Published:Updated:

"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”

"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”
பிரீமியம் ஸ்டோரி
"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”

ஆர்.வைதேகி

"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”

ஆர்.வைதேகி

Published:Updated:
"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”
பிரீமியம் ஸ்டோரி
"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”
"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”

`ஓ காதல் கண்மணி', `காற்று வெளியிடை' என மணிரத்னத்தின் அடுத்தடுத்த படங்களுக்கு கலை இயக்குநர் யார் தெரியுமா? ஷர்மிஷ்டா ராய் என்கிற பெண். ஏராளமான பாலிவுட் சூப்பர் ஹிட் படங்களின் கலை இயக்குநரான ஷர்மிஷ்டா ராயை, தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் மணிரத்னம்.

`` `தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே', `தால்', `குச் குச் ஹோத்தா ஹய்' என 50 படங்கள் இந்தியில் பண்ணிட்டேன். என் படங்களைப் பார்த்துட்டுத்தான் `ஓகே. கண்மணி'யில் கலை இயக்குநரா வேலை பண்ணும்  வாய்ப்பைக் கொடுத்தார் மணி சார். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாப் பார்க்கிற மணி சாரோட ஸ்டைலும் அவரோட அர்ப்பணிப்பும் சினிமாவை வேறொரு கோணத்தில் பார்க்க எனக்குக் கத்துக்கொடுத்துச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”
"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”

யார்கிட்ட எந்த வேலையை ஒப்படைக்கலாம்னு தெரிஞ்சவர். அப்படி அவர் தேர்ந்தெடுத்துப் பண்ற நபர்கிட்ட தன்னோட எதிர்பார்ப்பை விளக்கமாச் சொல்லி, வேலையை ஒப்படைச்சுடுவார். அதன் பிறகு அந்த வேலையில் குறுக்கிடவே மாட்டார். அவர் நம் மேல் வைக்கிற அந்த நம்பிக்கையே வேலையை நல்லா பண்ண வெச்சுடும். என்னோட பெஸ்ட்டை `காற்று வெளியிடை'யில் கொடுத்திருக்கிறேன்.''

"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”

``தமிழ் சினிமா அனுபவம் எப்படி இருக்கு?''

``மொழி, எனக்குப் பிரச்னை இல்லை. `காற்று வெளியிடை' களமே வேற. ஜம்மு-காஷ்மீரின் லே, லடாக் பகுதிகள்லதான் பெரும்பாலான காட்சிகளை ஷூட் பண்ணினோம். அந்தச் சூழல் எனக்குப் புதுசு. காஷ்மீர் பனிமலை, போர்விமான ஆக்‌ஷன் காட்சிகள்னு காட்சிக்குக் காட்சி சவாலான அனுபவமா இருந்தது. மணி சாரோட படங்கள்ல ஒளிப்பதிவுக்கு இணையா கலை இயக்கமும் பேசப்படும். மணி சார் படங்கள்ல வேலைபார்த்த அனுபவம், என்னை இன்னும் பட்டை தீட்டியிருக்கிறதா ஃபீல் பண்றேன்.''

"நம்பிக்கையே வேலையை நல்லா பண்ணவெச்சுடும்!”

``பெண்கள் சினிமாவில் பெரும்பாலும் இயக்குநர், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங் என்றுதான் இருப்பார்கள். நீங்கள் எப்படி கலை இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?''

``என்னோட அப்பா சுதேந்து ராய், இந்தியில்  பிரபலமான கலை இயக்குநர். பிமல்ராய், யாஷ் சோப்ரா, சுபாஷ் கய் உள்பட பல ஜாம்பவான்கள் கூட வேலைபார்த்தவர். வீட்ல க்ரியேட்டிவிட்டிக்கு நிறைய மதிப்புக் கொடுப்பாங்க. நிறைய சுதந்திரம் இருந்தது. இன்டீரியர் டிசைனிங்ல பாலிடெக்னிக் படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு உதவியா சில வேலைகள் பண்ணிகொடுக்க, எனக்கும் சினிமா ஆர்வம் வந்தது.  என்னோட சில ஐடியாக்களைப் பார்த்துவிட்டு யாஷ் சோப்ரா, கரண் ஜோஹர், மகேஷ் பட், ராமாநாயுடுனு பெரிய பெரிய இயக்குநர்கள்கிட்ட இருந்து வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.

உண்மையைச் சொல்லணும்னா, சினிமாவில் பெண்களுக்குச் சரியான துறை கலை இயக்கம்தான். ஏன்னா, இயல்பிலேயே கலை உணர்வு பெண்களுக்குத்தான் அதிகம். நிறைய பெண்கள் கலை இயக்கத்துக்கு வரணும். வழிகாட்ட நான் ரெடி!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism