிதம் கொண்டுவரக்கூடியவர். மணி சார் படத்துல நடிக்கிற யாருக்கும் சினிமா மீது மிகப்பெரிய காதல் வந்துடும். அவர்கிட்ட அவ்வளவு கத்துக்கலாம். என்னோட காட்சிகள் முடிஞ்ச பிறகும்கூட, பல நாள் நான் மணி சார் இயக்கும் ஸ்டைலைப் பார்த்து ரசிப்பதற்காகவே அங்கேயே இருந்திருக்கேன்.''

``ஹீரோ கார்த்தி எப்படி இருக்கார்?''

``நான் இந்தப் படத்துல நடிக்க ஒப்பந்தம் ஆனதுமே கார்த்தியைப் பற்றி நிறைய விசாரிச்சேன். எல்லாருமே அவரோட முதல் படமான `பருத்தி வீரன்' பற்றிச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதுக்காகவே அந்தப் படம் பார்த்தேன். `பருத்தி வீரன்' பார்த்த பிறகு, `காற்றுவெளியிடை' படப்பிடிப்பில்தான் கார்த்தியை முதல்முறையா நேரில் சந்திச்சேன். அவ்வளவு தன்மையா, எளிமையா இருந்தார். நிறைய சொல்லிக்கொடுத்தார். `ஒரு ஹீரோவுக்கு நடிப்புல இவ்வளவு ஆர்வம் இருக்க முடியுமா!'னு ஆச்சர்யப்பட்டுப்போனேன். கார்த்தி மிகச்சிறந்த நடிகர். நல்ல நண்பர்.''

``மணிரத்னம் பட கதாநாயகி, தமிழ் பேசக் கத்துக்கிட்டீங்களா?''


``மொழி தெரியாம படத்துல நடிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். மணி சாரும் அவரோட உதவியாளர்களும் எனக்குத் தமிழ் கத்துக்கொடுக்க நிறைய முயற்சி பண்ணாங்க. சில நேரம் நான் சுலபமா புரிஞ்சுக்கிற மாதிரியான ஆங்கில வார்த்தைகள் மூலமா தமிழ் சொல்லிக் கொடுப்பாங்க. படப்பிடிப்புத் தளத்தில் மணி சார்கிட்ட கூடுமானவரை தமிழ்ல பேச முயற்சி பண்ணினேன். நான் சரியா டயலாக் பேசிட்டேன்னா, கேமராவுக்குப் பின்னால் இருந்து மணி சார் சின்னதா சிரிப்பார். அதுதான் அவர்கிட்ட இருந்து கிடைக்கிற மிகப்பெரிய பாராட்டு.''

``ஒரு நடிகையா தமிழ் சினிமா உலகை எப்படிப் பார்க்கிறீங்க?''

``இந்தி சினிமாவைப் பொறுத்தவரைக்கும் நிறைய மாற்றங்களைப் பார்க்கிறேன். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வர ஆரம்பிச்சிருக்கு. அது நல்ல மாற்றம். இந்தியில் `பூமி'னு ஒரு படம் பண்றேன். அப்பா-மகள் உறவைப் பற்றிய அந்தப் படத்துல, `பூமி'ங்கிற முன்னணி கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்கிறேன். இது பெண்களை மையப்படுத்தின படம். அப்படிப்பட்ட படங்கள் தமிழிலும் வரணும்.''