Published:Updated:

யாக்கை - சினிமா விமர்சனம்

யாக்கை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
யாக்கை - சினிமா விமர்சனம்

யாக்கை - சினிமா விமர்சனம்

யாக்கை - சினிமா விமர்சனம்

ருத்துவத் துறைக்கு உடனடியாக ஓர் அறுவைசிகிச்சை வேண்டும் என்கிறது `யாக்கை’.

பதிமூன்றாவது மாடியில் இருந்து தள்ளப்பட்டுக் கொலையாகிறார் ராதாரவி. குற்றவாளியைத் தேடி வழக்கம்போல பிரகாஷ்ராஜ் விசாரணையை ஆரம்பிக்கிறார். செல்லும் வழியெல்லாம் கொலை மேல் கொலை. ராதாரவியின் மகன் குருசோமசுந்தரம் ஒரு ட்ராக்கில் போக, இன்னொரு ட்ராக்கில் கிருஷ்ணாவும் சுவாதியும் காதலிக்கிறார்கள்.  இந்த மூன்று பாதைகளும் சேரும் இடம்... கதையின் மையக்கரு.

4ஜி மொபைலில் டவுண்லோடு ஆகும் டேட்டாபோல அவ்வளவு வேகம் கிருஷ்ணாவின் உடல்மொழியில். கடைசி ஆக்‌ஷனுக்கு ஹைஃபை தரலாம். சுவாதி படத்துக்குப் படம் அழகாகிக்கொண்டே போகிறார். வெரைட்டியான ரோல்கள் கிடைப்பதில்தான் தடை. நிஜ போலீஸைவிட நிறைய வழக்குகள் பார்த்ததாலோ என்னவோ, அவ்வளவு இலகுவாக வேலையை முடிக்கிறார் பிரகாஷ்ராஜ். கமலுக்கு அடுத்து நிறைய கெட்டப் வாய்ப்பு குரு சோமசுந்தரத்துக்குத்தான். சூட் போட்டுக்கொண்ட பின்னரும் ஆங்காங்கே அவரிடம் எட்டிப்பார்க்கும் உள்ளூர் பேச்சுவழக்கைத் தவிர, மற்றதெல்லாம் குட் கோயிங் குரு.

`ஆண்மை தவறேல்' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் குழந்தை வேலப்பனுக்கு `யாக்கை’யில் கொஞ்சம்

யாக்கை - சினிமா விமர்சனம்

சுமையான வேலை. இதிலும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசியதற்காகப் பாராட்டலாம். த்ரில்லர் கதையைப் பரபரப்பாகச் சொல்லித்தான் ஆக வேண்டுமா என நின்று நிதானமாகப் பேசுகிறார். மேக்கிங்கில் ரசிக்கவைத்தாலும், திரைக்கதை மெதுவாகப் போனால் எப்படி? முன்பின்னாக மாற்றி மாற்றி வரும் திரைக்கதையில் எக்ஸ்ட்ரா தெளிவு இருந்திருக்க வேண்டும்.

சென்னையில் கொலை எனப் படம் ஆரம்பிக்கிறது. ஆனால், கோவையில் கொலை என முடிகிறது. கொலையை பல நாட்களாக விசாரிக்கிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் கொலையாளி, அவர் பிடிக்கும் வரை அதே உடையில் சுற்றுகிறார். அந்த குடோனில் கிடக்கும் மூன்று பிணங்களையும் அங்கேயேவா விட்டுவைக்கிறது போலீஸ்? அத்தனை பேர் வந்துபோகும் மருத்துவமனையில், என்னவெல்லாம் செய்கிறான் கொலைகாரன்? இப்போதெல்லாம் மாத்திரையைவிட கேமராதானே அதிகம் இருக்கின்றன? லாஜிக் மீறலை ஏற்கலாம். முழுவதுமாகப் புறந்தள்ள முடியுமா?

`சொல்லித் தொலையேன்மா' பாடலில் சொக்கவைக்கிறார் யுவன். ஆவ்வ்வ் சீனைக்கூட ஆஸ்கர் ரேஞ்சுக்கு மாற்றும் பின்னணி இசையில் பின்னிட்டீங்க யுவன். ஓப்பனிங் காட்சியைத் தனது விசிட்டிங் கார்டாக  கட்செய்து வைத்துக்கொள்ளலாம் ஒளிப்பதிவாளர் சத்யா.

கடும் டயட்டிலிருந்து இளைத்ததுபோல இருக்கிறது இந்த `யாக்கை’!

- விகடன் விமர்சனக் குழு