Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

``ஊழல் வழக்கில், தலைவரை கூண்டோடு அரெஸ்ட் பண்ணிட்டாங்க!''

``அப்புறம்?''

`` `நீதி கேட்டு சிறை நிரப்பும் போராட்டம்'னு அறிவிச்சுட்டார்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

``தலைவருக்கு என்ன சந்தோஷம்?''

``மீம்ஸுக்கேத்த முகம்னு யாரோ சொல்லிருக்காங்க!''

 -அம்பை தேவா

ஜோக்ஸ் - 3

``எதிரி நாட்டு மன்னனும் உங்களைப்போல் பதுங்குகுழியில்தான் இருப்பான்போல!''

``எதை வெச்சு சொல்றீங்க தளபதியாரே?''

``போன் போட்டால் `நாட் ரீச்சபிள்'ன்னு வருதே!''

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

ஜோக்ஸ் - 3

``ஜெயில்ல தலைவர் தூங்க மாட்டாரா... ஏன்?''

``தூக்கத்துல உண்மையை உளறிடுவாராம்!''

- தஞ்சை தாமு

ஜோக்ஸ் - 3

``உனக்கு அதிகாலை அஞ்சு மணிக்கு தூக்கு.''

``ஹா ஹா ஹா!!!''

``ஏன் சிரிக்கிற?''

``நான் எந்திரிக்கவே பத்து மணி ஆகுமே!''

ஜோக்ஸ் - 3

``அரசியல்வாதியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது பெரிய தப்பாப்போச்சு.''

``ஏன்... என்ன பண்ணாரு?''

``ஏதாவது சண்டை வந்துட்டா, கோவம் குறைய மெரினா பீச்சுக்குப் போய் தியானம் பண்ண ஆரம்பிச்சுடுறாரு.''