Published:Updated:

கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்

கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்

கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்

கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்

கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்

Published:Updated:
கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்
கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்

ல்லா மிருகங்களையும் பார்த்துவிட்ட தமிழ் சினிமாவுக்குப் புதுவரவு வாஸ்து மீன்.

தொட்டது எதுவுமே துலங்காத பேட்லக் பாண்டிதான் சிபிராஜ். காதலி ஐஸ்வர்யா ராஜேஷை வீட்டை மீறி கைப்பிடித்து, தனிக்குடித்தனம் வருகிறார். வாஸ்து மீன் ஒன்றை வளர்க்கும் `மைம்' கோபி பெரிய ரெளடி. தனது எல்லா வெற்றிகளுக்கும் அந்தக் கட்டப்பாதான் காரணம் என நம்புகிறார். அந்த ஸ்பெஷல் கட்டப்பா, ரெளடியிடமிருந்து பேட்லக் பாண்டிக்கு ஜம்பிங்கு ஜபாங்கு ஆகிறது. கூடவே அதிர்ஷ்டமும் இடம் மாறியதா என்பதே கதை.

கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிபிராஜுக்கு எந்தச் சிரமும் இல்லை. ஸ்பாட்டுக்கு வந்து டயலாக் கேட்டு நடித்தால் போதும் என்கிற கேரக்டர். சிரிப்புகளைச் சிறப்பாகவே டெலிவரி செய்திருக்கிறார். படத்தின் கலகல ஏரியாவுக்குப் பொறுப்பு ஐஸ்வர்யா ராஜேஷ்தான். கிளாமரிலிருந்து காமெடி வரை அசால்ட்டாக அடி தூள் கிளப்பியிருக்கிறார் ஐஸ். ஒரே சீன் வந்தாலும் வெடிச்சிரிப்பு வரவைக்கிறார் யோகிபாபு.  இரண்டாம் பாதி காமெடி ஏரியாவுக்கு, காளி வெங்கட் பொறுப்பு. ஆனால், ஐஸ்வர்யா தொடங்கி பிரதான கேரக்டர்கள் அத்தனை பேரும் கெட்டவார்த்தைகள் பேசுகிறார்கள், இரட்டை அர்த்தம் அல்ல. நேரடியாகவே ஆபாச காமெடிகள். படத்துக்கு எப்படி ‘யு’ சர்ட்டிஃபிகேட் தந்தது சென்சார்?

மீனின் பெயர் கட்டப்பா. மற்ற எல்லோருக்கும் பாண்டியன், கயல் என மீன் தொடர்பான பெயர்கள். இவ்வளவு யோசித்த அறிமுக இயக்குநர் மணி சேயோன், கொஞ்சம் கதைக்கும் யோசித்திருக்கலாம். தொட்டிமீனைப்போல நோக்கமே இல்லாமல் அலைகிறது திரைக்கதை. ஆங்காங்கே `களுக்' என சிரிக்கவைக்கும் காமெடி மட்டுமே போதுமா?

கட்டப்பாவ காணோம் - சினிமா விமர்சனம்



சிபிராஜின் வீட்டுக்கு வரும் வில்லன்கள் குழு, சிபியையும் ஐஸ்வர்யாவையும் ஹவுஸ் அரெஸ்ட் செய்கிறார்கள். அடுத்த நாள் ஐஸ்வர்யா, இன்டர்வியூ போகிறார். சிபி, பணத்தைத் தேடிப் போகிறார். இதுதான் ஹவுஸ் அரெஸ்ட்டா... அதுவும் ஏழரை நாள்? சிபியின் அப்பா, ஐஸ்வர்யாவின் அம்மா என ஏகப்பட்ட கேரக்டர்கள் பாதியிலே காணாமல்போகின்றன. அரை டிராயரில் வந்து சிபியின் வீட்டில் கிரிக்கெட் பார்த்துவிட்டுப் போகிறார் சாந்தினி. அவ்வளவு பக்கத்தில் குடியிருக்கும் அவரை, முதல் காட்சியில் அடையாளம் தெரியாமல் முழிக்கிறார் சிபி.

பின்னணி இசையில் திரும்பிப் பார்க்கவைக்கும் சந்தோஷ் தயாநிதி பாடல்களில் திரும்பிக்கொள்ள வைக்கிறார். தொட்டியில் இருக்கும் மீன்கூட பாப்கார்ன் வாங்க வெளியே ஜம்ப் ஆகிறது. ஒளிப்பதிவாளர் ஜீவா நிறைவு.

வாஸ்து மீனை இன்னும் கொஞ்சம் பார்த்து வளர்த்திருக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism