``பட பூஜை. முதல் ஷாட் எடுக்கத் தயாராகிட்டு இருக்கேன். முதல் பட இயக்குநருக்கே உள்ள பரபரப்பு, படபடப்பு. அப்பதான் தெரியாத போன் நம்பர்ல இருந்து ஒரு அழைப்பு. கட் பண்ணிட்டேன். ரெண்டாவது முறையும் அதே நம்பர்லயிருந்து அழைப்பு. அதையும் கட் பண்ணிட்டேன். விடாம போன் அடிச்சுட்டே இருந்தது. ‘இந்த முறை எடுப்போம்’னு நினைச்சு எடுத்தால், ‘வாழ்த்துகள் ராஜ்குமார் பெரியசாமி. படம் நல்லா வரும். கவலைப்படாம பண்ணுங்க’னு விஜய் சார் பேசுறார். ‘துப்பாக்கி’ படத்தில் சார்கூட வொர்க் பண்ணின பிறகு, அவரைச் சந்திக்கவே இல்லை. பேப்பர் விளம்பரத்தைப் பார்த்துட்டு அவர் போன் பண்ணி வாழ்த்தினது நிறைவா இருந்துச்சு’’ - ‘ரங்கூன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ராஜ்குமார் பெரியசாமியின் வார்த்தைகளில் அவ்வளவு உற்சாகம். இவர் ஏ.ஆர்.முருகதாஸின் வார்ப்பு.

‘‘சிறு வயதிலிருந்தே சினிமா ஆர்வம். லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும்போதே உதவி இயக்குநரா சேர முயற்சிசெய்தேன். இடையில் விஜய் டிவி-யில் இன்டர்ன்ஷிப். பிறகு, அங்கேயே வேலை. கொஞ்ச நாள் டிவி-யில் வேலை பார்த்துட்டு, பிறகு சினிமாவுக்குப் போகலாம்கிறதுதான் என் எண்ணம். ஆனா, ‘சூப்பர் சிங்கர் சீனியர், ஜூனியர்', `ஜோடி நம்பர்-1', `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?'னு ஒவ்வொரு ஷோவும் ஒரு வருஷம்னு அந்த வேலை அப்படியே என்னை உள்ளே இழுத்துடுச்சு. பிறகுதான் முருகதாஸ் சார்கிட்ட உதவி இயக்குநர்.”

‘‘ ‘ரங்கூன்’ என்ன கதை?’’

“சினிமா, பொழுதுபோக்கு மீடியாதான். ஆனாலும் அது ஒரு காலத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி வாழ்வியல் சார்ந்து நம்பகத்தன்மையோடு இருக்கணும்னு நினைப்பேன். அப்படியான ஒரு சினிமாதான் ‘ரங்கூன்’.

இந்தத் தலைப்பிலேயே ஒரு கதை இருக்கு. ரங்கூன் நகரம் பற்றி இப்ப உள்ளவங்க எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியலை. தெரியாதவங்களுக்காகச் சொல்றேன். ரங்கூன், பர்மா(மியான்மர்)வின் பழைய தலைநகரம். பிரிட்டிஷ் பீரியட்ல பர்மா நம்மகூடத்தான் இருந்தது. அப்ப இந்திய தேசிய ராணுவத்தில் சேர, விவசாயம் பண்ண, வாணிபம் பண்ண ஒரு பெரிய கூட்டமே இங்கே இருந்து அங்கே போனாங்க. நல்லா செழிப்பாத்தான் இருந்தாங்க. ஆனா, அந்த அரசோட சில திட்டங்களால் 60-களின் ஆரம்பத்தில் ஒரு பெரிய கூட்டம் திரும்ப அங்கே இருந்து இங்கே இடம்பெயர்ந்தது. ‘அங்கேயே இருந்து பிழைச்சுக்கலாம்’னு இருந்தவங்ககூட 80-களின் இறுதியில் மறுபடியும் இங்கே வந்தாங்க. அப்படி வந்தவங்க, தமிழகத்தின் பல்வேறு பகுதி முகாம்கள்ல தங்கவைக்கப்பட்டாங்க. சென்னையில், குறிப்பா வடசென்னையில் அந்த முகாம்கள் அதிகம். `பர்மா தமிழர் குடியிருப்புகள்'னு இன்னமும் இருக்கு. இவங்க எல்லாரும் தமிழர்கள்தான். ஆனா, அவங்களோட உணவு, உடை, வாழ்வியல், விழாக்கள்னு எல்லாத்துலயுமே பர்மியக் கலாசாரம் கலந்திருக்கும். ஜாதி, மதம் தாண்டி, அவங்களுக்குள் பொண்ணு கொடுப்பது எடுப்பதுனு அவங்க ஒரு தனி சமூகமா வாழ்றாங்க.

இப்படி ரங்கூன்ல இருந்து வடசென்னைக்கு வந்த வெங்கட் என்கிற 25 வயசு இளைஞன்தான் என் ஹீரோ. அவனோட 25 வயசுல என்ன நடக்குது, அதுல அவன் கற்றுக் கொண்டதைவெச்சு என்ன பண்றான்னு படம் ஒரு லைஃப் டிராவலா இருக்கும். இது ஒரு த்ரில்லர், ஆட்டோபயோகிராஃபி.”

“கெளதம் கார்த்திக் எப்படி நடிச்சிருக்கார்?”

‘‘ஊட்டியில் இருந்தவர்; ஹாலிவுட் படங்கள் பார்த்து வளர்ந்தவர்; மணிரத்னம் சாரால் தற்செயலா நடிக்க வந்தவர். அப்படிப்பட்டவர், வெங்கட் என்ற இந்த கேரக்டரை அடாப்ட் பண்றது பெரிய கஷ்டம். அதுவும் இது வடசென்னை கேரக்டர். உடல்மொழி, பேச்சுவழக்கு எல்லாமே அவரின் உண்மையான கேரக்டருக்கு நேர்எதிர். நிறைய கேட்டுக் கிட்டார். ரியல் லொகேஷன்களுக்குப் போய் நிறைய மனிதர்களை உள்வாங்கிக் கிட்டார். அந்த ஸ்லாங்குக்கு நிறைய மெனக்கெட்டார். அவருக்கு நிச்சயம் இது சரியான அடையாளமா இருக்கும்”