Published:Updated:

"இசைப்புயல் இயக்குநர் ஆகப்போறார்!"

"இசைப்புயல் இயக்குநர் ஆகப்போறார்!"
பிரீமியம் ஸ்டோரி
"இசைப்புயல் இயக்குநர் ஆகப்போறார்!"

நா.சிபிச்சக்கரவர்த்தி

"இசைப்புயல் இயக்குநர் ஆகப்போறார்!"

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
"இசைப்புயல் இயக்குநர் ஆகப்போறார்!"
பிரீமியம் ஸ்டோரி
"இசைப்புயல் இயக்குநர் ஆகப்போறார்!"

``மூணு நாளா செம அலைச்சல் ப்ரோ. சரியா தூங்கலை. அவ்வளவு வேலை. ஆனா, இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. இனி பரபரனு நடிக்க வேண்டியதுதான்'' - ஆர்வமாகப் பேசுகிறார் நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். ஜாலி, கேலிப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர், இப்போது இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், ராஜீவ் மேனன் படங்களின் ஹீரோவாக வந்து நிற்கிறார்!

"இசைப்புயல் இயக்குநர் ஆகப்போறார்!"

``உங்களுக்குள் ஒரு நடிகர் இருக்கார்னு எப்போ கண்டுபிடிச்சீங்க?''

``இசை ஆல்பம் பண்ணணும்கிறதுதான் என் கனவு. எனக்கு இன்ஸ்பிரேஷன் மைக்கேல் ஜாக்ஸன். அவர் ஆடுவார்; பாடுவார்; பாடல் எழுதுவார்; எல்லாம் பண்ணுவார். அந்த மாதிரி ஆல்பம் பண்ணணும்னுதான் முதல்ல நினைச்சுட்டிருந்தேன். அந்தச் சமயத்துல ஏ.ஆர்.முருகதாஸ் சார் என்னை ஒரு நடிகர் ஆக்கினார். `ஒரு மியூஸிக்கல் படம் பண்றோம். நீ நடிக்கணும்'னு சொன்னார். எனக்கு செம சர்ப்ரைஸ். `அய்யோ சார்... என்னால முடியுமானு தெரியலையே'னு சொன்னேன். `ஸ்கிரீன்ல பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்'னு அவர்தான் உற்சாகப்படுத்தினார். ஏதோ ஒரு காரணத்தால, அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. ஆனா, எனக்கு ஏற்றமாதிரி கதைகள், என்னைத் தேடி அதுவாகவே வந்தன. எனக்கு எது செட்டாகுமோ அந்த மாதிரிப் படங்கள் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களே அவங்க படத்தில் என்னை நடிக்கக் கூப்பிடுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


 `` `நாச்சியார்’ படத்தில் நடிக்க மனதளவிலும் உடல் அளவிலும் தயாராகிட்டீங்களா?


``பாலா சார் படத்துல நான் நடிப்பேன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. திடீர்னு ஒருநாள் போன் பண்ணி வரச் சொன்னார். புதுப் படத்துக்கு இசையமைக்கத்தான் வரச் சொல்றாரோனு போனேன். ஆனா, `நீ நடிக்கணும்'னு சொன்னார். எனக்குப் பயங்கர ஷாக். காமெடியா, ஜாலியா படம் பண்ணிட்டிருந்த எனக்கு, `நாச்சியார்’ முழுக்க முழுக்க பெர்ஃபாமன்ஸ் படம். பாலா சார் ஒரு மாஸ்டர். அவர்கூட வொர்க் பண்ணியிருக்கேன்கிறதால அவர் என்ன எதிர்பார்க்கிறார்னு எனக்குப் புரியும். அவர் என்ன சொல்றாரோ அதைச் சரியா கொடுக்கணும்கிறதுலதான் என் முழுக் கவனமும் இருக்கு. ரொம்ப ரொம்ப முக்கியமான படம் இது.''

``வெற்றிமாறன் படம் என்ன கதை?''


``வெற்றிமாறனின் முதல் படத்துல இருந்து அவரோட ஒண்ணா டிராவல் பண்ணிட்டிருக்கேன். அவர் இதுவரைக்கும் எடுத்திருக்கும் படங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்ட படம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு படம் அதிகம் பேசப்படும். அது மாதிரி இந்தப் படமும் காலத்துக்கும் நிற்கும். இந்தக் கதைக்காக வெற்றிமாறனுக்கு ஒரு சின்னப் பையன் தேவைப்பட்டிருக்கான். அதுக்குத்தான் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கார்.''

 ``ராஜீவ் மேனன் இயக்கத்தில் நீங்க நடிக்கும் `சர்வம் தாள மயம்’ படத்தின் தலைப்பே, இது ஒரு மியூஸிக் சப்ஜெக்ட்னு சொல்லுதே?''

``ஆமாம்... படத்தின் ஹீரோ ஓர் இசைக் கலைஞன். அதனாலதான் ராஜீவ் மேனன் சார் என்னை செலெக்ட் பண்ணியிருக்கார்னு நினைக்கிறேன். எப்படி `லா லா லேண்டு' படத்தைக் கொண்டாடுறோமோ, அப்படி நம்ம ஊருக்கு `சர்வம் தாள மயம்’ இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூஸிக் பண்றார். படம் நிச்சயம் வேற லெவல். படத்துக்காக உமையாள்புரம் சிவராமன் சார்கிட்ட மிருதங்கம் கத்துட்டிருக்கேன். இது தவிர `4ஜி', `ஐங்கரன்', `அடங்காதே'னு வரிசையா நிறைய படங்கள் பண்றேன்.''

"இசைப்புயல் இயக்குநர் ஆகப்போறார்!"

``நீங்க ஹீரோவாக நடிக்கிறது பற்றி உங்க மாமா ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொல்றார்?''

``எனக்கும் அவருக்கும் நல்ல ரேப்போ இருக்கு. வாராவாரம் அவரைப் போய் பார்ப்பேன். அவங்க பசங்க என்கூட ரொம்ப க்ளோஸ். ஆனா, நாங்க சினிமாவைப் பற்றி பேசுறது ரொம்பக் குறைவு. ரஹ்மான் சாரும் ரொம்ப பிஸி. இப்ப அவர் ஒரு ஸ்கிரிப்ட் எழுதிட்டிருக்கார். சீக்கிரமே இயக்குநர் ஆகப்போறார்.''

``உங்கள் காதல் மனைவி சைந்தவி, நீங்கள் நடிக்கிற படங்களைப் பார்த்துட்டு என்ன சொல்வாங்க?''


``சைந்தவி, எல்லா படங்களும் பார்ப்பாங்க. ஆனா, ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க. அவங்க பாடுவாங்க; நிறைய கச்சேரிகளுக்குப் போவாங்க. நான் `கச்சேரி எப்படி இருந்துச்சுயா?'னு கேட்பேன். அவ்வளவுதான். ரெண்டுபேருமே எங்கள் வேலைகளைப் பத்தி பெருசா பேசிக்க மாட்டோம்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism