Published:Updated:

"சாய் பல்லவிக்கு... கதை ரெடி!"

"சாய் பல்லவிக்கு... கதை ரெடி!"
பிரீமியம் ஸ்டோரி
"சாய் பல்லவிக்கு... கதை ரெடி!"

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

"சாய் பல்லவிக்கு... கதை ரெடி!"

பரிசல் கிருஷ்ணா - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
"சாய் பல்லவிக்கு... கதை ரெடி!"
பிரீமியம் ஸ்டோரி
"சாய் பல்லவிக்கு... கதை ரெடி!"
"சாய் பல்லவிக்கு... கதை ரெடி!"

`என் படத்துக்கு ஹீரோயின் சிம்ரன்... இல்லைன்னா ஜோதிகா” - இது பிரதீப் ரங்கநாதன்.

“என் படத்துக்கு ஹீரோயினே இல்லை ப்ரோ” - இது பிரபு ஜெயராம்.

கேள்வியை முடிக்கும் முன்னரே, “மடோனா செபாஸ்டின்” என மகேஷ் பாலசுப்பிரமணியமும், “சாய் பல்லவி” என நட்டு தேவும் தங்கள் தேர்வைச் சொல்ல, “த்ரிஷா” என்றார் ஸ்ரீவிஜய் கணபதி.

``உங்கள் கைவசம் உள்ள ஸ்க்ரிப்ட்டுக்கு யார் ஹீரோயின்?” என்ற நமது கேள்விக்கு வந்து விழுந்த பதில்கள்தான் இவை.

சரி... யார் இந்த ஐந்து பேர்?

இன்னும் சில வருடங்களில், “அட... செம படமா இருக்கே, யாருப்பா இந்த இயக்குநர்?” என நீங்கள் கேட்கப்போகிற நாளைய இயக்குநர்கள்.

மூவி பஃப் (Movie Buff) சார்பில் ‘ஃபர்ஸ்ட் கிளாப்' (First Clap) என்ற குறும்படப் போட்டி கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தேர்வாகிற படங்கள், `தமிழகத்தின் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படும்’ என்பது பலரையும் கவரவே, 250-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் போட்டியில் கலந்துகொண்டன. பி.சி.ஸ்ரீராம், வெற்றி மாறன், எழில் உள்ளிட்ட நடுவர் குழு இவற்றிலிருந்து, ஐந்து குறும்படங்களைத் தேர்வுசெய்தது. அவற்றை நீங்களும் திரையரங்கிலோ உங்கள் அலைபேசியிலோ கண்டிருக்கக்கூடும். யூடியூபிலும் இவை பதிவேற்றப்பட்டுள்ளன.

பிரதீப் ரங்கநாதனின் குறும்படம் `App(a) Lock’. அப்பா டெல்லி கணேஷ், மகளின் காதலனை அழைத்து, இருவரின் அலைபேசிகளையும் மாற்றிக்கொள்ளச் சொல்வாரே... அதுதான். பிரபு ஜெயராமின், ‘என்னங்க சார் உங்க சட்டம்?’  ஏழைஎளிய மக்களை வங்கிகள் நடத்தும் விதத்தை எதிர்த்துக் குரல் எழுப்பியது. மகேஷ் பாலசுப்ரமணியத்தின், ‘இந்த நாள் இனிய நாள்’ தியேட்டர்களில் பரவலான கைத்தட்டலைப் பெற்றுக்கொண்டிருக்கிற கேங்ஸ்டர் குறும்படம். நட்டு தேவின், ‘Think & Ink’, உங்கள் பணம்தான் உங்களுக்கே வாக்களிக்கக் கையூட்டாக வருகிறது என்ற செய்தியைச் சொல்கிறது. ஸ்ரீவிஜய் கணபதி தனது, ‘இவள் அழகு’ குறும்படம் மூலம் இளம்பெண்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார்.

"சாய் பல்லவிக்கு... கதை ரெடி!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`` `App(a) Lock' படத்தில் நானே நடிச்சதால `சொந்த அனுபவமா?’னு கேட்கிறாங்க. அப்படி இல்லை. வழக்கமா நம்ம போனை ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கொடுத்தால்கூட அவன் வேறு எதையும் ஓப்பன் பண்றானான்னு பார்த்துட்டே  இருப்போமே. அதுல இருந்துதான் இந்த ஐடியா வந்தது” என்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

‘என்னங்க சார் உங்க சட்டம்’ குறும்படத்தில் ராகுல் தாத்தா கெத்துகாட்டியிருக்கிறார். எமோஷனலாக முடியும் இந்தக் குறும்படத்துக்கு, தாத்தாவின் ரகளையான உடல்மொழி செம கெத்து சேர்க்கிறது. 

`மாநகரம்', `பலூன்' படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம்,  ‘இந்த நாள் இனிய நாள்’ குறும்படத்தை இயக்கிய மகேஷ் பாலசுப்ரமணியத்துக்கு ப்ளஸ்.  “ஸ்டன்ட் நடிகர் தீனா ரொம்ப பிஸியா இருந்தார். நாலு மணி நேரம்தான் கொடுத்தார். கடகடனு எடுத்துட்டேன்” என்கிறார் மகேஷ்.

“கஸ்தூரிப் பாட்டி ஃபுல் மேக்கப்ல வந்தாங்க. ஒரு கிலோ மீட்டருக்கு ஷாட் இருக்கிற மாதிரி நடக்கவெச்சுதுல, நல்லா வேர்க்க விறுவிறுக்கிற முகத்துடன் வந்தாங்க. அப்புறம்தான் ரியல் ஷூட் ஆரம்பிச்சோம். யதார்த்தமா வந்திடுச்சு” என்கிறார் `Think & Ink' படத்தை இயக்கிய நட்டு தேவ்.

ஆஸ்கர் விருது வாங்கியது போன்ற பூரிப்புடன் பேசத் தொடங்குகிறார் ஸ்ரீவிஜய் கணபதி. இவர் மதுரைப் பையன். ‘இவள் அழகு’ குறும்படத்தின் இயக்குநர். ``பெண்களின் அந்தரங்கங்களை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து சமூகவலை தளங்களில் பகிரப்படும் வீடியோக்களைக் கண்டு பயந்தோ, வெட்கப்பட்டோ ஒதுங்காமல், வாழ்க்கையை எதிர்கொள்ளத் துணிவு வளர்க்கும் கதை இது. அந்த கேரக்டரில் தைரியமாக முன்வந்து நடித்த நட்சத்திராவை நிச்சயம் பாராட்டலாம்'' என்கிறார் ஸ்ரீவிஜய் கணபதி.

“இந்த ஐந்து குறும்படங்களின் இயக்குநர்களுக்கு மட்டும் அல்லாது முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான புரொஃபைல் பக்கமும் உருவாக்கியிருக்கிறோம். அதைப் பார்த்தும் பலர் தொடர்புகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படங்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளோடு, ஏப்ரல் மாதம் எங்கள் நடுவர்களின் கருத்துகளையும்கொண்டு இவற்றில் மூன்று சிறந்த படங்கள் தேர்வாகும்” என்கிறார் மூவி பஃப் நிறுவனத்தின் சதீஷ் துளசி.

கலக்குங்க ப்ரோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism