Published:Updated:

"தாத்தா நிச்சயம் மீண்டுவருவார்!”

"தாத்தா நிச்சயம் மீண்டுவருவார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
"தாத்தா நிச்சயம் மீண்டுவருவார்!”

ம.கா.செந்தில்குமார்

"தாத்தா நிச்சயம் மீண்டுவருவார்!”

‘‘ ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘தீபாவளி’னு காதல் படங்களும் நான்தான் பண்ணினேன். ‘வெள்ளக்காரத்துரை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’னு காமெடிப் படங்களையும் நான்தான் பண்ணினேன். உங்களுக்கு என்ன மாதிரிப் படம் வேணும்... காதலா, காமெடியா?’னு டைரக்டர் எழில் சார் ரொம்பத் தெளிவா கேட்டார். ‘காமெடியே பண்ணுவோம் சார்’னு சொன்னேன். ரெண்டு ஒன்லைன்கள் சொன்னார். ரெண்டுமே சூப்பரா இருந்தது. ரெண்டையும் ஒரே படமா பண்ணிட்டார். ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் ரெடி. ஏப்ரல் மாதம் வர்றோம்’’ - ரிலாக்ஸாகப் பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

‘‘ ‘சரவணன் இருக்க பயமேன்’ - சாமி படத் தலைப்பு மாதிரி இருக்கே?’’

‘`சாமியா? பேயே இருக்கு. `எனக்கு சாமி மேலயே நம்பிக்கை கிடையாது. அப்படி இருக்கையில் பேய், பூதம் படம் பண்றதுல எனக்கு ஆரவமில்லயே சார்’னு சொன்னேன். `இது பயமுறுத்தும் பேய் கிடையாது. காமெடிப் பேய். ஆவி, ஆத்மா மாதிரியான விஷயம். அதுவும் லைட்டாத்தான் தொட்டிருக்கோம்’னு சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணினார். சமீபத்துலதான் படம் பார்த்தேன். இப்போ உள்ள ட்ரெண்டுக்கு ஏத்தமாதிரி படம் சரியா இருந்துச்சு.’’

"தாத்தா நிச்சயம் மீண்டுவருவார்!”

‘‘ஆன்மா, ஆத்மானு சொல்றதைப் பார்த்தா இப்ப உள்ள அரசியல் சூழலையே படமா பண்ணியிருக்கீங்களோ?’’

‘‘ஐயய்யோ... இது இப்ப நடக்குற ஆத்மாங்க. எங்க ஆத்மா ஆறேழு மாசத்துக்கு முன்னாடி ரெடியானது. தவிர, இந்தப் படத்தில் ஆத்மா மட்டுமில்ல. கொஞ்சம் அரசியலும் இருக்கு. கதைப்படி சூரி, ஹீரோயினோட தாய்மாமன். அவர் அவசரத்தில் ஓர் அரசியல் கட்சி ஆரம்பிச்சு படுற அவஸ்தைகள்தான் கதை.’’

"தாத்தா நிச்சயம் மீண்டுவருவார்!”

‘‘படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கேனு இரண்டு ஹீரோயின்கள்... என்ன சொல்றாங்க?’’

‘‘ரெஜினாதான் மெயின் ஹீரோயின். அவங்கதான் படம் முழுக்க வருவாங்க. ஸ்ருஷ்டிக்கு கெஸ்ட் ரோல். திரும்பின பக்கமெல்லாம் ஸ்டார்கள் தெரிவதுதான் எழில் சாரின் பெரிய பலம். அப்படி இந்தப் படத்தில் யோகிபாபு, ரோபோ சங்கர், ரவி மரியா, மன்சூர் அலிகான், ராபர்ட் ராஜசேகர், லிவிங்ஸ்டன், `கும்கி’ அஸ்வின்னு நிறைய நடிகர்கள் இருக்காங்க. இமான் சாருடன் இது எனக்கு முதல் படம். செம மாஸ் பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கார்.''

"தாத்தா நிச்சயம் மீண்டுவருவார்!”

‘‘தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?’’

‘‘தயாரிப்பாளர் சங்கத்தில் 1,128 உறுப்பினர்கள் இருக்காங்க. ஆனா, ஆக்டிவ்வா இருக்கிறது சிலர்தான். இவர்களில் பெரும்பாலானவங்க ஹீரோக்கள். இவர்களைத் தவிர, படங்கள் எடுக்கும் பரபரப்பிலிருந்து ஒதுங்கி இருக்கிற மற்ற தயாரிப்பாளர்கள் யாருக்கு ஓட்டு போடுறாங்கங்கிறதுதான் ரொம்ப முக்கியம். விஷால் அணி வந்தால் நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். ஆனா, யார் வந்தாலும் என்னைத் தள்ளிவெச்சுப் பார்ப்பாங்க என்பதுதான் உண்மை. காரணம், அரசியல்.’’

‘‘தாத்தா கலைஞர் எப்படி இருக்கார்?’’

‘‘கொஞ்சம் கொஞ்சமா குணமாகிட்டு வர்றார். டிரக்யாஸ்டமி பண்ணியிருக்கிறதால பேச சிரமப்படுறார். ஸ்பீச் தெரபிக்கு தினமும் ஆட்கள் வர்றாங்க. டிவி பார்க்கிறார். நாம பேசினா அதுக்கு ரெஸ்பாண்ட் பண்றார். பேசணும்னு நினைக்கிறார். ஆனா, முடியலை. கடுமையா உழைச்ச மனிதர். நிச்சயம் மீண்டுவருவார். வரணும்.’’