Published:Updated:

குற்றம் 23 - சினிமா விமர்சனம்

குற்றம் 23 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
குற்றம் 23 - சினிமா விமர்சனம்

குற்றம் 23 - சினிமா விமர்சனம்

குற்றம் 23 - சினிமா விமர்சனம்

டவுளுக்கு நிகராக மதிக்கப்படும் மருத்துவர்களில் சிலர், சாமான்ய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்று கிறார்கள் என்பதும், கிரிமினல்கள் மருத்துவத் துறைக்குள் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்ற பயங்கரமுமே `குற்றம் 23’.

தேவாலயத்துக்குச் செல்லும் ஒரு டிவி அதிபரின் மனைவி காணாமல்போகிறார். அவருக்குப் பாவமன்னிப்பு வழங்கும் பாதிரியார் கொல்லப்படுகிறார். இந்தக் கடத்தல் மற்றும் கொலைவழக்கு காவல் துறை உதவி ஆணையர் அருண் விஜயிடம் வருகிறது. அவர் இந்த வழக்கை விசாரிக்கும்போதே, வரிசையாக சில கர்ப்பிணிப் பெண்கள் மர்மமான முறையில் உயிர் இழக்கிறார்கள். அதில் அருண் விஜயின் அண்ணியும் ஒருவர். எல்லா மரணங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்டறியும் அருண் விஜய், வில்லனை எப்படி அழிக்கிறார் என்பதே கதை.

குற்றம் 23 - சினிமா விமர்சனம்

போலீஸ் மிடுக்கிலும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களிலும் அதிரடி ஆக்‌ஷனிலும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் அருண் விஜய். நடிக்க நல்ல வாய்ப்புள்ள பாத்திரம், மஹிமா நம்பியாருக்கு. விசாரணைக்காக வீடு தேடிவரும் போலீஸ் மற்றும் கொலை செய்வதற்காக வீடு தேடிவரும் வில்லன்கள் என, இரண்டு நேரெதிர் சூழல்களிலும் நச்சென நடித்திருக்கிறார் மஹிமா.

ராஜேஷ்குமாரின் பாக்கெட் நாவல்  கதைக்குத் தங்கமுலாம் பூசியிருக்கிறது இயக்குநர் அறிவழகனின்

குற்றம் 23 - சினிமா விமர்சனம்

மேக்கிங்கும் அதிரடிக்கும் திரைக்கதையும். மெள்ள மெள்ள முடிச்சுகளை அவிழ்க்கும் வித்தையில் அவ்வளவு சுவாரஸ்யம். பணம் எவ்வளவு செலவானாலும் சரி, எப்படியாவது சிகிச்சை என்ற பெயரில் ஒரு பெண் எவ்வளவு துயரங்களைச் சந்தித்தாலும் சரி, ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என ஓடுபவர்களுக்கு, `தத்தெடுப்பதும்  தாய்மைதான்' என்ற கருத்தை மிகவும் இயல்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் வசனங்களிலும், சில பாத்திரப் படைப்புகளிலும் வலிந்து திணித்திருக்கும் பிற்போக்குத்தனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

உயர் போலீஸ் அதிகாரி என்றாலே அவருடன் கூட இருக்கும் உதவி போலீஸ் காமெடியனாகத்தான் இருக்க வேண்டுமா? 23 என்பதற்குக் காரணம் ஓ.கே. அதை, மெடிக்கல் ரிப்போர்ட்டில் மருத்துவமனையே ஆவணமாக்குவது எல்லாம் நாடகத்தனம். மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து விட்டு, பிறகு ப்ளாக்மெயில் வில்லன் எபிசோடுக்குத் தாவியிருப்பது சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

விஷால் சந்திரசேகரின் இசை, பாடல்களிலும்  பின்னணியிலும் அலுக்கவும் இல்லை; பட்டையைக் கிளப்பவும் இல்லை. ஒளிப்பதிவாளர் பாஸ்கரனையும் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசனையும் ஓடவிட்டிருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா. எல்லா சண்டைகளும் சரவெடி.

குறைகளை இன்னும் குறைத்திருந்தால், முக்கியமான மெடிக்கல் த்ரில்லராக மாறியிருக்கும் `குற்றம் 23’.

- விகடன் விமர்சனக் குழு