
News
ஓவியங்கள்: கண்ணா

``உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு வரும் எனக்கு...''
``கல்வீச்சுல இருந்து பாதுகாப்பு வேணுமா தலைவரே?''
- ஏந்தல் இளங்கோ

“முதலமைச்சர் ஆக என்ன தகுதி வேண்டுமாம்?''
“உடனே ராஜினாமா செய்ய, ரெடியா இருக்கணுமாம்.”
- ஏ.பிரபாகரன்

``அந்த டெய்லர் விவரமான ஆளுன்னு எப்படிச் சொல்றே?''
``கடையை, சட்டசபைக்குப் பக்கத்துல மாத்திக்கிட்டாரே!''
- வேம்பார் மு.க.இப்ராஹிம்

``ஷூட்டிங்கைத் தலைமைச் செயலகத்தில் நடத்த அனுமதி கேட்டிருக்கிறாராமே டைரக்டர்... ஏன்?''
``சண்டைக் காட்சிகளை செலவே இல்லாமல் எடுத்துடலாம்னுதான்!''
- எம்.மிக்கேல்ராஜ்