`இந்த உலகம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதுதானா?’ என்ற கேள்வியை முகத்தில் அறைந்து கேட்கிறது `நிசப்தம்'.

எந்நேரமும் வேலை வேலை என ஓடும் நடுத்தர வர்க்கக் குடும்பம் அஜய் - அபிநயாவுடையது. அந்த வீட்டின் மொத்த நிம்மதியும் சந்தோஷமும் மகள் சாதன்யாவைச் சுற்றிதான். அந்த எட்டு வயதுப் பூவை ஒரு கொடூர மிருகம் கசக்கி எறிய, தனக்குள்ளே தன்னைச் சுருக்கிக்கொள்கிறாள் அந்தக் குழந்தை. அதன் பின்னர் ஆண்களைப் பார்க்கவே அஞ்சும் அவளின் மனக் குமுறல்களும், அவள் பெற்றோரின் கையறுநிலையும், அந்த வழக்கின் போக்கும், சட்டத்தின் ஓட்டைகளுமே கதை.

சமூகம் என்பது தனிமனிதனிலிருந்தே தொடங்குகிறது. நாம் குழந்தைகளாக இருந்தபோது நமக்கு பயம் இல்லாமல் இருந்ததா, நாம் வளர்ந்த பிறகு, அந்தப் பயம் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல்போக ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறோமா... என்பன போன்ற ஆயிரம் கேள்விகளை எழுப்பும் கதைக்களமே படத்தின் பலம்.

சிரிக்கும்போது தேவதையாகத் தெரிகிறாள் சாதன்யா. அதனால்தான் அவள் அழும்போதெல்லாம்

பரவும் நிசப்தம் இதயத்தில் குத்துகிறது. அப்பாவைக்கூட பார்க்க முடியாமல் உடல் முழுவதையும் போர்வைக்குள் அடைத்துக்கொள்வதும், மகளுக்காக வெந்துபுழுங்கும் உடைக்குள் இருக்கும் அப்பாவை, அடையாளம் கண்டு அன்பு பாராட்டுவதும், `நான் ஏன் பிறந்தேன்?’ என்ற கேள்வியையே பதிலாக உளவியல் நிபுணரிடம் கொடுக்கும்போதும்… இந்தக் கதையை எழுதியதே சாதன்யாதானோ எனும்படி நடித்திருக்கிறாள்.

இப்படி ஒரு கதையைப் படமாக்கியதற்காக இயக்குநர் மைக்கேல் அருணுக்குப் பாராட்டுகள். நாம் அடிக்கடி செய்திகளில் கடந்துபோகும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் எவ்வளவு கொடூரமானது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக் கிறார்.

ஆனால், கதையைத் தேர்ந்தெடுத்ததில் காட்டிய அக்கறையை, படமாக்கியதிலும் இயக்குநர் காட்டியிருக்க வேண்டும். நடிகர்கள் தேர்விலிருந்து கிட்டத்தட்ட அனைத்து டெக்னிக்கல் ஏரியாக்களிலும் படம் பலவீனமாக இருக்கிறது. திரைமொழி கைகூடி வராததால் பல முக்கியக் காட்சிகள், அதன் வீரியத்தை இழந்து நகர்கின்றன.

படமும் `ஹோப்' என்ற கொரியப் படத்தின் அப்பட்டமான தழுவல். அஜய்யின் யூனிஃபார்ம் தொடங்கி கடை, குடை, மழை வரைக்கும் இரண்டு படங்களுக்கும் ஓராயிரம் ஒற்றுமைகள். அதை டைட்டில் கார்டிலாவது சொல்லியிருக்க வேண்டாமா இயக்குநரே?

சொல்லியிருக்கும் சம்பவங்களால் `நிசப்தம்' கவனம் பெறுகிறது.

- விகடன் விமர்சனக் குழு